கழுத்து வலி உதவுங்க

எனக்கு 6மாதமாக கழுத்து, சோல்டர்,இடது பக்கம் வலிக்கிறது,,தைலம் ட்தேய்தும் சரிஆகல...கம்பியூட்டரில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே வந்து விடுகிறது..எப்படி சரி செய்வது?நேராக்த்தான் உட்கார்ரேன்...இந்த ஊரில் நிறய பேர் இப்படி சொல்கிறைகள் என்ன பயிற்சி செய்வது?

ம்ம்ம்... உங்களுக்கு இடப்பக்கம், எனக்கு வலப்பக்கம். ;( நானும் என்னென்னவோ செய்து பார்த்துட்டேன்... எல்லாம் டெம்பரரி சொலுஷனா தான் இருக்கு. நிரந்தர தீர்வு கேட்டா உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதுக்கும் உங்க வலிக்கும் சம்மந்தம் இருக்கோன்னு தெரியாது சமீபத்தில் ரொம்ப கழுத்து வலியால் அவதிப்பட்ட என் உறவினர் ஒருவருக்கு கடைசியாக ப்ல்ட் டெஸ்டில் வைட்டமின் டி சத்து குறைவு என்று தெரிந்து ஊசி மூலம் போட சொன்னாங்க அதன் பின் வலி பரவாயில்லை என்கிறார்

தளிகா... ஹிஹிஹீ. எனக்கும் அதே தான் சொன்னாங்க. ஆனா அது ரொம்ப நாள் கை கொடுக்கல :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks,pa vali thaanga mudila

நீங்க தளிகா சொன்ன மாதிரி ப்ளட் டெஸ்ட் எடுத்து பாருங்க. வைட்டமின் குறைபாடு இருக்கா என்று செக் செய்து பாருங்க.கால்சியம்,அல்லது வைட்டமின் டி ,வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் டேப்லேட் டாக்டர் இடம் கன்சல்ட் செய்து எடுத்தால் சரி ஆகிவிடும் பா.நீங்க கால்சியம் இருக்கும் உணவு அதிகமா எடுத்து கொள்ளுங்க.
தினமும் காய்கறி ,ப்ரூட்ஸ் ,நட்ஸ் சேர்த்து கொள்ளுங்கள். சோல்டர்க்கு சிம்பிள் உடற்பயிற்சி வலி வராத மாதிரி செய்யுங்க.

இது விடாது கருப்புங்க. Physio therapist டிடம் செல்லுங்கள். விட்டால் சிறிது மயக்கம்/தடுமாற்றமும் வரும். அனுபவத்தில் சொல்கிறேன். கழுத்து பயிற்சியின் மூலம் கட்டுபடுத்தலாம், ஆனால் குணப்படுத்த முடியாது.Youtube/google சில கழுத்து பயிற்சி பார்க்கலாம்

அதே அதே ..அப்படி தான் கழுத்து வலின்னு சொல்லிட்டிருந்தவங்க திடீர்னு தடுமாற்றி நிக்க முடியாத மாதிரி ஆகிட்டாங்க கொஞ்ச நாளைக்கு..எலும்பு தேய்மானம் என்றும் சொல்றாங்க.இவங்க சொன்ன மாதிரி பயிற்சி தான் தொடர்ந்து மூனு மாசம் ரெஸ்ட் நல்ல மாற்றம் தெரியுதுன்னு சொல்றாங்க..நான் என்ன வலியாஇருந்தாலும் நல்ல நல்லெண்ணை தேச்சுட்டு சுட சுட தண்ணியடிச்சு கழுவுவேன் போயே போச்சு.என் பேச்சை கேட்டு சுடுதண்ணியை முதுகுல வேக வச்சுட்டு வந்து கேக்கக் கூடாது சொல்லிட்டேன்

தோழி..ரியாசா...

உயரம் குறைவான அல்லது தலையணை இல்லாமல் தூங்கலாம்.உயரமான தலையணை பயன்படுத்தினாலும் கழுத்துவலி வரும்.
கவிதாசிவகுமார்.

anbe sivam

எனக்கும் கீழே விழுந்ததால் ஏற்பட்ட கழுத்து வலி,கையை தூக்க,பின்பக்கம் கொண்டு போகன்னு முடியாமல் நான்கு வருடங்கள் முன்பு, ஒரு 6 மாதம் கஷ்டப்பட்டு அவதிப்பட்டேன்.x ray,scan என்று எல்லாம் பார்த்து விட்டு,physiocare எல்லாம் செய்து முடியாமல்,சித்தா,ஹோமியோபதி என்று எதுவும் முடியாமல் இறுதியில் ஒரு steroid injection தோல்பட்டையில் போட்டாங்க,அப்புறம் சரியாயிடுச்சி.ரொம்ப முடியாத பட்சத்தில் டாக்டரின் ஆலோசனையில் பேரில் இந்த இஞ்செக்‌ஷன் போட்டால் சரியாகிடும்.

சும்மா Strain பண்ணியதால் வந்த கழுத்து வலி என்றால் ரெஸ்ட் ப்ளஸ் விட்டமின் டேப்லெட்ஸ் எடுத்து பாருங்க.கழுத்து வல்யினால் எப்பவும் என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டேயிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.அந்த வேதனை எப்படியிருக்கும்னு எனக்கு நன்றாக தெரியும்,இது என் அனுபவம்.பயப்படாமல் டாக்டரை கன்சல்ட் செய்யுங்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கழுத்து வலி வந்தால் சரிய தூங்க கூட முடியாது.
எனக்கும் நீண்ட நாள் இந்த பிராப்ளம் இருந்தது,
ஓவர் டென்சன் ஆனாலும் கழுத்து வலி வரும்.
ரொமப் கழுத்துக்கு தலையனை வைக்காமல் டர்கி டவலை தலையனை போல மடித்து தான் வைத்து படுப்பேன்.
பாட்டி மார்கள் அரிசி அளக்கும் அரை படி யை கழுத்துக்கு வைத்து படுக்க சொன்னார்கள்.

கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தில் தைலமோ ஆயிண்ட் மெண்டோ அழித்தி தேய்க்க கூடாது.அது இன்னும் வலி யை அதிகரிக்கும்.
இது குளிர் காலம் தான் அதிகமாக வரும் காதில் கழுத்தில் குளிர்ந்த காற்று படமா பார்த்துக்கங்க. இரவு படுக்கும் போது காது கழுத்து மூடி உள்ளபடி மவ்லர் பயன் படுத்தினால் நல்லது.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்