பெயிண்ட் ப்ரஷ் ஹோல்டர்

தேதி: January 10, 2012

5
Average: 4.9 (9 votes)

 

தடித்த துணி (குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவு)
கலிக்கோ துணி (உள்ளே பாக்கெட் தைக்க)
பைப்பிங் - 3 மீட்டர்
கத்தரிக்கோல்
மெஷரிங் டேப்
நூல் (மூன்று துணிகளுக்கும் பொருந்தக் கூடிய நிறங்களில்)
தையல் மெஷின்

 

மேற்சொன்ன பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
தடித்த துணியில் 45 செ.மீ x 33 செ.மீ அளவான செவ்வகம் ஒன்று வெட்டிக் கொள்ளவும்.
கலிக்கோ துணியில் 55 செ.மீ x 23 செ.மீ அளவான செவ்வகம் ஒன்று வெட்டிவைக்கவும்.
வெள்ளை நூல் கொண்டு கலிக்கோ துணியின் ஒரு நீளப்பக்கத்தை மடித்துத் தைத்து விடவும்.
படத்தில் காட்டி உள்ளபடி முதலில் வெட்டி வைத்த செவ்வகத் துணியின் உட்பக்கமாக வைத்துப் பின் செய்து தையல் போடவும். மறு ஓரத்தையும் இதேபோல் தைக்கவும்.
பொபினில் பிரதான துணியின் நிற நூலைச் சுற்றிக் கொண்டு, காட்டியுள்ளபடி சின்னதும் பெரிதுமாக இடைவெளி விட்டு நேர்கோடுகள் தைக்கவும். சிலவற்றுக்கு 'ப்ளீட்' வைத்து அடித்துக் கொண்டால் அகலமான ப்ரஷ்களை வைக்கலாம். (கோடுகள் தைக்க ஆரம்பித்ததும் ஒன்றிரண்டு ப்ரஷ்களை பாக்கெட்டுகளில் வைத்துப் பார்த்தால் எந்த அளவு இடைவெளியில் தையல் வரவேண்டும் என்பது தெரியவரும்.) தைத்து முடிந்ததும் தேவையற்ற நூலை வெட்டி சீராக்கி விடவும்.
இனி பைப்பிங் நிறத்தில் பொபின், மேல் நூல் இரண்டையும் மாற்றிக் கொண்டு சுற்றிவர பைப்பிங் பிடிக்கவும். முடியும் இடத்தில் பைப்பிங்கை மடித்துத் தைக்கவேண்டும்.
மீதி இருக்கும் பைப்பிங் துண்டை இரண்டாக வெட்டி, தனித்தனியாக அடித்து வைக்கவும். முடிவிடங்களில் சுருக்கிக் கட்டிவிட்டால் பார்வைக்கு அழகாக இருக்கும்.
படத்தில் காட்டி உள்ளபடி 23 செ.மீ அளவு நாடாவை துணி மேல் வைத்து பொருத்திவிடவும். அதே போல இரண்டாவது நாடாவையும் பொருத்தமான அளவு இடைவெளி விட்டுத் தைத்துக் கொண்டால் பெயிண்ட் ப்ரஷ் ஹோல்டர் தயார்.
இப்படி ஹோல்டரில் ப்ரஷ்களை வைத்துக் கொண்டால் சிலும்பாமல் கெட்டுப் போகாமல் பலகாலம் உழைக்கும். வரையும் போது தேவையான பிரஷ்ஷைத் தேடி எடுப்பதுவும் சிரமமாக இராது. அக்ரிலிக், வாட்டர் கலர், ஆயில் பெயிண்ட் ப்ரஷ்களுக்காக தனித்தனியே ஒவ்வொன்று வைத்துக் கொள்ளலாம்.
வரைந்து முடிந்ததும் ப்ரஷ்களை சுத்தம் செய்து உலர்த்தி ஹோல்டரில் வைத்து பாய்போல் சுருட்டி நாடாவினால் கட்டிவிடவேண்டும். எங்கள் பாடசாலைக்கு வந்திருந்த ஒரு ஆர்ட்டிஸ்ட் இதுபோல் தைத்து வைத்திருந்தார்; யோசனை பிடித்திருந்தது. எனது ப்ரஷ்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தைத்து வைத்திருக்கிறேன்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா அருமை..உங்களை போன்றவர்களோடு பேசவும் உங்க வேலைபாடெல்லாம் காணவும் வாய்ப்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க் தான் வேண்டும்

சூப்பர் சூப்பர் சூப்பர்... யோசனை அருமை, அதை செய்த விதம் அருமை, கலர் காம்பினேஷனும் அருமை. மொத்தத்தில் அட்டகாசமா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஒரு வருடம் முன்னரே இந்த குறிப்பு அனுப்பி இருந்த என்னோட பிரஷ் லாம் காப்பாத்தி வச்சு இருப்பேன் இப்போ எல்லாமே போச்சு இனிமேல் புதுசா வான்கினா தான் உண்டு இம்மாம்மா எனக்காக முடுஞ்சா இத செய்து எனக்கு அனுப்புங்க எனக்கு தைக்க லாம் தெரியாது ப்ளீஸ்.நீங்க ரொம்ப அழகா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள் by Elaya.G

ரொம்ப பயனுள்ள கைவினை. எனக்கு உங்க ஐடியா பிடிச்சிருக்கு. கலர் காம்பினேஷ்னும் சூப்பர். வாழ்த்துக்கள்.

ரொம்ப உபயோகமான ஹோல்டர்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அருமையான ஐடியா! ரொம்ப நல்லா இருக்கு பெயிண்ட் ப்ரஷ் ஹோல்டர், செய்முறை! கலர் காம்பினேஷன் ரொம்ப ரொம்ப சூப்பர்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கருத்துகளுக்கு மிக்க நன்றி தளீ, வனி, இளையா, கவிதா, வினோஜா & சுஸ்ரீ.
இளையாவுக்கு.... குரியர்ல வருது. ;)

‍- இமா க்றிஸ்

இமா உங்க பெயிண்ட் பிரஷ் ஹோல்டெர் செய்து என் பொண்ணுக்கு கொடுத்திட்டேன் அவளுக்கு ரொம்ப சந்தோசம்.பயனுள்ள குறிப்பு நன்றி

பார்த்தேன், அழகாக இருக்கிறது. மிக்க நன்றி நிகிலா. குறிப்பு உங்களுக்கு உபயோகமாக இருந்தது பற்றி மகிழ்ச்சி.

‍- இமா க்றிஸ்