குட்டி குட்டியான குறும்புகள் !!!

அன்பு தோழிகளே, ஒரே மாதிரி, பேசி,பேசி கேட்டு கேட்டு போரடிக்கற மாதிரி இல்ல உங்களுக்கும்? எனக்கும் அப்படித்தான் இருக்கு ;( அதனால கொஞ்சம் மாத்தி யோசிப்போமே. நம்மளோட குட்டி வயசுல நிறைய சேட்டைகள் பண்ணியிருப்போம் அந்த நிகழ்ச்சிகளை இப்போதும் சில தருணங்களில் நினைத்து சிரித்து ருசிப்பதுண்டு. அது போல நீங்க செய்த கரும்பான குறும்புகளை இங்கே ஷேர் பண்ணிக்கோங்களே !!! நீங்க நினைச்சு சிரிக்கறதோடல்லாம, உங்களையும் சேர்த்து நினைச்சுட்டு நாங்களும் சிரிப்போம்ல. வாங்க..வாங்க..

நல்ல தலைப்பு. உண்மையில் வெகு நாட்கள் ஆகிட்டுது இது போல தலைப்பில் எல்லாம் பேசி, பதிவிட்டு :) ஏன்னா இப்போலாம் இண்ட்ரஸ்டிங்கா தலைப்புகள் வருவது குறைவாயிடுச்சு.

சரி... மேட்டருக்கு வரேன். நான் சின்ன பிள்ளையில் ரொம்ப நல்லவ. சேட்டை எல்லாம் பண்ணதே இல்லை. அம்மா சொல்வாங்க... வீட்டுக்கு அக்கம் பக்கம் உள்ள குட்டீஸ் விளையாட வந்தா எல்லாரையும் வரிசையா உட்கார வெச்சு டீச்சரம்மா மாதிரி கம்பு வெச்சு மிரட்டுவேன்னு. எனக்கு நினைவில்லை, ஆனா அம்மா சொல்லும்போது அப்போ இருந்தே டீச்சராகனும்னு ஒரு எண்ணம் மனசுல இருந்துகிட்டிருக்குன்னு நினைப்பேன். சின்ன வயசுல நான் அப்படி பண்ணது எப்படி இருக்கும்னு நினைச்சு நினைச்சு பார்ப்பேன்.

கொஞ்சம் காலம் போக போக தான் என் சேட்டை எல்லாம் வெளிய வர ஆரம்பிச்சுது. பள்ளி காலத்தில் பசங்கன்னா பிடிக்கவே பிடிக்காது. பொண்ணுகளை எதாவது சொல்லிட்டே இருப்பாங்கன்னு கோவம் வரும். அது ஒரு பிஸிக்ஸ் க்ளாஸ். அன்று டீச்சர் எடுக்க வேண்டிய பாடம் நான் எடுக்கனும்னு முன்பே சொல்லி இருந்தாங்க. நான் நிறைய ஹோம் வொர்க் பண்ணி க்லாஸ் எடுக்க தயார் பண்ணிட்டு போயிருந்தேன். முன்னாடி போய் பாடம் எடுக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்தில் க்லாஸே அமைதியா கவனிக்குது, ஒரு குண்டன் மட்டும் மிஸ் கிட்ட என்னவோ சொல்லி சிரிச்சான். முதல்ல க்லாஸ் கவனின்னு வார்ன் பண்ணேன் (என்னா தைரியம்... மிஸ் கிட்ட பேசுற ஆள மிரட்டிருக்கேன். கொஞ்சம் ஓவர் தான்.) அடுத்த முறை மறுபடி சிரிச்சான் பாருங்க... டேபில் மேல இருந்த டஸ்டரை அவன் மேல விட்டடிச்சுட்டேன் ;( மிஸ் என்னை பார்க்க, நான் கண்டுக்காம ”க்லாஸ் கவனிச்சா இரு, இல்லன்னா வெளிய போ, எனக்கு பாடம் எடுக்க முடியல”னு திட்டிட்டேன். அப்பறம் பார்த்தா க்லாஸே சிரிக்குது... என்னடான்னு திரும்பி பார்த்தா அந்த பையன் தலையில டஸ்டர் பட்டு முடியெல்லாம் வெள்ளையா போச்சு. மிஸ்க்கு என்ன சொல்லன்னு தெரியாம சிரிச்சுட்டு ஓரமா போய் நின்னுட்டு கண்டினியூன்னுட்டாங்க. அவன் முகத்தை இன்னைக்கு நினைச்சாலும் சிரிப்பேன். நான் டீச்சர்ஸ்க்கு ரொம்ப மறியாதை கொடுப்பேன்... எப்படி ஒரு மிஸ் முன்னாடி எனக்கு அவ்வளவு கோவம் வந்துதுன்னு இப்பவும் சிரிப்பேன்.

