1 1/2 வயது குழந்தைக்கு பால்

நான் துபாயில் வசித்து கொண்டிருக்கிறேன் என் மகனுக்கு 1 1/2 வயது ஆகிறது, இதுவரை நான் formula milk (aptamil-3) தான் கொடுத்து வருகிறேன். இப்பொழுது நார்மல் milk கொடுக்கலாம் என நினைக்கிறேன் ஆனால் வெளியில் அழைத்து செல்லும் போது மட்டும் formula milk கொடுக்கலாம் என நினைக்கிறேன் இவ்வாறு இரண்டையும்(normal milk & formula milk) மாற்றி மாற்றி கொடுக்கலமா...

அல்லது normal milk-ஐ & other foods வெளியில் அழைத்து செல்லும் போது கொண்டு சென்றால் எப்படி கொண்டு செல்வது எவ்வலவு நேரம் வரை குழந்தைக்கு கொடுக்கலாம் என தெரிந்தவர்கள் கூறுங்களேன் தோழிகளே please..

குழந்தைக்கு ஒரு வயது நிரம்பியவுடனே நாம் அருந்தும் பாலே கொடுக்கலாம். கொழுப்பு நீக்கப்படாத பால் தரவேண்டும். ஒரு நாளைக்கு மொத்தமுமே 450 ml பால் மட்டுமே கொடுக்க வேண்டும். உங்கள் ஊரில் படபடுத்தப்பட்ட பால் விற்கிறதா என்று பாருங்கள். அது கிடைத்தால் அப்படியே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பாலை காய்ச்சி பிளாஸ்க்கில் எடுத்து செல்லுங்கள். கண்டிப்பாக நான்கு மணி நேரமாவாது இருக்கும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Nanum dubai la tha irukayn ga enoda son kum 11 month baby nega doctor kita advice kaytu kodukalm ninyakuran oru sila kuzhnthaigaluku formula milk tha othukum so nega athya tha continue panriga ana fresh milk kodutha cold athavthu pudikuma tharila so nega doctor kita suggestion panrthu tha nalathu ga nega valiya poganum apadi na formula milk onehour tha vachurukanum nu solluvaga nanu apadi veliya pona hot water and powder ellam kodutha povayn ga and potato and apple ellam boiled pani vachudu aduthutu pogalm ga

குழந்தைக்கு fresh milk ,இரண்டும் மாற்றி கொடுக்கலாம்.வெளியில் எடுத்துபோகும் போது பாட்டில் milk ok, milk சூடாக இருக்க வேண்டும்.பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும்.தாமதம் என்றால் பால்- சீனி தனி தனியாக எடுக்கவும்,உடன் என்றால் கலந்தது 2(அ)3 மணிவரை போதும்,உணவும் இதுபோல்.அன்புடன் dharshiniram.

நானும் இங்கேதான்,,,ப்ரெஷ் மில்க் கொங்சம் தண்ணி கலந்து குடுது பாருன்க...ஒத்துக் கொண்டாலொரு நாளைக்கு இரு த்டவை குடுக்கலாம்..வெளியில் செல்லும் போது ப்ளாஸ்கில் தண்ணீர் வைத்து கொள்லுங்கள்...அப்பப்ப பால் அடிது குடுங்கள்..பிஸ்கட் ,கேக் பேக்கில் வச்சுகன்fக ....கத்தினால் குடுக்கலாம்...பால் பாட்டிலை அடிக்கடி கழுவி தயாராக வச்ச்கங்க..நான் எப்பாதும் வெளியில் செல்லும் போது பிஸ்கட்,சுடு தண்ணீர் இதைதான் குடுப்பேன்...பால் உடனெ காய்ச்சி குடிப்பதுதான் நல்லது.
ஒரு மணிக்கு மேல் பாட்டிலில் இருந்த பாலை குடுப்பது நல்லது இல்ல,ப்பா

மேலும் சில பதிவுகள்