குளிர்கால தொப்பி மற்றும் ஸ்கார்ஃப்

தேதி: January 3, 2012

4
Average: 3.8 (9 votes)

 

கம்பளி (Fleece) துணி - விரும்பிய நிறங்கள்
தையல் ஊசி
நூல்
க்ளூ கன்
கத்தரிக்கோல்
ப்ரோச் / செயற்கைப் பூக்கள்
மெஷரிங் டேப்
மார்கர்

 

தொப்பி மற்றும் ஸ்கார்ப் செய்வதற்கு மேற்சொன்ன பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கம்பளி துணியினை குறுக்கு வளமாக (stretchy side)6 - 8 அங்குலத்திற்கு மடிக்கவும். (அகலம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.)
பின்னர் மடிப்பினூடக வெட்டி ஓரத்தை வெட்டி விடவும்.
இரு கரைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து 3 அங்குல உயரத்தில் (அல்லது விரும்பிய அளவில்) மார்க் செய்து குஞ்சம் போல் சிறிய கீலங்களாக வெட்டி முடிக்கவும்.
இலகுவாக செய்யக்கூடிய அழகான ஸ்கார்ஃப் தயார். துணியின் விளிம்பை மடித்து தைக்கவோ அல்லது உருக்கவோ தேவையில்லை. குஞ்சங்களும் சிலும்பாது.
தொப்பி செய்ய : கம்பளித்துணியை குறுக்கு பக்கம் கீழே இருக்குமாறு இரண்டாக மடித்து தலையின் சுற்றளவை விட 2 அங்குலம் நீளமாக அளந்து குறிக்கவும். பின்னர் 12 அங்குலம் (பொதுவாக) அல்லது சிறிது கூடுதலாக உயரப்பக்கமாக மார்க் செய்யவும். பின்னர் இந்த அளவிற்கு ஏற்ப நீள் சதுர துண்டு ஒன்று வெட்டவும். (கீழ் பக்க மடிப்பினூடு வெட்ட வேண்டாம். மடிப்பு அப்படியே இருக்க வேண்டும்)
மீதி துணியில் சிறிய மெல்லிய நீள துண்டு ஒன்று வெட்டவும்.
பின்னர் வெட்டிய நீள்சதுர துணியை விரித்து நீளப்பக்கமாக உள்ள ஓரங்களை ஒன்றாக சேர்த்து (பிறவளமாக) தைக்கவும். தையல் இயந்திரம் இருப்பின் அதன் மூலமும் இல்லாவிடில் தையல் ஊசியாலும் தைக்கலாம்.
இதனை நல்ல வளமாக திருப்பி இரண்டாக மடிக்கவும். பொருத்து நடுவில் இருக்குமாறு வைத்து கீழ் பக்கத்தில் இருந்து 2 - 2.5 அங்குலம் மடித்து பின் செய்யவும். - Brim
பின்னர் இதனை தலையில் போட்டு பார்த்து தேவையான உயரத்தை மார்க் செய்து நூலோடி தையல் மூலம் சுற்றிவர தைக்கவும்.
பின்னர் மேலே உள்ள மீதமான துண்டை சிறு கீலங்களாக வெட்டவும்.
நூலோடிய நூலைப் பிடித்து இறுக்கி கட்டி விடவும். பின்னர் நீளமாக வெட்டிய துணி துண்டால் குஞ்சத்தை சுற்றி இறுக்கமாக கட்டி விடவும். விரும்பினால் நூலோடி தையல் போடாமல் நேரடியாகவும் சுருக்கி கட்டலாம். ஆனால் தையல் போட்டால் நீட்டாக இருக்கும்.
பின்னர் தொப்பியின் கீழே மடித்த பக்கத்தில் பிரியாமல் இருக்க இடையிடையே சில கட்டுக்கள் போட்டு விரும்பியவாறு ப்ரோச் அல்லது செயற்கைப் பூக்களை சொருகி அழகுப்படுத்தவும்.
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய குளிர்காலத்திற்கு போடக்கூடிய தொப்பி தயார். விரும்பிய டிசைன் துணிகளில் விதவிதமாக செய்து போடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எனக்கும் செய்து போட ஆசையாக இருக்கு. ஸ்காஃப் பிடித்திருக்கிறது. வின்டர் வரட்டும்.

‍- இமா க்றிஸ்

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த துணி சென்னையில் கிடைக்குதான்னு தான் தெரியல. கிடைச்சா செய்துடுவேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தொப்பி மற்றும் ஸ்கார்ஃப் அமர்க்களமாக இருக்கு. காலத்திற்கு ஏற்ற கிராப்ட். நீங்கள் துணியை எங்கே வாங்குனீங்க? எவ்வளவு துணி வாங்க வேண்டும் என்று சொன்னால் செய்து பார்ப்பேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கும் பாராட்டிய தோழிகளுக்கும் மிக்க நன்றி.
கட்டாயம் செய்து பாருங்க இமா. இப்ப உங்கட கை எப்பிடி இருக்கு?
வனிதா, Fleeceதுணி இல்லாவிட்டலும் Flannel துணியில் செய்து பாருங்க. அது எல்லா இடமும் அனேகமாக கிடைக்கும்.
லாவண்யா, நான் ஜோ-ஆன் கிராப்ட் ஸ்டோரில் வாங்கினேன். 1/2 யார் (1/2 a yard) போதும் ஸ்கார்ப் மற்றும் தொப்பி செய்ய (பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும்). சிறிது துணி மிஞ்சும். அதில் மட்சிங் பூக்கள், பைகள் செய்யலாம். :)
அன்புடன்,
-நர்மதா :)

செய்தாச்சு நர்மதா. நாளைக்கு வேலைக்கு சுத்திக் கொண்டு போகப் போறன். :-)
அறுசுவை ஃபான்ஸ் பக்கம் படம் பகிர்ந்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்