6 கிலோ வரை எடை குறையும்

* உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்.
* உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு `டயட்’ என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.
* எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. இந்தியாவிலும் எடைகூடியவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.
* 7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது. அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
* இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
* நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர் (மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.
* ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம். ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.
* இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.
* 3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. 5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.
* அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது `ஜெனரல் மோட்டார்ஸ் டயட்’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஜி எம் டயட் என்று சொல்லுவார்கள். இதை முதன் முதலில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தினர் அவர்களின் ஊழியர்களுக்காக ஏற்ப்படுத்திய ஒரு உணவு கட்டுபாட்டு திட்டம். இதை மேற்கொள்வதால் ஒரு சிரமமும் இல்லை. என்னென்றால் கஷ்டப்பட்டு உணவு தயாரிக்க வேண்டாம். ஒரு நாளைக்கு பத்து க்ளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மது அருந்த கூடாது.

நல்லது இருக்குமிடத்தில் எப்பொழுதுமே கேட்டதும் சேர்ந்தே இருக்கும். தெரியாமலா சொன்னாங்க "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்று! இது வெறும் உணவு கட்டுப்பாடு மட்டும் தான். எப்பொழுதுமே உடல் இடையை சீராக தான் குறைக்க வேண்டும். அதுவும் இல்லாமால் வெறும் உணவு கட்டுப்பாடு மட்டும் இல்லாமல் உடற்பயிர்ச்சியும் சேர்த்து இருத்தல் அவசியம். அது தான் முறை. இது லோ காலரி டியட் என்பதால் நன் உடலின் "" குறைய வாய்ப்புகள் இருக்கு. அதனால் ஏற்பட்ட உடல் எடை குறையை நம் உடலால் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் இவ்வாறு செய்வதால் நம் உடலில் உள்ள அதிப்படியான நீர் தான் வெளி ஏறுகிறது. உடலிற்கு தேவையான எல்லா ஊட்டசத்தும் கிடைப்பதில்லை.

எனக்கு தெரிந்த நம்பர் ஒருவர் இதை பின்பற்றி அவருக்கு பிரஷர் குறைந்ததால் பாதியிலே விட்டு விட்டார். ஒவ்வொருத்தர் உடம்பிற்கு ஒத்து வராது. அதனால் பார்த்து செய்யவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

I FOLLOW THIS DIET THERE IS NO PROBLEM FOR ME I REDUCE 6KG............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

இது கொழுப்பை உடலில் இருந்து குறைக்காமல், நீரை மட்டுமே குறைக்கும். ஒரு வாரம் கழித்து நாள்பட மீண்டும் உடல் எடை ஏற செய்யும் என நினைக்கிறேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

some time increase 2kg (if u eat cheese or any full fat items then it increase )after one time i follow this diet it come to lasttime wight so try this ......there is no problem before taking this diet i'm 80kg but now i'm 74-73(now i'm in diet)

by,
AnuGopi,
Be happy and Make others happy........

anugopi naa entha weight loss diet follow pannen pa 1st day la ennaku headache oru mathiir uneasya feel pannen so naa continue pannala neenga ethula irukara mathiri ungalaku weight loss achina naanum try pannren side effect irukathunu nambaren

now i'm in diet. last time i'm 74 now 72.but my body heatboby so i take anything...u try to do this for 1 diet u try this if u have any problems tell me u try to drink hot water....

by,
AnuGopi,
Be happy and Make others happy........

now i'm 70kg ........y height 163 .............if any body need to do this diet plz try this method.......it give good result.............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

i'm santhi...naanum intha diet seithu parthen... enakum thalai vali (giddiness) vanthu vitathu....athu mattum illamal meendum enaku edai athikarithu vitathu....

Santhi

anu intha diet-il veru matrangal illaiya... neengal ithan padi than sapiteergala...
Santhi

Santhi

சாந்தி,
இந்த முறையில் உணவு உண்னும் பொழுது எந்த பிரச்சனையும் எனக்கு வரவில்லை....................ஆனால் தொடர்ந்து 2 மாதம் இதை சாப்பிட்டதான் பழங்கள் மேல் விருப்பம் இல்லாமல் போனது..............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்