மாம்பழப் பொங்கல்

தேதி: July 13, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 1/2 கிலோ
சர்க்கரை - 400 கிராம்
மாம்பழம் - 2
பால் - 4 கப்
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 1 கப்


 

அரிசியை 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அரிசியுடன், தோல் சீவிய மாம்பழம், பால், தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக குழைய வேக வைக்கவும்.
வேக வைத்த மாம்பழ சாதத்துடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
ஒரு ஸ்பூன் நெய்யில், முந்திரி, திராட்சை, ஏலக்காயை வதக்கி, பொங்கலுடன் சேர்க்கவும்.
மீதமுள்ள நெய்யையும் சேர்த்து திரண்டு வரும் வரை கிளறி, இறக்கவும்.
மாம்பழ வாசனையுடன் சுடச்சுட பொங்கல் தயார்


மேலும் சில குறிப்புகள்


Comments

நித்யா,இன்று உங்க மாம்பழப் பொங்கல் தான் சூப்பர். இதே மாதிரி தான் நானும் பொங்கல் செய்வேன் ஆனால் மாம்பழம் இல்லாமல்.

ரொம்ப சிம்பிளா செய்ய ஈசியாவும் இருந்தது.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.