இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நிலாவும் நாள்காட்டியும்
கிழிக்கப்பட்டு கொண்டேயிருந்தாலும்
மறுபடியும்
முளைக்கும்!

சூரியனுக்கும் பூமிக்கும்
வயதாகிவிட்டதை அறிய
வக்கீல் தேவையில்லை..

இலையுதிர்காலம் உண்டென்றால்
வசந்தகாலத்தின்
வருகையும் வரும்..

அந்த நம்பிக்கையில்தான்
இன்னும் சாகாமலிருக்கிறது
மனித வாழ்க்கையும் மனித நேயமும்..

அந்த வரிசையில் நானும்
அறுசுவையில் அனைவரும்...

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அன்பு தோழி தோழர்களுக்கு பிறக்கும் புதிய வருடம் அனைவரும் விரும்பும் வகையில் நல்ல முறையில் பிறக்க அனைவரின் கனவும் நினைவாக நல்ல ஒரு திருநாளாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அறுசுவை தோழிகள் தோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வரவருக்கும் வருடம் அனைவருக்கும் நிறைந்த சந்தோஷத்தையும், வெற்றியையும், அமைதியையும் தர வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்து கொள்வோம்.

Tom Cruise
Angelina Jolie
Aishwarya Rai
Arnold
Jennifer Lopez
Amitabh Bachhan
& me..
All the STARS wish u a Very Happy New Year.

அறுசுவை உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் அட்மின் அவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிறக்கும் புது வருடத்தில் நீங்கள் நினைபவைகள் எல்லாம் நல்ல படியாக நடக்க நான் ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் பிறக்கும் புது வருடம் நல்லவைகள் நிறைந்ததாக இருக்க வேண்டும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

யாழினி நீங்களும் ஹாலிவுட் ஹிரோயினா?என்னால நம்ப முடியலப்பா!இப்படியா இதெல்லாம் மூடி மறைக்கிறது?சே...ரொம்ப மோசம் போங்க..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அழகான கவிதயில் புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டீங்க.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

அறுசுவை அட்மின் மற்றும் குழுவினர், தோழர் தோழிகள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ஷேக் அண்ணா கவிதை வரிகள் ரொம்ப ரொம்ப அருமைனு சொல்லவா வேணும் ம் ரொம்பா நல்லா இருக்கு ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா

அன்புடன் இளையா .க

திரு பாபு, தோழர், தோழியர், அனைவருக்கும் மற்றும் உங்கள் அனைவரின் அன்பான குடும்ப உறுப்பினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் எல்லா நலனையும், வளத்தையும் வஞ்சனையின்றி அள்ளி அளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உலகில் எங்கும் அமைதி நிலவ புத்தாண்டு முதல் நாள் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

வாழ்க வளமுடன்.
அன்புடன்
ஜெமாமி

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..............
வருகிற வருடம் இனிமையும் மகிழ்ச்சியும் நிறைத்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்...............

வாழ்க வளமுடன்
பவி

வாழ்க வளமுடன்
பவி

அறுசுவை குடும்பம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அறுசுவையின் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
இந்த ஆண்டு முழுவதும் என் சந்தோஷங்களில் தானும் சந்தோஷப்பட்டு....
வருந்திய போது ஆறுதல் சொல்லி...
குழம்பிய நேரங்களில் தெளிய வைத்து...
சிறு சிறு விஷயங்களுக்கு கூட பாராட்டி ஊக்கமளித்து....
இந்த ஆண்டு முழுவதும் மட்டும் அல்ல...
என் ஆயுள் முழுவதும் என்னுடன் இருக்க போகும்
என் அறுசுவை தோழிகளுக்கு நன்றிகள் பல.....
வரவிருக்கும் புத்தாண்டில் உங்கள் வாழ்வு...
தங்கமாய் வைரமாய் மின்ன இறைவனை வணங்கி
வாழ்த்துகிறேன்...... வாழ்க வளமுடன்.......

Special thanks to அட்மின் அண்ணா.... இப்படி ஒரு அருமையான தளத்தை
தொடங்கி அதை மிக சீரும் சிறப்பாக நடத்தி வருகிறீர்கள்....
நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் என்றென்டும் இன்பமாய் வாழ வாழ்த்துக்கள்.....

மேலும் சில பதிவுகள்