2 மாத குழந்தை விமான பயனம்

சகோதரி நான் தனியாக 2 மாத மாத குழந்தைய்டன் விமான பயனம் செய்கிரேன் to bahrain . குழந்தை formula milk தான் கொடுக்க முடியும். அதை அவ்வாரு எடுத்து செல்வது. 5 மனி நேர பயனம். நான் flask water எடுத்து செல்லலாமா.in airport 3 hours . so total eight hours ku flask kil kalanthu eduthu selalama ila powder thaniyaga , water thaniyaga kondu selalama .
ethanal ethavathu security problem varuma .

water kondu poga mudiyathuna ena panuvathu inside airport and flight .

milk powder small food container la vaikalama

veru ena elam hand luggage il vaikalam babyku .
calpol drops hand luggageil vaikalama .

please enaku reply panuka

thx in advance

கவலை வேண்டாம்... குழந்தைக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகள் ஹேண்ட் பேகேஜ்ஜில் வைக்கலாம். பால் கலந்து வைக்க கூடாது, பால் பவுடர் தனியா, சூடான நீர் தனியா எடுத்துக்கங்க. வேணும்றபோது உடனே கலந்துக்கங்க. முன்பே கலந்தா அவ்வளவு நேரம் வைக்க முடியாது. ஒரு ஃபீடிங் பாட்டிலுக்கு 2 பாட்டிலா எடுத்துக்கங்க. ஸ்டெரிலைஸ் பண்ணி எடுத்துக்கங்க.

நிறைய இழைகளில் தோழிகள் குழந்தையோடு பயணம் செய்யும் போது செய்ய வேண்டிய எற்பாடுகள், கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள், எடுத்து செல்ல வேண்டிய முறை என எல்லாம் பேசி இருக்காங்க.... தேடி பாருங்க மேலே தேடுக பகுதியில் தட்டி... கிடைக்கும். :)

http://www.arusuvai.com/tamil/node/12251

http://www.arusuvai.com/tamil/forum/no/4121

http://www.arusuvai.com/tamil/forum/no/8153

http://www.arusuvai.com/tamil/node/9020

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி பால் பொடி ஒவ்வொரு ஃபீடிங்குக்கும் கொடுக்க அளவா போட்டு எடுக்க குட்டி குட்டி அடுக்கு கன்டெயினர் கிடைக்கும்(துணி கடைகளில் குழந்தைகள் பிரிவில் அல்லது ஃபார்மசியில் அல்லது பேபி ஷாப்களில் கிடைக்கும்)அதில் மூன்று நாலு அடுக்கு இருக்கும்..ஒவ்வொரு அடுக்கிலும் தேவையான பால் பொடி எடுத்துக் கொண்டால் டின்னோடு எடுத்து செல்ல தேவையுமில்லை சுலபமும் கூட..ஃப்லாஸ்கில் என்னை கேட்டால் வெதுவெதுப்பான தண்ணியே கொண்டு போங்க என்பேன் தனியாக குழந்தையோடி கொதிக்க நீரை கலக்குவது எல்லாம் சிரமம்..இல்லை விமானத்தில் கூட தயங்காமல் அவர்களிடம் தேவைப்படும்போதெல்லாம் பட்டன் அழுத்தி பாட்டிலை ஸ்டெரிலைஸ் பண்ணவோ வெதுவெதுப்பான நீர் நிரப்பி தரவ்வோ சொல்லலாம்..அவங்க கிச்சனில் இருந்து கொண்டு வருவார்கள்.
குழந்தைக பொருளை மட்டும் விடுவாங்க இருந்தாலும் திருட்டு முழி முழிக்காமல் இது குழந்தைக்கானது என்று அழுத்தி சொல்லுங்க.வேண்டுமானல் இரண்டு சிப் குடித்து காட்ட சொல்லுவார்கள்.மருந்தும் காய்ச்சலுக்கு அல்லது சளி பிடித்திருந்தால் வச்சுக்குங்க.
பேபி வைப்ஸ்,பிப்ஸ்,டயபர்,டயபர் சேக்ஸ்,டிஷ்யூஸ்,1 செட் ட்ரெஸ் மறக்காம எடுங்க..இது வேனுமோ அது வேனுமோ என்று மூட்டையாக கொண்டு போகவும் வேண்டாம் ..கைய்யில் க்ரெடிட் கார்ட் வைப்பது எப்பவும் நல்லது..தேவைக்கு கொஞ்சம் கேஷ் உம் வைத்துக் கொள்ள வேண்டும்..தனியாக செல்வதென்பதால் சுலபமாக பொருட்களை எடுக்கும்படியான பல பல பகுதிகளாக உள்ள பெரிய பேக் அல்லது பேக் பேக் எடுத்து செல்வது நல்லது.
நீங்க போடும் உடையும் குழந்தைக்கு அசவுகரியம் ஏற்படுத்தாத உருத்தான மென்மையான ட்ரெஸ் போடுங்க..பாப்பாவுக்கும் இரண்டு லேயராக ட்ரெஸ் போடுங்க சில சமயம் குளிரும் சில சமயம் சூடாக இருக்கும்..
டேக் ஆஃப் அப்ப குழந்தை கொஞ்சமாவது பசித்திருப்பது போல் பாத்துக்குங்க அப்ப தான் பாலை குடிக்கும்.காது வலியை தவிர்க்கலாம்...போர்டிங் பாஸ் எடுக்கும்போதே முன் இருக்கையில் ஓரமான சீட்டை வாங்கிக்குங்க..பொருளை பேகை வைக்க இடமும் இருக்கும் குழந்தைக்கு பாலூட்ட வசதியாகவும் இருக்கும் முன்னாடி குழந்தி தூங்கினால் பேசினெட் வாங்கி வச்சுக்கலாம்.நீங்க தாய்ப்பால் கொடுக்கும் ஐடியா இருந்தால் நல்ல ஒரு ஷாளையும் எடுத்துக்குங்க ல்லது அதுக்கு தகுந்த ட்ரெஸ் போட்டுக்குங்க..சரி ரொம்ப ஓவெரா பயமுறுத்திட்டேன்னு நினைக்கிறேன்..நல்லபடியா போய் வாங்க

இத்தனை விளக்கமா சொல்ல உங்களால் தான் முடியும் :) அதான் உங்க லின்க் எல்லாம் என்னால் முடிஞ்சவரை தேடி கொடுத்தேன் நேற்று.

//சரி ரொம்ப ஓவெரா பயமுறுத்திட்டேன்னு நினைக்கிறேன்// - ஹிஹிஹீ. கொஞ்சமாவது பயம் குறைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி..நான் லின்க் திறந்து பார்க்கலை அதான் திரும்ப எழுதிட்டேன்;-).தேன்க்ஸ் வனி.என்ன தான் சொல்லுங்க எனக்கு எப்பவுமே தனியா போறதுன்னா ஊர் போய் சேருவது வரை ஒரு பீதி இருந்துட்டே இருக்கும்;-)
எல்லாம் முடிஞ்சு வெளிய எக்சிட் கிட்ட எல்லாரும் கூட்டமா நின்னு கைய்யை காட்டுவாங்களே அப்ப தான் மூச்சு வரும்;-)

மேலும் சில பதிவுகள்