குழந்தை பால் குடிப்பதில் பிரச்சனை:

அன்பு தோழிகளே,
அடுத்த வாரத்துடன் என் குழந்தைக்கு 4 மாதம் முடிகிறது இப்பொழுது 1 வாரமாக எனக்கு 1 பிரச்சனை உள்ளது.என் மகள் என்னிடம் 2 நிமிடங்கள் தான் பசிக்கும் போது பால் குடிக்கிறாள்,அதன் பிறகு குடிக்க மாட்டேங்குறாள்,கட்டாயபடுத்தினாலும் குடிப்பதில்லை,சிறிது நேரத்திலேயே திரும்பவும் அழத்தொடங்குறாள் திரும்பவும் அதே கதைதான்.
அதே சமயம் பவுடர் பால் மட்டும் கொடுக்கும் பால் முழுவதும் குடிக்கிறாள், 10 நாட்களுக்கு முன்பு வரை ஒழுங்காகதான் குடித்தாள்,ஆனால் இரவில் தூங்கும்போது,பகலில் தூங்கும்போது, தூக்க கலக்கத்தில் ஒழுங்காக குடிக்கிறாள்,10 நாட்களாக அவள் விரல் சப்புவதை நிறுத்த நிப்பிள் உபயோகித்தேன்,நிப்பிலால்தான் பால் குடிக்கவில்லை என்று 3 நாட்களாக நிப்பிலை குடுக்க வில்லை.
பால் சரியாக வரவில்லை என்றால் குழந்தைகள் இப்படி செய்வார்களா?அல்லது இப்பொழுது வேறு ஏதும் உணவு குடுக்கலாமா?குழந்தை ஒலுங்காக தாய் பால் குடிக்க என்ன செய்ய வேண்டும்

மஞ்சு,
முதல் 4 மாதத்திற்கு கட்டாயம் தாய்பால் மட்டும் தான் தர வேண்டும். நீங்க Dr.ரை கேட்டுதான் பால்பவுடர் கொடுத்தீங்களா?.
பவுடர்பால் குடிக்கும் குழந்தைங்க தாய்பாலை அதிகம் விரும்பமாட்டங்க அப்படினு சொல்வாங்க.
சில குழந்தைங்க கொஞ்ச நேரம் குடித்தாலும் ,அவங்களுக்கு தேவையான அளவு குடிப்பாங்க. ஆனாலும் முக்கியமான 4 விஷயம் பார்த்துக்கோங்க,
1. ஒரு நாளைக்கு 6 (அ)7 தடவை (குறைந்தபட்சம்) சிறுநீர் செல்லவேண்டும்.
2. Yellow color and paste போல் motion செல்லவேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை to 6 நாட்களுக்கு ஒரு முறை வரை மலம் கழிக்கலாம்.
3.ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 16 மணி நேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து அழாமல் நல்லா விளையாட வேண்டும்.
4.எடை சரியான அளவு இருக்கவேண்டும்.

மஞ்சு

தாய் பாலும், செயற்கை ரப்பர் தருவதினால் சில பிரச்சனை வரும். தயவு செய்து செயற்கை ரப்பர் தருவதை நிறுத்தாதீர்கள்.மாறாக தங்கள் பாலை pump பண்ணி பாட்டிலில் தாருங்கள். Pump செய்யும் பொழுது தாய்ப் பாலின் அளவும் தெரியும். குழந்தை குடிக்கும் அளவும் புரியும்.
என்னுடைய குழந்தைக்கு எட்டு மாதம். செயற்கை ரப்பரை வாயில் வைப்பது இல்லை. தாய் பால் மட்டும் நானே புகட்டியதால் வந்தது. ஒரு நாள் முழூவதும் பட்டினி கிடப்பாள் ஆனால் பாட்டிலில் பால் குடிக்க மாட்டாள். இதனால் இரவில் சரியான உறக்கம் கிடையாது. இபொழுது ஸ்பூனில் தருகிறேன்.

,
கமலி மேலே நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் என் குழந்தைக்கு சரியாக உள்ளது,அவள் தினமும் மோஷன் 1 அல்லது 2 தடவை நன்றாக இருந்துவிடுவாள்,மற்றது எதுவும் பிரச்சனை இல்லை.என்னுடைய சந்தேகம் என்னிடம் பால் சரியாக சுரக்கிறதா இல்லையா?என்பதுதான்,குழந்தை பிறந்த முதல் வாரத்தில் பால் போதிய அளவு இல்லாததால் தான் டாக்டர் பவுடர் பால் குடுக்க சொன்னதால் அதை குடுத்தேன்,பிறகு பால் நன்றாக சுரக்க ஆரம்பித்ததும்,பவுடர் பாலை நிறுத்திவிட்டேன்,தேவைபடும் போது மட்டும் கொடுத்தேன்.
இப்பொழுது பால் குடித்தாலும் தொடர்ந்து சில நேரங்களில் அழுகிறாள் மீண்டும் பவுடர் பால் குடுத்தால் குடிக்கிறாள்.
பால் சுரப்பு குறைந்திருந்தால்,அதை மீண்டும் அதிகரிக்க செய்ய முடியாதா?
நான் தினமும் 4 டம்ளர் ஹார்லிக்ஸ் குடிக்கிறேன்,ஆனாலும் பால் அதிகமாக சுரக்கவில்லை,இனி அதிகம் சுரக்க வாய்ப்பு இருக்கிறதா?பூண்டு தினமும் சேர்க்கிறேன்,வேறு என்ன செய்ய வேண்டும்

///பால் சுரப்பு குறைந்திருந்தால்,அதை மீண்டும் அதிகரிக்க செய்ய முடியாதா?///
http://arusuvai.com/tamil/node/21062

KEEP SMILING ALWAYS :-)

என் பையனுக்கு நாளையுடன் 30 நாள் ஆகிரது... தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கிறேன்... அவன் பால் குடித்த உடனேயே, குடிக்கும் போதே சிறுநீர் கழித்து விடுகிறான்.. பிறகு உடனே பசிக்கு அழுகிறான்... இது போல் 3 அல்லது 4 முறை ஆன பிறகே தூங்குகிறான்... தூக்கத்தில் ஒரு முறை அல்லது 2 முறை தான்... இது அவனுக்கு பால் பற்றாததின் அறிகுறியா? தண்ணீர் இப்போது கொடுக்கலாமா?