இப்போதைக்கு எனக்கு இதை சொல்ல தான் நேரம் கிடைச்சுது. அப்பறம் வரேன் கல்பனா மேடம் :) ஆனா என்கிட்ட இருந்து சுவாரஸ்யமான குறும்புலாம் எதிர் பார்க்க முடியாது... ஏன்னா நான் ரொம்ப சமத்து.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோழிகளே, இழையை தொடங்கின நானே என் சிறு வயது நிகழ்ச்சி ஒன்றை இங்கே சொல்லி இந்த இழையை தொடங்கி வைக்கிறேன்.

எனக்கு அப்ப 7 வயசு இருக்கும்னு நினைக்கறேன். எங்க வீட்டுக்கு பின்னாடி பெரிய இடம் இருந்தது. அம்மா அங்கே நிறைய செடி, கொடி,மரம் எல்லாம் வளர்த்து விட்டிருந்தாங்க. மணல் அதிகம் இருக்கும். கால் புதைய புதைய நடந்துவிளையாடுவோம். எங்க வீட்டுக்கு இந்த அடிக்கடி விருந்தாளிகள் வர இதுவும் ஒரு சிறப்பம்சமே. அப்படி ஒரு முறை என் அத்தையின் மகளும், அவருடைய குட்டி மகள் (3வயசு) வந்திருந்தார்கள். என் அம்மா தோட்டத்தின் குப்பை மற்றும் வீட்டின் சமையலுக்கு உபயோகப்படுத்தும் காய்கறி குப்பை போன்றவற்றை வெளியில் கொட்டாமல் தோட்டத்திற்குள்ளேயே ஒரு பெரிய பள்ளம் வெட்டி அதில் கொட்டி மூடி வைத்து நன்கு மக்கச் செய்து உரமாக்கி மீண்டும் அதை மரத்திற்கே போடுவார். அப்போது தான் தோண்டி வைத்த புதுக்குழி (???) அது. அந்த சமயம் எனக்கு அதில் இறங்கி உட்கார ஆசையாக இருந்ததால் நான் இறங்கி உட்கார்ந்து பார்த்தேன். என் பின்னாலேயே அந்த குட்டி பொண்ணும் வந்து நானும் உள்ளே உட்காருவேன் என்று அடம் பிடித்ததால் சரியென்று அவளையும் உட்கார வைத்துவிட்டேன். அந்த குட்டி நல்ல சந்தன நிறம். உதடுகள் நல்ல சிகப்பு. பார்ப்பி டால் போல அழகாக இருப்பாள். அவள் அந்த குட்டியூண்டு வாயை அசைத்து பேசுவதை கேட்க கேட்க அப்படியே அவளை ரசித்துக் கொண்டு இருந்தேன். வெளியில் குப்பை கொட்ட யாராவது வருகிறார்களா என்று பார்க்க மனம் துடித்தது. ஆனால் அந்த குட்டியின் பேச்சு என்னை மயக்கி அப்படியே உட்கார வைத்து விட்டது. நான் நினைத்த மறுகணம் எங்கள் இருவர் தலையிலும் காய்கறி குப்பை வந்து விழுமா? ;( அடப்பாவமே இப்பதானே நினைச்சேன்னு. டக்குன்னு எந்திரிச்சு பார்த்தா என் அம்மா நிக்கிறாங்க. உங்களுக்கு பேச வேற இடமே இல்லையா? போயும் போயும் குப்பை தொட்டிக்குள்ளவ உட்கார்ந்துட்டு பேசுவீங்கன்னு? இப்ப இருக்க வாய் சாமார்த்தியம் அப்ப இல்லயே. அதனால அந்த வயசுக்கு வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிச்சேன். அப்பதான் எங்கம்மா சொன்னாங்க பாருங்க.. நல்லவேலை நான் சாப்பாடு வடிச்ச கஞ்சியை ஊத்தலாம்னு பார்த்தேனே.. ஜஸ்ட் மிஸ் நீங்கன்னு சொல்லி வீட்டுக்குள்ளே எல்லார்கிட்டயும் சொல்லி மானத்தை படகுல ஏத்திட்டாங்க ;( அந்த குட்டிக்கு அப்பதான் புது மொட்டை அதனால் குப்பை கூட தலையில் விழாமல் தப்பித்து விட்டால். மண் எல்லாம் நம்ம தலைல தான் ;(. இதுல இந்த கொடுமைய வர்றவங்க போறவங்க கிட்ட சொல்லி சொல்லி மாய்ஞ்சு சிரிப்பா சிரிக்க வச்சுட்டாங்க ;( இப்ப அந்த குட்டிக்கும் கல்யாணம் ஆகி, அதுக்கே ஒரு குட்டி இருக்கு.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா... நல்ல இடம் பார்த்தீங்க போங்க... வாழ்க்கையில இப்படிலாம் வனி சேட்டயே பண்ணலயே... ;( இப்போ தான் நான் ரொம்ப சேட்டை பண்றேன்னு இவர் சொல்வார். எப்படியோ நான் உங்க சின்ன வயசுல எப்படி இருந்திருப்பீங்கன்னு தெரியாமலே சிரிச்சுட்டு இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு அப்போ 7 வயசு இருக்கும்.. அம்மா ஒரு நாள் புளியோதரை பண்ணிருந்தாங்க.... பெரியம்மா வீட்டுக்கு கொண்டுபோய் குடுத்துட்டு வரச்சொன்னாங்க....அம்மா கை காட்டிய இடத்தில் இருந்த ரெண்டு தூக்குவாளியில் ஒன்றை எடுத்துக்கொண்டு பெரியம்மா வீட்டுக்கு போய்ட்டேன்.. அப்போ சாப்பாட்டு நேரம்...பெரியப்பா சாப்பிட்டுட்டு இருந்தாங்க...என்னைப்பார்த்ததும் " ஏய் சுதா வா வா இன்னிக்கு என்ன ஸ்பெஷல்...வாளி பெருசா இருக்கே.. சீக்கிரம் குடு சாப்பிடலாம் " அப்படின்னு ஆசையோட open பண்ணி பார்த்தா...அதுல பக்கத்து வீட்டுல இருக்குர மாட்டுக்கு குடுக்குறதுக்காக வெச்சிருந்த சாதம் வடிச்ச கஞ்சி இருந்தது....எங்க பெரியப்பா முகத்தைப்பார்க்கனுமே....அவர் என்னைப்பார்க்க.. நான் ஒரு திருட்டு முழியோடு சுத்தி இருக்குரவங்களப்பார்க்க...நினைச்சுப்பாருங்க...எப்படி ஒரு கண்கொள்ளாக்காட்சியா இருந்திருக்கும்னு....அதவிட ஒரு highlight என்னன்னா .. எல்லாரும் " எதுக்குடி இதக்கொண்டுவந்திருக்க " ன்னு கேட்டா , நம்ம தப்பா மாத்தி கொண்டுவந்ததுனால நம்மள தப்பா நினச்சிருவாங்களோன்னு ரொம்ப புத்திசாலித்தனமாக சமாளிக்கிறதா நினச்சு " வீட்டுல நிறைய இருந்தது...அதான் அம்மா குடுத்தனுப்பினாங்க " ன்னு சொன்னேன் பாருங்க....அதுக்கப்புறம் அங்க reaction எப்படி இருந்திருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிப்பாருங்க...இப்ப நினச்சாலும் வெக்க வெக்கமா வருது..

