தோழிகளே உங்களூடைய ஆலோசனை தேவை

ஹலோ தோழிகளே நான் அருசுவைக்கு புதிது. எனக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. நாங்கள் குழந்தைக்காக் முயற்சித்து கொண்டிருக்கிறோம். போன மாதம் periods 12 நாள் தள்ளி தான் வந்தது. வழி ரொம்ப இருந்தது and bleeding brown colour ஆ இருந்தது. நான் 2 மாதங்களாக walking போறேன் (தினமும் மாலை 30 min - 1 hour). காலையில் ஓட்ஸ் தான் சாப்பிடுறேன். இதனால் நான் கருத்தரிக்கிறதற்கு ஏதாவது பாதிப்பு உண்டா.
Help me please

வணக்கம் சகோதரி, திருமணமாகி 7 மாதங்கள்தானே ஆகியுள்ளது. ஒன்றும் கவலைப்படாதீர்கள். பீரியட் தள்ளிப் போவது திருமணம் ஆன புதிதில் எல்லோருக்கும் இயல்பானதுதான். 12 நாட்கள் தள்ளிப் போனது என்று கூறியுள்ளீர்கள். நீங்கள் எந்த மருத்துவரிடமும் செல்லவில்லையா. இன்னும் ஓரிரு மாதங்கள் பாருங்கள். இதே போல் தொடர்ந்தால் நல்ல மருத்துவரை அணுகுங்கள். இதற்காக கவலைப்பட வேண்டாம்.
எனக்கு திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆகிறது. நாங்களும் குழந்தைக்காக முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தையை தள்ளிப்போடவில்லை. மருத்துவரிடம் நான் சென்ற போது நடைப்பயிற்சி செல்லலாமா என்ற சந்தேகத்தினைக் கேட்டேன். நீங்கள் ஒன்றும் நோயாளி அல்ல கஷ்டமான கட்டிட வேலை செய்கிற பெண் கருத்தரிக்கிறார் அல்லவா?என்று கேட்டார். மேலும் எப்போதும் செய்கிற வேலைகளை நாம் சாதாரணமாக செய்யலாம் என்றும் கூறினார். ஆனால் குழந்தை ஆகவில்லையே என்ற கவலை கூட குழந்தை தள்ளிப் போவதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிந்து கொண்டேன். இந்த பகுதியிலுள்ள பதில்களை தேடிப்பாருங்கள். உங்களுக்குத் தேவையான நிறைய தகவல்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி பூர்ணிமா உங்கள் ஆலோசனைக்கு. நீங்களும் விரைவில் தாய்மையடைய என்னுடைய வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

மேலும் சில பதிவுகள்