தேதி: December 7, 2011
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
விரும்பிய கருவாடு - 50 கிராம்
முட்டை - 4
சிறிய வெங்காயம் - 10
தக்காளி - 1
புளி - அரிநெல்லியளவு
பூண்டு -8-10 பல்
மிளகுத்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 2டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
நல்ல எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கருவேப்பிலை - 2இணுக்கு
உப்பு - சிறிது
முதலில் கருவாட்டை கழுவி சுத்தம் செய்து கழுவி துண்டு போட்டு எடுத்து கொள்ளவும்.முட்டையை அவித்து தோல் உரித்து வைக்கவும்.
மிக்ஸி கப்பில் மிளகுத்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,மஞ்சள்தூள்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,தேங்காய் துருவல் சிறிது தண்ணீர் சேர்த்து பட்டுப்போல் அரைத்து எடுக்கவும்.
அரைத்த விழுதை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.உப்பு சிறிது சேர்க்கவும்.புளிப்பு தேவைப்பட்டால் ஒரு கொட்டை புளி கரைத்து விடவும்.நன்கு கொதி வந்து மசாலா வாடை அடங்கியதும் கருவாடை போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதிவரவும் அவித்த முட்டையை நாலாபக்கமும் கீரியோ அல்லது பாதியாக கட் செய்தோ போடவும்.ஆணம் அவரவர் விருப்பப்படி கெட்டித்தன்மை வைத்துக் கொள்ளலாம்.
ஒரு தாளிப்பு கரண்டியில் நல்ல எண்ணெய் விட்டு காயவும்,கடுகு உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை,நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து கொதிக்கும் கருவாடு முட்டை ஆணத்தில் கொட்டி கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான கருவாட்டு முட்டை ஆணம் ரெடி.
குளிர்,மழைக்காலத்தில் வைத்து சாப்பிட ஏதுவான குழம்பு.குழந்தை பெற்றவர்களுக்கும் கொடுக்கலாம்.
Comments
ஆசியா அக்கா
கருவாடு முட்டை ஆணம் சூப்பர்.அந்த ஆணத்தோட படத்தை பார்த்தாலே ஆசையாக இருக்கு.கண்டிப்பாக செய்வேன்.நான் உங்கள் சமையல் குறிப்பு ஒவ்வொன்றையும் செய்து பார்த்து வருகிறேன்.எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது.நன்றி.JAZAKALLAHU KHAIRAN.
Tharifa.
mrs hanifa
கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.செய்து பாருங்க.உங்க டேஸ்டிற்கு தகுந்தபடி மசாலாவை அட்ஜஸ்ட் செய்தும் கொள்ளலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
aasia umar
Innniki unga recipe muttaikaruvadu aanam seiaporen.senjitu solren umar akka
ஆணம்.... ஆஹா, என்ன அருமையான
ஆணம்.... ஆஹா, என்ன அருமையான சொல்! இன்றும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைக்கவே புல்லரிக்கிறது. பள்ளியில் படிக்கும் பொழுது, வீட்டிற்கு வந்ததும், இன்றைக்கு என்ன ஆணம்மா என்று கேட்டு விட்டு தான் முடிவு பண்ணுகிறது இராத்திரிக்கு, எவ்வளவு சாப்பிடலாம் என்று.
இப்பொழுதெல்லாம், குழம்பு ஆகிவிட்டது. இதை பயன்படுத்த விரும்பாமல், சும்மா பொதுவா கேட்டு வைக்கிறது - இன்னைக்கு என்ன கறி? என்று. இது கூட, இப்பொழுது குழந்தைகளுக்கு, curry என்றாகி விட்டது. பேச்சு வழக்கில், பல நல்ல சொற்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
இணையம் தான் காப்பாற்ற வேண்டும்.
ஆசியாம்மா எப்படி இருக்கீங்க
ஆசியாம்மா எப்படி இருக்கீங்க உங்க ப்ளாக்ல இருந்துதான் இந்த குறிப்புக்கு வந்தேன் உங்க ப்ளாக்ல கருத்து பதிவு எப்படி பன்றதுன்னு எனக்கு தெரியல நம்ம ஊர்ல குழந்தை பெற்றவர்களுக்கு மிளகானம் எப்படி காச்சுவாங்கன்னு கொஞ்சம் சொல்லனும் உங்க குறிப்பில் புளி சேர்த்து செய்து இருக்கீங்க அந்த நேரத்துல 3 மாசம் புளி சேர்க்கமட்டாங்கதானெ
PERGANANT
Vanakam friends, enaku kalyanam agi 8 months, agudhu. Ippo 3 months,a consive,a iruken, vellaya varudhu idhu normal,a abnormala pls sollunka
Yenakkum appadithan irukku
Yenakkum appadithan irukku na 2 masam frd
கருவாடு முட்டை ஆணம்
உங்க கருவாடு முட்டை ஆணம் செய்தேன். நெத்திலி போட்டு செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. 4 நாளைக்கு முன்பே செய்தேன்.பதிவு போட தான் லேட் ஆயிருச்சி. நன்றி
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.