Hi friends,
enaku oru doubt plz clear panunga....conceive aana periods timela vara mathiri adi vayirula pain varathunu solranga unmaiya?nanga babyku try panrom but inum illa...sila months munnadi enaku periods thalli pochu but enaku pain irunthathu apo naan pregnanta irukuratha thappa ninachukitan apo enaku therinjavanga sonnanga conceive aana adi vaiyuru valikadhu but back pain irukumnu....plz clear my doubt... thank u all...
hi anitharaja
நான் conceive ஆக இருந்தப்போ எனக்கு வயிறு வலி இருந்தது. backpain இருந்தது. ஆனா periods டைம்ஸ் ல வயிறு வலி இருக்காது. ஒவ்வருதருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சோ உங்களுடைய அனுபவம் எப்படின்னு சீக்கிரமே வந்து சொல்ல வாழ்த்துக்கள்.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
அனிதா
கர்ப்பமோ இல்லையோ வயிற்றில் வலிக்கு காரணம் பொதுவா சூடா தான் இருக்கும். கர்ப்ப நேரத்தில் வயிற்றில் வலி வர வேறு காரணங்களும் இருக்கலாம். அதனால் தான் உடனே டாக்டரை பார்க்கனும்னு சொல்றாங்க.
ஆனா கர்ப்ப காலத்தில் முதுகு வலி பலருக்கு ஏற்படும். அதுவும் கரு உண்டான உடனே இருக்காது, சில மாதங்களூக்கு பின் தான் ஏற்படும். பொதுவான காரணங்கள் நிறைய இருக்கு.
1. சிலருக்கு கால்சியம் குறிஅபாடு ஏற்படும், அதனால் முத்கு, உட்காரும் இடங்களில் வலி ஏற்படும். இதுக்கு கால்சியம் மாத்திரைகள் டாக்டர்கள் கொடுப்பாங்க, சாப்பிட்டு வந்தால் வலி போயிடும்.
2. சிலருக்கும் முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்படும். சிலருக்கு உட்கார முடியாமல் வலிக்கும். இதுக்கு கருப்பையின் வளர்ச்சி தான் காரணம். கருப்பை வளரும்போது முது தண்டில் ஸ்ட்ரெஸ் ஏற்படலாம். அல்லது ஏதேனும் நரம்புகள் அழுத்தப்படலாம். இதனால் வலி ஏற்படும்.
3. உடலில் அதிகப்படியான எடையை சுமப்பதால் ஜாய்ண்ட்ஸில் வலி ஏற்படலாம்.
4. தசை இழுபடுவதாலும் சில நேரம் வலி ஏற்படலாம். நம்முடைய வழக்கமான உட்காரும், நிக்கும் பொஷிஷன் எல்லாம் மாறுபடும் போது புதுசா எங்காவது ஸ்ட்ரெஸ் ஏற்படும், அதனாலும் வலி ஏற்படலாம்.
இது தான் கர்ப்ப நேரத்தில் முதுகு வலிக்கு காரணம். இது எல்லாருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு இருந்தது இல்லை. ஆனால் என் தங்கைக்கு கடுமையான வலி இருந்தது, அப்போது டாக்டர் சொன்ன காரணங்கள் இவை.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
thanks
karthikarani and vanitha thanks friends....enoda doubt ipo clear aahiduchu....vanitha neenga romba alaga explain panirukinga romba thanks.....karthika kandipa ungaluku solven naan conceive aana...thanks