வனி, ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே தெகிரியம் தான். நாங்களாம் மிஸ்ஸை பார்த்தா கட்டின கையை எடுக்கவே மாட்டோம். நட்புக்காக படத்தில சாகும் போது கூட சரத்குமார் கையை கட்டிட்டே சாவாரே அது மாதிரி மரியாதை எங்களோடது ;) இப்பதான் புரியுது இந்த வனி டீச்சருக்கு எங்கேருந்து அறுசுவை ஸ்கூலை நடத்த ட்ரெயினிங் வந்ததுன்னு :)

என்னோடது தான் முதல் பதிவுன்னு நினைச்சு போடுறதுக்குள்ள உங்க ஜெட் வேக பதிவு அதை முந்திடுச்சி. நல்ல தொடக்கத்தோட தான் இழையை தொடங்கிருக்கேன். கைராசி வனி தொடங்கி வச்சுட்டாங்க. கோழீஸ் வாங்க..உங்க குட்டி குட்டி சேட்டைகளை கிளறுங்க இங்கே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுதா, உங்க கதை உண்மையிலேயே சிரிப்பு வருது. நல்ல வேலை உங்க பெரியப்பா பெருந்தன்மையா விட்டுட்டார். நான் அங்கே இருந்திருந்தா கழனி தண்ணி கொண்டு வந்த உங்களை முட்டி தள்ளியிருப்பேன் ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்ல குறும்பான தலைப்பு கல்ப்ஸ் :))

