சேனைக்கிழங்கு பொரியல்

தேதி: December 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

சேனைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய் பொடி - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

சேனையை சுத்தம் செய்து கொஞ்சம் தடிமனாக நீளவாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும். மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய விடவும். பின் நறுக்கி வைத்திருக்கும் சேனைக்கிழங்கை நீர் இல்லாமல் எண்ணெயில் மூழ்கும் அளவு கொட்டவும்.
சிறிது நேர இடைவெளி விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும்.
நிறம் மாறும் நேரத்தில் தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும். எண்ணெய் அதிகமாக இருப்பின் சிறிது வடித்து விடவும். நன்கு வெந்ததும் சிறிது மிளகாய் பொடி, புளி கரைசல் சேர்த்து கிளறவும்.
அதில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சுவையான சேனை பொரியல் தயார். சாம்பார், தயிர் மற்றும் வெரைட்டி ரைஸுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ம் அப்படியே சாப்பிடலாம் நல்ல டிஷ் எனக்கு பிடிச்சது பா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

செய்திருக்கும் வித்தத்தை பார்த்தாலே சாப்பிட தோனும்... அத்தனை நல்லா செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள். இங்கே கிடைச்சா கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இளையா காரசாரமான குறிப்பு வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹேய் இளையா சூப்பர் குறிப்பு :-) கண்டிப்பா செய்யப்போறேன்.. ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.. :-)

KEEP SMILING ALWAYS :-)

எளீமையா இருக்கு இளையா

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இளையா,
சேனைக்கிழங்கு பொரியல், குறைந்த பொருட்களைக்கொண்டு செய்முறை எளிமையா, சூப்பரா இருக்கு! அழகா செய்து இருக்கிங்க! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

இளையா, கன்னி முயற்சியா கருணைக்கிழங்கு பொரியல்? :) சேனைக்கிழங்கு வெள்ளையா இருக்குமே. ரொம்ப நல்லா செய்து காட்டியிருக்கீங்க. வாழ்த்துக்கள். நான் கருணைக்கிழங்கை ரொம்பவே மிஸ் பண்றேன். உங்க படம் என் ஏக்கத்தை அதிகமாக்கிடுச்சு இளையா ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இளையா அசத்துறீங்க போங்க. சேனைக்கிழங்கா பொரியல் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் பெஸ்ட் காம்பினேஷன் போல தெரியுது. ஈஸியான மெத்தடும் கூட இளையா. அசத்துங்க.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி

ரேணு எனக்கும் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

வனி அக்கா கிடைச்சதும் பண்ணிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி

ரேவா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

நாகா அக்கா மிக்க நன்றி செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தாங்க

அமீனா அக்கா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

சுஸ்ரீ மிக்க நன்றிங்க செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு

கல்ப்ஸ் அக்கா //கன்னி முயற்சியா கருணைக்கிழங்கு பொரியல்?// ஏன் கா இப்படி முடியல போங்க சேனை எனக்கு தெருஞ்சு இந்த கலர் தான் அக்கா வெள்ளை கல ல இருக்கானு தெரில இங்கருந்து கிழங்க பார்சல் பண்ணிடட்மா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா

யாழி அக்கா ரொம்ப ரொம்ப நன்றி by Elaya.G

சேனைக்கிழங்கு பொரியல் பார்க்க நல்லா இருக்கு................எனக்கு காரம் ரொம்ப பிடிக்கும்..............இதை நீங்க எனக்கு தந்தீங்கனா ஸ்னேக்சாவே சாப்டுவேன்.................வாழ்த்துக்கள்.............இனியும் உங்கள் சமையல எதிர்பார்க்கிறேன்

இதை பார்க்கும் போது நீங்கள் குண்டா இருப்பீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது ....
உங்கள் பதிலை எதிர் பார்கிறேன்

சிம்ரா வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

வர்ஷா உங்கள் யூகம் சரியே குண்டா தான் இருப்பேன் ஆனா சேனை பொறியல் சாப்பிட்ட தால இல்லைங்க தங்கள் வருகைக்கு நன்றி by Elaya.G

உங்களுடய குறிப்பை செய்து பார்த்தென்.... ருசி இன்னும் என் நாக்கிலெயெ இருக்கிறது... இது போன்ற குறிப்புகளை உங்களிடம் இருந்து அதிகம் எதிர் பார்க்கிறேன்..
உங்களை குண்டு சொன்னதற்கு என்னை மன்னிக்கவும் நானும் உங்களை போலத்தான்.......................

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி வர்ஷா