விளக்கவும்=பேபி பெட்டயம் பவுடர், நாப்பி கிரீம்

தாய்மார்களே., சாதாரனமா குழந்தைகளுக்கு பேபி பவுடர், பேபி கிரீம்,லோஷன் தானே யூஸ் பன்னுவோம்...

ஆனா இப்போ ஹைபர் மார்க்கெட்’இல் பேபி பெட்டயம் பவுடர்(bed time powder), நாப்பி கிரீம்(nappy cream), என்று பார்த்தேன்...இதை எப்ப ,எப்படி யூஸ் பன்னலாம்?

இந்த பெட் டயம் பவுடரை எல்லா நெரமும் போடலாமா? இல்ல நயிட் மட்டும் போடலாமா?

நாப்பி கிரீம் எப்படி டயாப்பர் போடும்போது தடவனுமா? மற்ற இடங்கலில் முகம்,கை,காலில் தடவலாமா?

சொல்லுங்கப்பா தெளிவா....

அன்புடன்
*பர்வீன்*

அனுபவம் உள்ளவங்க சொல்லுங்கப்பா தெளிவா....

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

அனுபவம் இல்லை... நான் ஏதும் பயன்படுத்தியதில்லை. ஆனா தெரிஞ்ச தகவல் சொல்றேன்...

தூங்கும் நேரத்தில் போடப்படும் பவுடர் முகத்தில் போட கூடாது, உடம்பில் மட்டும் போடனும். அது இயற்கையா தூக்கத்தை வர வைக்க கூடிய வாசனை பொருட்கள் கலந்ததுன்னு சொல்றாங்க. பவுடர் மட்டுமல்ல இதில் நிறைய இருக்கு. க்ரீம், லோஷன், சோப், ஷாம்பூன்னு ஏகமா இருக்கு.

நாப்பி க்ரீம் வழக்கமா டயபர் போடும் முன் போடலாம். ராஷஸ் வராம தடுக்க.

சரியான்னு தெரியல... தோழிகள் வந்து சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா...உங்கலுக்கு தெரிஞசத சொன்னதுக்கு....

வேற யாராவது சொல்லுங்கபா தாய்மார்களே...

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மருத்துவர்கள் குழந்தைகளுக்கு பவுடரே வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். அதனால் நீங்கள் குழந்தைக்கு லோஷன் மட்டுமே பாவித்தாலே போதுமானது. வியாபாரம் செய்பவர்கள் எதையும் விட்டு வைக்க மாட்டார்கள். இதெல்லாம் அவர்களின் டெக்னிக்....குழந்தைகளையும் கூட விட்டு வைப்பதில்லை :(

தூங்க வைக்க சிரமமாக இருந்தால் மாலை சூடு நீரில் குழந்தைக்கு ஒத்தடமோ அல்லது குளியலோ போட்டு விடலாம். பிறகு சாப்பிட கொடுத்து அவர்களை நன்கு விளையாடவிட்டு சோர்வடைய செய்து தூங்க வைக்கலாம். தூங்க வைக்க மெல்லிய இசையை கூட கேட்க செய்யலாம். சிறு குழந்தையிலிருந்தே அவர்களுக்கு ரொம்பவும் கெமிகல்ஸ் பயன்படுத்தாதீர்கள்.

நாப்பி ராஷ் கிரீம்.....குழந்தைக்கு டையப்பர் ராஷ் இருந்தால் மட்டுமே போடவும். இல்லையென்றால் தேவையே இல்லை. ஒவ்வொரு முறை டையப்பர் மற்றும் போதும் தண்ணீர் வைத்து சுத்தம் செய்து தண்ணீரை நன்கு துடைத்து விட்டு ஐந்து பத்து நிமிடம் கழித்தே போடவும். கண்டிப்பாக பவுடர் போடவே கூடாது. ஒறிரு முறை சிறுநீர் கழித்தவுடன் அல்லது மலம் கழித்தவுடன் உடனே மாற்ற வேண்டும். மலம் கழித்த பின்னர் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரையிலாவது துணி நாப்பி கட்டி காற்றோட்டமாக விடவும். இப்படி செய்தால் கண்டிப்பாக ராஷ் வரவே வராது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி லாவன்யா...ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க...

என் பையனுக்கு டயாப்பர்’’னால ராஷஸ் ஆகுது...அதனால இப்போ லோஷன் கூட தடவவில்லை...

தேங்காய் என்னெய் தான் தடவி டயாப்பர் போடரேன்.

அன்புடன்
*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

என் குழந்தைக்கு 24 நாட்கள்... ரொம்ப சடவு எடுக்கிறான்... பத்து நிமிஷதுக்கு ஒருவாட்டி கைகளை மேலே தூக்கி கால்களை நீட்டி சடவு எடுக்கிறான் இல்லைனா கைகளை கீழே நீட்டி இடுப்பை தூக்குகிறான்... இப்பவே கால்களை வைத்து உந்தவும் செய்கிறான்....இதனால் ஏதும் பிரச்சனையா? மேலும் கீழே படுக்க வைத்தால் ஒருகளித்தே படுக்கிறான்... இதுவும் பயமாக உள்ளது

இது ஒரு ப்ரச்சனையா எனக்கு தோனவில்லை..என் மகன் இப்படி தான் இருந்தான் பிறந்து பத்து நாளில் குப்புற போயிடுவானோன்னு கூட நினைப்பேன் அப்படி சரிந்து தான் படுப்பான்..இப்போ 2 வயசு முடிஞ்சுடுச்சு

ரொம்ப நன்றி தளிகா.... கொஞ்சம் பயந்துட்டேன்

குழந்தைக்கு முகத்தில் சிறு சிறு வேர்குருக்கள் போல சிவப்பா இருக்கு அதுக்கு johnson baby cream போடலாமா? இது எதனால் வருது? பால் படுரதனால வருதுனு பாட்டி சொன்னாங்க..... அப்படியா?

பால படுறதாலயான்னு தெரியல..ஆனால் வியர்வை படுவதாலும் இருக்கலாம்..நம்ப உடம்போடு சேர்க்கையில் நம்ப உடம்பில் சுரக்கும் வியர்வை குழந்தை உடம்பில் முகத்தில் ஒட்டினாலும் வரும் என நினைக்கிறேன்..பாலூட்டும் முன் முன் உடம்பை துடைச்சுட்டு கொடுக்கனும் அல்லது கொடுத்து முடிஞ்சதும் சுத்தமான ஈர துணியால் அவங்க முகத்தை துடைக்கவும்.பேபி லோஷன் போதுமானது.இதெல்லாம் சில நாட்களுக்கு தான் இருக்கும் பிறகு சரியாகிடும்

மேலும் சில பதிவுகள்