தக்காளி மல்லி சட்னி

தேதி: January 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (23 votes)

 

தக்காளி - 2 பெரியது
பெரிய வெங்காயம் - பாதி அளவு
பூண்டு - 3 பல்
கொத்தமல்லி இலை - கால் கட்டு
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
புளி - சிறிய கோலிகுண்டு அளவு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, மிளகாய் வற்றல் போட்டு சிவக்க வறுக்கவும்.
அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும். இந்த கலவை ஆறியவுடன் முதலில் அரைத்த கலவையுடன் சேர்ந்து அரைத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு சின்ன கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.
சுவையான தக்காளி மல்லி சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு அருமையான சைடு டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு நன்றாக இருக்கு. பாக்கியலெக்ஷ்மி உங்க முதல் குறிப்பா வாழ்த்துக்கள்.

தக்காளி மல்லி சட்னி ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் உங்கள் குறிப்பு அருமையாகவுள்ளது.நிச்சயம் செய்துபார்க்கிரேன்.விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு.

தக்காளி மல்லி சட்னி குறிப்பு சூப்பரா இருக்குபா.வாழ்த்துக்கள். ஒரு வழியா மின்னஞ்சல் முகவரி கிடைச்சி அனுப்பிட்டீங்களா? சூப்பர். தொடர்ந்து அசத்துங்க.

ரொம்ப சூப்பர். எனக்கு சட்னி எத்தனை வகை கத்துகிட்டாலும் போதாது... வகை வகையா செய்ய பிடிக்கும். அவசியம் செய்து பார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள் :) இனி தொடர்ந்து கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தக்காளி மல்லி சட்னி அருமையா இருக்கு! கூடவே இருக்கும் தோசையும், அதன் மடித்து வைத்திருக்கும் விதம் அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

நான் இப்போது தான் உங்க சட்னி செய்தேன்.தோசைக்கு மிகவும் அருமையாக இருந்தது.உங்கலுக்கு எனது நன்றி.

"மிக்க நன்றி".
இது என்னுடைய முதல் சமையல் குறிப்பு. எனக்கு பிடித்த சட்னி இது. செய்து பாருங்கள். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
கொத்தமல்லியுடன் 'கறிவேப்பிலையும்' சேர்த்து அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
எனக்கு தெரிந்த அனைத்து சமையல் குறிப்புகளையும் அனுப்புகிறேன். கருத்து தெரிவித்த அனைத்து தோழிகளுக்கும் மீண்டும் ஒரு முறை 'நன்றி' 'நன்றி'
அட்மின் குழுவினருக்கும் எனது 'நன்றி'

"எல்லாம் நன்மைக்கே"

பாக்கியலெஷ்மி முதல் குறிப்பே அசத்தலா கொடுத்திருக்கீங்க. தக்காளி சட்னியும் பிடிக்கும் மல்லி சட்னியும் பிடிக்கும் இதுல ரெண்டும் சேர்ந்து அப்ப நிச்சயம் சூப்பரா தான் இருக்கும். நாளைக்கு இது தான் அரைக்க போறேன். இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க all the best

ஹாய் நல்ல குறிப்பு எங்க வீட்டுலே இட்லி தோசைனா அடுக்கு சட்னி diffrent சட்னி வேணும் தக்காளி என் பொண்ணுக்கு புடிக்கும் மல்லி என் ஹஸ் புடிக்கும் கண்டிப்பா நான் பண்ணிட்டு சொல்லுறேன் நன்றி நன்றி ..................

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க தோழிகளே... நன்றாக வரும்.

"எல்லாம் நன்மைக்கே"

தக்காளி மல்லி சட்னி

நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்க சட்னி பார்க்கும் போதே பசியை கிளப்புதுங்க...... என் அம்மாவுடைய
தோழி ஒரு நாள் இது மாதிரி சட்னி செய்து கொண்டு வந்தாங்க...... செம டேஸ்ட்....
ஆனா எப்படி செய்தாங்கன்னு தெரியல...... இப்ப உங்க குறிப்பை பார்க்கும் போது திரும்பவும் எனக்கு அந்த சட்னி ஞாபகம் வந்துடுச்சு...... படங்கள் ரொம்ப அருமையா இருக்கு....
தொடர்ந்து குறிப்பு தர வாழ்த்துக்கள்...... :)

பாக்கிய லக்ஷ்மி,
சுவையான சட்னி ..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

romba nalla irrukku cattini thanks for supper recipe . oru chinna help nanum ennudaia recipes sa type saia verumpuran eppati type saivathu pl. sollugala pa ok bye.

உங்க மெயில் ஐடி ல இருந்து arusuvaiadmin@gmail.com முகவரிக்கு அனுப்புங்க.

"எல்லாம் நன்மைக்கே"

மிக்க நன்றி. தங்களுடைய கருத்துக்கு. என்னுடைய முதல் குறிப்புக்கு தோழிகளின் பாராட்டை பார்த்து ரொம்ப மகிழ்ச்சி. நானும் தக்காளி வைத்து வேற வேற மாதிரி செய்வேன்.ஒண்ணுமே செட் ஆகால. இது எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அறுசுவையில் சேர்ந்த பின்பு பார்த்தல் ஆ இவ்வளவு சட்னி வகையா..ஒவ்வொரு நாளும் ஒரு சட்னி தான் இனிமேல்.அறுசுவை தோழிகளுக்கு எனது நன்றி.

"எல்லாம் நன்மைக்கே"

பாக்யா, நான் இதே முறையில் கொத்துமல்லி போடாமல் செய்வேன். உங்க குறிப்பை பார்த்து கொத்துமல்லி போட்டு நாளைக்கே ட்ரை பண்ணிடறேன். இந்த சட்னி பண்ணும் போது நார்மலா சிம்பிளா ஒருடசன் தோசை தான் சாப்பிடுவேன் ;) இனி இந்த சட்னியை செய்து 2 டசனா சாப்பிட போறேன் :) வாழ்த்துக்கள் பாக்கியா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றி.

நான் தினமும் அறுசுவைக்கு வருவேன்ஆனால் உங்க ரெசிபிக்கு நன்றி சொல்லவே நான் அறுசுவையில் புதிதாக இணைந்தேன் தேங்க்ஸ்!!!!!

Thanks for ur comments... Thank u so much...

"எல்லாம் நன்மைக்கே"

varuga varuga puthiya thoziaya varuga

lifela onnum illai 8344525601