என்ன தலைப்பு

வணக்கம் தோழிகளே நான் உங்கள் புதிய தோழி எனக்கு தெரிந்த தகவலை நான் உங்கள் உடன் பகீர்ந்து கொள்ள வந்து இருக்கிறேன்

என்ன தகவல்? எதுவுமே சொல்லவேயில்லையே!!

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

நிறைய இருக்கு பேசுவோம் எனக்கு உங்களுக்கு தெரிஞ்ச தகவலை சொல்லுங்க என்னொட சகோதரிக்கு RBC கவுண்ட் கம்மியா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க டேப்லெட் எடுக்கிறா FOOD என்ன சாப்பிடலாம்

திகட்டாத அரட்டைக்கு வாங்க. அனைவரும் சேர்ந்து பேசலாம்

"எல்லாம் நன்மைக்கே"

புதிய தோழியா வாங்க வாங்க....வரும்போதே அமர்க்கலாமான என்ட்ரியா இருக்கே!!!

என்ன த்ரீஷா ஏதோ நீங்கள் உங்களுக்கு தெரிந்த தகவல் எல்லாத்தையும் சொல்லபோறீங்க...நாமளும் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தால் எப்படி என்னை ஏமாத்திட்டீங்களே...சரி விடுங்க மேட்டருக்கு வருவோம்......

இரத்தத்தில் சிகப்பணுக்கள் குறைய முக்கிய காரணம் உடலில் இரும்பு மற்றும் வைட்டமின் பி கம்மியாக அல்லது சரிவர உணவிலிருந்து அப்சார்ப் ஆகாமல் இருப்பதால் இருக்கலாம். அதனால் இரும்பு சத்து அதிகம் உள்ள கீரைகள் காய்கறிகள் வைட்டமின் பி அதிகமாக உள்ள ஆரஞ்சு,பழம் போன்றவைகளை அதிகம் உணவில் சேர்க்கவும். சோயாபீன்ஸ், டோபு, பருப்பு வகைகள், உலர்ந்த திராட்சை, பிரெட், பச்சை பட்டாணி, கடலை வகைகள், பால் மாமிசம் சாப்பிடுவராக இருந்தால் லிவர், கிட்னி, முட்டையின் மஞ்சள் கரு மாதிரியானவைகளை சேர்த்துக் கொள்ளலாம். எவ்வளவு அதிகமாக சாபிட்டாலும் நம் உடலுக்கு எவ்வளவு தேவையோ அதை தான் நம் உடல் எடுத்துக் கொள்ளும்.

சரி எப்போ உங்களுக்கு தெரிந்தவைகளை எங்களுடன் பகிர்ந்த்க் கொள்ளுங்கள் பார்க்கலாம். தலைப்பை வணக்கம் என்றில்லாமல் இந்த இழைக்கு ஏற்ற மாதிரி மாற்றினால் எல்லோரும் வந்து படித்து பார்த்து பயன் பெறுவார்கள். உங்களின் கேள்விக்கும் அதிகம் பதில் வரும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்