எந்த மாதத்தில் குப்பிற (திரும்பி) படுக்க வேண்டும், தவழ்ந்து போக வேண்டும்? உதவுங்கள்

என் மகன் பிறந்து 5 மாதம் ஆகிறது, போன மாதம் ஒரு நாள் திரும்பி படுத்திருக்கிறான் (குப்பிற படுப்பது அல்லது குபுத்துக் கொள்வது என்றும் சொல்வார்கள்) அதன் பின் குப்பிற படுப்பது இல்லை. ஒரு சைடு மட்டும் ஒதுக்கமாக படுக்கிறான் - (அதுவும் படுத்துக்கொண்டு பால் கொடுக்க படுக்க வைப்பது போல் ) நன்றாக சிரிப்பது, பொருட்களை பார்ப்பது, எல்லாம் செய்கிறான். இன்னும் குப்பிற படுக்கவில்லை. எப்போது ஒரு குழந்தை குப்பிற படுக்க வேண்டும், தவழ்ந்து போக வேண்டும்!? கொஞ்சம் உதவுங்கள் -

கொஞ்சம் நேரம் கூட கீழே படுக்க மாட்டேன் என்கிறான். கையிலேயே வைத்து இருக்க வேண்டி உள்ளது - யாரவது இதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்

அன்புடன்
பாபு நடேசன்

3 மாதத்தில் கழுத்து நிக்கும்.

4, 5 மாதங்களில் திரும்ப துவங்கும். குப்புர விழுவதில்லை, பக்கவாட்டில் திரும்புவது. மீண்டும் பழைய நிலைக்கு (முதுகு தரையில் படுபடி) திரும்ப இயலும். நீங்க குப்புர படுக்க வெச்சா தானே கழுத்தை தூக்கி நிமுந்து பார்க்கும்.

6, 7 மாதத்தில் முழுமையாக தாமே கவிழ்ந்து கொள்வார்கள்.

7 மாதத்துக்கு பின் மார்பால் இழுத்துக்கிட்டு மூவ் பண்ண துவங்குவாங்க.

8 மாதத்துக்கு பின் முட்டு போட துவங்கி, உட்காரவும் கத்துக்குவாங்க.

11 மாதத்தில் னிக்க துவங்கி 1 வயதுக்கு மேல் நடக்க துவங்கிடுவாங்க.

இது பொதுவான கருத்து. ஆனா ஒவொரு குழந்தைக்கும் வேறுபடும். சில குழந்தைகள் 10 மாதத்தில் நடந்துடும். சில குழந்தைகள் 1.5 வயதில் தான் நடக்க துவங்கும். இது குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து காரணமாகவோ அல்லது ஹெரிட்ட்ரி காரணமாகவோ இருக்கலாம். உங்க குழந்தை நீங்க சொல்லி இருப்பதை வைத்து பார்த்தால் நார்மலா சரியா தான் வளர்ச்சி இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் குழந்தை ஒருபுறமாக படுக்கிறார் அல்லவா அவர் அருகில் , musical toys , movable toys வைத்து அருகில் அமர்ந்து vilaayaattu காட்டுங்கள். அவர் அதை எடுக்க முயற்சி பண்ணி கொஞ்சம் கொஞ்சமாக குப்புற விழுந்து அவரே திருப்பி படுக்கவும் ட்ரை பண்ணுவார். குழந்தையை கையிலேயே vaithirukaatheergal. கீழே தரையில் மேட் அல்லது blanket விரித்து படுக்க வையுங்கள். குழந்தை அழுதாலும் அருகில் அமர்ந்து விளயாட்டு காட்டுங்கள். கையிலேயே இருந்தால் குழந்தை எதையும் ட்ரை பண்ணமாட்டார்கள்.

நன்றாக குப்புற விழுந்தவுடன் உட்கார வைக்க முயற்சி பண்ணுங்கள். குழந்தையை ஹை chairilo அல்லது சோபா corner இல் உட்கார வைத்து பழக்குங்கள். உட்கார்ந்த பின் அருகில் இருக்கும் பொருளை எடுக்க இழுக்க முயற்சித்து கையையும் காலையும் வைத்து இழுத்து கொண்டே தவள முயற்சிப்பார்கள், கொஞ்சம் நாளில் நன்றாக முட்டி போட்டு தவழ palagividuvaargal. சில குழந்தைகள் குப்புற படுத்து இருக்கும் போதே நெஞ்சை இழுத்து soldier crawl போல ட்ரை பன்னுன்வார்கள். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பிறந்தநாளை ஒட்டி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

hi

dont worry about these coz my son rolled over only in the 6th month and crawled in 8th month. now he is 10 months old and has started walking.each baby is diff dont compare with others...

என் குழந்தைக்கு 8வது மாதம் தொடங்கியுள்ளது.ஆனால் இன்னும் உட்காரவில்லை , தவழவில்லை. ஏன் என்று தொியவில்லை.எம்மாதத்தில் உட்காரும், தவழும் என்று கூறுங்கள். ஆனால் அவள் குப்புற கவிழ்ந்து படுக்கிறாள். நான் working women அதனால் பால் குடுக்க முடியவில்லை பாலும் முறைந்து விட்டது.how to increase milk kindly explain it.

நன்றி

நீங்க குழந்தைய அடிக்கடி உட்கார வைத்து புடித்து கொல்லுங்கல்..கொஞ்ச நாள் கழித்து உங்கள் கைய எடுத்துட்டு உட்கார வச்சி பாருங்கள்.அதுக்கப்புரம் தானே உட்காரும்.

௦. டைல்ஸ், மார்பிள்ஸ் குழந்தையை போடாதீர்கள். அவர்களால் தவழ குப்புற முடியாது. சிமெண்ட் தரை நல்லது.
1 . முதலில் உங்கள் குழத்தையை கோரை பாயில் படுக்க போடுங்கள்.
2. தலை கோரை பாயில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இடுப்புக்கு அடியில் சிறுநீர் உறிஞ்சும் மேட் போட்டு அதன் மேல் வெள்ளை துணி போடுங்கள்.
3. முதலில் உங்கள் குழந்தையுடம் அருகில் இருந்து பேச்சு/கொஞ்சுகள் கொடுங்கள்.
4 . என் மக்கள் 65 நாளில் குப்புற அடிக்க முயற்சி செய்கிறாள். ஒருகணித்து படுத்து குப்புற அடிக்க முயற்சி செய்கிறாள்.
5. engal veetil tiles floor onlyl. we used korai paai.

௦. டைல்ஸ், மார்பிள்ஸ் குழந்தையை போடாதீர்கள். அவர்களால் தவழ குப்புற முடியாது. சிமெண்ட் தரை நல்லது.
1 . முதலில் உங்கள் குழத்தையை கோரை பாயில் படுக்க போடுங்கள்.
2. தலை கோரை பாயில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இடுப்புக்கு அடியில் சிறுநீர் உறிஞ்சும் மேட் போட்டு அதன் மேல் வெள்ளை துணி போடுங்கள்.
3. முதலில் உங்கள் குழந்தையுடம் அருகில் இருந்து பேச்சு/கொஞ்சுகள் கொடுங்கள்.
4 . என் மக்கள் 65 நாளில் குப்புற அடிக்க முயற்சி செய்கிறாள். ஒருகணித்து படுத்து குப்புற அடிக்க முயற்சி செய்கிறாள்.
5. engal veetil tiles floor onlyl. we used korai paai.

மேலும் சில பதிவுகள்