நான் ரொம்ப சேட்டையெல்லாம் பன்னினதில்லை பா ரொம்பவே சமத்து :)
நான் 6வது படிக்கும்போது அப்பதான் சைக்கிள் ஓட்ட கத்துகொண்ட சமயம் பள்ளியில் இருந்து மதியம் வீட்டுக்கு வரும்போது ஃப்ரண்டோட சைக்கிளை எடுத்துட்டு வந்துட்டேன் பள்ளிக்கூடம் எங்க வீட்டுல இருந்து 2 கிலோமீட்டர் இருக்கும் எப்படியோ தத்தி உத்தி வந்துட்டேன் வீடு நெறுங்கும்போது ஒரு 15 வீடு தள்ளி வந்துட்டு இருக்கப்போ ஒருத்தர் குறுக்கே வந்துட்டார் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல (சைக்கிள் மட்டும் ஓடுது) அவர் மேல இடிச்சி ஒரு வழியா நானும் குதிச்சிட்டேன் நல்லவேலை இடி பட்டவர் திட்டவே இல்லை :)ஆனால் அங்க என்னோட அப்பாவோட நண்பர் நின்று பார்த்துட்டே இருந்தார் அப்றம் என்ன சைக்கிளை திரும்ப ஓட்டுவேனா தள்ளிக்கிட்டே வீடு போய் சேர்ந்தேன் மதிய சாப்பாடை முடிச்சுட்டு திருமப நான் சைக்கிள் ஓட்ட பயந்துகிட்டு என் தம்பிய சைக்கிளை எடுத்துட்டு வான்னு சொல்லிட்டு போய்ட்டேன்.....

அப்பாவோட நண்பர் சும்மா இருக்காம அப்பாகிட்ட வந்து போட்டு குடுத்துட்டார் மாலை பள்ளி முடிஞ்சி வீடு வந்தா அப்பா கேக்கறாங்க என்னம்மா சைக்கிள பார்த்து ஓட்டுரதில்லையான்னு நான் பாத்துதான்ப்பா ஓட்டினேன் அவர்தான் பாக்காம வந்து இடிச்சுக்கிட்டார்ன்னு சொல்லி தப்பிச்சுட்டேன்....:)ஏன்னா நான் அப்பா செல்லமாச்சே :)))அதான் எஸ்கேப் ஆயிட்டேன்.......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் என் தாத்தா வீட்டில் இருந்து தான் 4 வது வரை படித்தேன் ஒரு நாள் பக்கத்துல இருக்குற ஒரு பாட்டி வீட்டில் புளியங்காய் பறிக்க அவர்கள் வீட்டு பாத் சுவர் மேல் ஏறி பறித்து கொண்டு இருந்தேன் அங்கே இருந்து கீழே விழுந்து விட்டேன் கையில் அடி பட்டு விட்டது நல்ல காயம் வீட்டில் தெரிந்தால் திட்டுவார்கள் அதனால் அந்த பாட்டியிடம் எங்கள் வீட்டில் சொல்லாதிர்கள் என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன் ஆனால் எனது நேரம் அந்த பாட்டி என் பின்னாடியே வந்து என் வீட்டில் சொல்லி விட்டார்கள் அப்புறம் என்ன வீட்டில் பூஜை தான் எனக்கு .
இன்னும் ஒரு சம்பவம்
எனது தாத்தா ஒரு வாத்தியார் அதுனாலே என்னை 4 வயதில் பள்ளியில் சேர்த்து விட்டார்கள் ஸ்கூல் எனது தாத்தா இருக்கும் வகுப்பில் இன்னும் ஒரு டீச்சர் இருப்பாங்க நான் எதாவுது எழுதினால் என் தாத்தாவிடம் தான் கட்டுவேன் (home work ) அதற்கு அந்த டீச்சர் தினமும் என்னை திட்டுவார்கள் நீ உன் தாத்தாவிடம் காட்ட குடாது என்னிடம் தான் காட்ட வேண்டும் என்று அவர்கள் சொன்னால் வேறு வழி இல்லாமல் அவர்களிடம் கட்டுவேன் ஒரு நாள் ஸ்கூல் ல ஓட்ட பந்தயம் வைத்தார்கள் அன்று எனக்கு உடம்பு சரி இல்லை அதுனாலே நான் கடைசியாதான் ஓடுனேன் ஆனால் எனக்கும் பரிசு குடுக்க வேண்டும் என்று அழுதேன் வேறு வழி இல்லாமல் தலைமை ஆசிரியர் எனக்கும் ஒரு பென்சில் குடுத்தார் அப்புறம் தான் வீட்டுக்கு வந்தேன் .
எனது பழைய நினைவுகளை நியாபக படுத்தியதற்கு நன்றி கல்பனா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

கல்பனா காங்கோல குழி இருக்கா உங்க வீட்டுல இப்பவும் விளையாடு விங்களா ?
வனி பாவம் அந்த பையன் எங்கே இன்னும் பேசினா டீச்சர் யும் அடிச்சிரு விங்கனு டீச்சர் வேறு இடத்திற்கு போயிருபங்கனு நினைக்கிறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

iupavum panuvingala

மேலும் சில பதிவுகள்