30 நாள் ஆனா குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும்தான் ,தண்ணீர் கொடுக்க கூடாது. பால் குடிக்குபோது சிறுநீர் (அ) மலம் செல்வது இயல்பானதே . இந்த வயதில் அடிக்கடி பால் புகட்ட வேண்டும் ,இரவில் குழந்தை தூங்கி விட்டாலும் நீங்களாகவே 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேணும் . எனக்கு தெரிந்த வரையில் இது பால் பற்றா குறையில்லை ,பயப்பட வேணாம் . இது பற்றி நன்கு தெரிந்த தோழிகள் பதில் தருவார்கள் . முதலில் இது போல் மனதை குழம்பி கொள்ளாதிர்கள்.

பால் குடித்த உடனே சிறுநீர் கழிப்பதால் சத்துக்கள் அவன் உடலில் சேருமா என்ற பயம் தான்... அவன் விழித்து கொன்டு இருக்கும் நேரத்தில் பாதி நேரம் பால் தான் குடித்து கொண்டு இருப்பான்.. இப்பொது கூட அவனுக்கு வேண்டிதான் விழித்து கொண்டு இருக்கிறேன்... பதிலுக்கு மிக்க நன்றி...

குழந்தை பிறந்து முப்பது நாள் தானே ஆகிறது. உங்களுடைய உடலிற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் குழந்தையின் பால் அளவை புரிந்து சுரப்பதற்கு. அது வரையில் இது டிமான்ட் அண்ட் சப்ளை முறை தான். குழந்தை பால் குடிக்கும் போதே சிறுநீர் கழிக்கிறார் என்றால் அதுவே ஒரு நல்ல அறிகுறி குழந்தைக்கு போதிய அளவில் பால் கிடைக்கிறது என்பதற்கு. ஒருவேளை அவருக்கு ஈரம் தாங்காமல் அழுகிறாரோ என்னமோ. நீங்கள் அவரின் நாப்பியை மாற்றிவிட்டு பால் புகட்டுங்கள். சில குழந்தைகள் இப்படி தான் செய்வார்கள்...அழுது அழுது இரு சில நிமிடங்கள் இடைவெளி விட்டு ஒருமணி நேரமவாது குடித்துக் கொண்டே இருப்பார்கள். இதை கிளஸ்ட்டர் பீடிங் என்று சொல்லுவார்கள். பிறகு அடித்துப் போட்ட மாதிரி நான்கு மணி முதல் ஐந்து மணி வரை தூங்குவார்கள். இது ஒரு பிரச்சனையே இல்லை. இரவில் குழந்தை இரண்டு முதல் நான்கு மணி நேரம் கூட பால் இல்லாமல் தூங்கலாம். தவறில்லை. நான்கு மணி நேரம் ஆகியும் எழவில்லைஎன்றால் எழுப்பலாம். தாய்பாலில் எல்லா சத்தும் உள்ளது அதனால் நீங்கள் குழந்தைக்கு தாய்பால் தவிர வேற எதுவுமே இப்பொழுது தரவேண்டாம். சில குழந்தைகளுக்கு நான்கு மாதத்தில் சில குழந்தைகளுக்கு (அவர்களின் வளர்ச்சியை பொருத்து மருத்துவர் சொல்லுவார்) ஆறு மாதத்திலிருந்து மாற்று உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். பால் பற்றவில்லைஎன்று ஒரு பொழுதும் தீர்மானிக்காதீர்கள். இரும்பு சத்து அதிகமுள்ள உணவை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப நன்றி இப்ப தான் கொஞ்சம் தெளிவாயிருக்கிறேன்... குழந்தைக்கு மூக்கு அடைத்து கொண்டு இருப்பது போல் மூச்சு விட சிரமப்படுகிறான்.. டாக்டர் கொடுத்த spray வை சொட்டு போல மூக்கில் விடலாமா.. spray செய்தால் கீழே ஒழுகி விடுகிறது... சொட்டு போல விடுவதால் புரை ஏறி விடாதா?

குழந்தைக்கு மூக்கடைப்பது சகஜம் தான். அதிகம் சலைன் ட்ராப்ஸ் மாதிரி கொடுக்க வேண்டாம். பால் புகட்டும் ம்முன் இரண்டு சொட்டு தாய்பால் எடுத்து குழந்தையின் மூக்கின் துவாரத்தில் விடவும். இரண்டு சொட்டு எடுத்து மூக்கின் மேல் தடவவும். கபம் கட்டியிருந்தால் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை சூடு செய்து அதில் ஒரு துளி கற்பூரம் சேர்த்து கரைத்து மிதமான சூட்டில் நெஞ்சில் முதுகில் தொண்டையில் தடவி விடவும். அது சளியை கரைத்து விடும். குழந்தைக்கு தளிக்கு ஊத்திய பின்னர் சில துளி தாய் பாலில் இரண்டு சொட்டு துளசி சார் சேர்த்து சங்கில் கொடுக்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்