2 வயது குழந்தைக்கு கற்று கொடுப்பது குறித்து உதவி...ப்ளீஸ்...

ஹாய் தோழிகளே..
என் பையன் ரகுநந்தா க்கு 2 வயது முடிந்து 2 மாதம் ஆகிறது..அவனுக்கு இனி நிறைய கத்து கொடு அப்படின்னு சொல்லராங்க.. 5 மாதமாவே ABC , அ,ஆ எல்லாம் சொல்லுறன்..ஆனா நாம் சொன்னால் அதை அப்படியே திருப்பி சொல்லறான்..இன்னும் பாத்து சொல்லி கொடுக்கலை..ஒரு முறை சொன்னாலே டக்குனு புடிசுக்காரன்..தெளிவாகவும் பேசறான்.அவனுக்கு எப்படி என்ன என்ன சொல்லி கொடுப்பது.எதாவது லிங்க் இருக்கா.ப்ளீஸ் எதாவது சொல்லுங்க..கேள்வில எதாவது தப்பு இருந்த சொல்லுங்க..மாத்திடறேன்.

யாரவது ப்ளீஸ் சொல்லுங்கபா. அல்லது ஏற்கனவே இது போல இழை இருந்தால் லிங்க் தாங்க ப்ளீஸ்..

SaranyaBoopathi

சரண்யா.... இரண்டே வயது ஆன குழந்தை என்பதால் நீங்க அதிகமா சொல்லி கொடுக்க முயற்சி செய்யாதீங்க. பொதுவா இந்த வயது குழந்தைகளூக்கு படங்களோடு கூடிய புத்தகங்களை வாங்கி படத்தில் உள்ளவற்றையும் கீழே இருக்கும் அதன் பெயரையும் சொல்லி கொடுக்கலாம். ஆர்வமாக படிப்பார்கள். முதலில் படம், பின் படத்தின் பெயர் தான் பதிவாகும், பின் அந்த பெயரின் எழுத்தின் வடிவம் என எல்லாம் ஒவ்வொன்றாக பதிய ஆரம்பிக்கும்.

புத்தகம் இல்லாத வழி ஒன்று போர்ட் கேம்ஸ் எனப்படும் விளையாட்டாக கற்றுக்கொடுக்கும் முறை. அதில் எழுத்துகள், எண்கள், பழங்கள், காய்கள், பொருட்கள் என எல்லாம் கிடைக்கும். அதை வாங்கி அந்த அந்த இடத்தில் அதை சொல்லி கொண்டே ஃபிக்ஸ் செய்ய பழகலாம். தன்னால அது மனதில் பதிந்து விடும்.

பழங்களின் பெயர்கள், காய்களின் பெயர்கள் எல்லாம் சாப்பிட கொடுக்கும் போதே சொல்லி கொடுங்க. ஷேப்ஸ், கலர்ஸ் போன்றவை சொல்லி கொடுங்க. கவுன்டிங் சொல்லி கொடுங்க. எத்தனை வேண்டும் என விரலால் காட்டி கேட்க பழகுங்க. இதெல்லாம் உட்கார்ந்து சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை... தினம் தினம் விளையாட்டு, உணவு போன்றவற்றில் தாமாகவே கற்று கொள்ளும் விஷயம். கொஞ்சம் மெனகிட்டு நாம் சொல்லி சொல்லி பழகினால் விரைவாக கற்று கொள்வார்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிக்கா..
கண்டிப்பா உங்க பதில் வரும்னு நினைச்சேன்.. இப்போவே சில பழங்களோட பேர் சொல்லறான்.அவனே ஒன்னு வேணுமா ரெண்டு வேணும்னு கை விரல் காட்டி சொல்லறான்.. இனியும் இதே போல சொல்லி கொடுக்கறேன்... அப்றோம் இன்னும் ஒன்னு உங்க கிட்ட சொல்லணும்,,அண்ணா கல்யாணத்துக்கு என் பையனுக்கு பட்டு வேஷ்டி தைச்சு போட்டு விட்டேன் ...ரொம்ப அழகா வந்து இருந்தது..இது பத்தி ஒரு தடவை கேட்டேன்..அதுலயும் நீங்க தான் எனக்கு பதில் சொன்னிங்க
நல்லா இருக்கும் அப்டின்னு சொன்னிங்க..அதே போல ரொம்ப நல்லா இருந்தது...அப்போவே உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்,,தேங்க்ஸ் அக்கா..அறுசுவைக்கும் தேங்க்ஸ்..என்னுடைய சந்தேகங்கள் சிலத கேட்டு
தெளிவாக அறுசுவை ஹெல்பா இருக்கு..தேங்க்ஸ்...

SaranyaBoopathi

குட்டி குட்டி கதையையை புத்தகத்தில் காட்டி படத்தால் புரிய வைய்யுங்க இப்படி நிறங்கள்,மிருகங்கள்,எண் எல்லாம் பழகிடும்.

ஹாய் சரண்யா , உங்க பையனுக்கு உடல் உறுப்புகள் பற்றி சொல்லி தாங்க , எப்போதும் சுறு சுறுப்பாக, இருக்க ஏதாவது சொல்லி கொடுங்க ,

அன்பு சரண்யா... தாமதமா உங்க பதிவை பார்க்கிறேன் :) இங்க வந்த பிறகு பிசியா போகுது, நேரம் கிடைப்பதில்லை முன் போல். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.... குட்டிக்கு அழகா இருந்துதுன்னு நீங்க சொன்னது. கண்டிப்பா என்ன ட்ரெஸ் போட்டிருந்தாலும் குட்டிக்கு அழகா தான் இருக்கும், ஆனால் அதை என்னிடம் சொல்லனும்னு நினைச்சீங்க பாருங்க... அது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சியா இருக்கு. நன்றி சரண்யா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்