வெஜிடபிள் சூப்

தேதி: December 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (10 votes)

 

காரட் -அரை துண்டு
பீன்ஸ் - 3
கோஸ் - 25 கிராம்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
மைதா - 1 1/2டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -1/4 டீஸ்பூன்
சோளமாவு - 2 டீஸ்பூன் (சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்)
மிளகுத்தூள் - 1/2டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்


 

(1) காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.

(2) வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மைதாவைப் போட்டு லேசாக புரட்டிக் கொள்ளவும்.

(3) பிறகு 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதித்ததும் வேக வைத்த காய்கறிகள், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

(4) இதில் சோள மாவுக் கரைசல்,உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்தும் இறக்கவும்
மிளகுத் தூள் சேர்க்கவும்.வெஜிடபிள் சூப் ரெடி.


மேலும் சில குறிப்புகள்