அறுசுவை சீனியர்ஸ்,

அறுசுவை சீனியர்ஸ், நான் பிரியா அருண் கிரியேட் பண்ணின இழையில்தான் கேள்வி கேட்டேன். தோழிகள் யாரும் பதில் சொல்லல. ஒருவேளை கேள்வி யாருக்கும் தெரியலியோன்னுதான் இங்கு கேட்கிறேன்.தவறாக நினைக்க வேண்டாம்.
தோழிகளே, எனக்கும் ஆலோசனை கூறுங்கள் . எனக்கும் pcod உள்ளது. இப்போது ட்ரீட்மெண்டில் உள்ளேன். நீரக்கட்டி முற்றிலும் கரைந்துவிட்டது. ரெகுலர் பீரியட்ஸில் உள்ளேன்.எப்போதும் பீரியட்ஸ் ஆவதற்கு 10 நாட்கள் முன்பு மார்பகத்தில் வலி ஆரப்பித்துவிடும்.
அது பீரியட்ஸ் முடியும் வரை தொடரும். இதை வைத்துதான் நான் பீரியட்ஸ் ஆகிவிடுவேன் என்பதை உறுதி செய்து கொள்வேன். இப்போது 24 நாட்கள் ஆகியும் மார்பகத்தில் வலி எதுவும் இல்லை. வஜைனாவில் ஒருவித வழவழப்பை உணர்கிறேன். எனக்கு இன்னும் குழந்தை இல்லை.
நான் கன்சிவ் ஆகியிருக்க வாய்ப்பு இருக்கிறதா? என் மாமியாரிடமும், என் அம்மாவிடமும் கேட்டால் நான் கர்ப்பம் என்று கற்பனை செய்து கொண்டு ஊரையே கூட்டி விடுவார்கள். அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் ஆலோசனை சொல்லுங்க ப்ளீஸ்!!!

ஹாய் தான்யா முதலில் யூரின் செக் பண்ணி பாருங்கல் உண்மை என்னன்னு தெரியும். வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ரொம்ப தேங்ஸ் பூங்காற்று, ஆனா இப்பவே யூரின் டெஸ்ட் செய்யலாமா? சரியான ரிசல்ட் வருமா?

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

தான்யா,

கன்சீவ் ஆகியிருந்தால் increasing breast weight,white discharge,constipation இதெல்லாம் சிம்டம்ஸ். நல்ல பசியும் இருக்கும். நீங்கள் எதைபற்றியும் வீண் கவலை, குழப்பம் மனதில் வைக்காமல் 45 நாள் வரை நம்பிக்கையோடு காத்திருந்து பிறகு யூரின் டெஸ்ட் செய்து பாருங்கள். உங்கள் எதிர்பார்ப்பு கைக்கூட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நீங்கள் 24 நாட்கள் என்றூ குறிப்பிட்டிருப்பது எதை. 24 நாட்கள் தள்ளிப் போயுள்ளதா/ 4நாட்கள் தள்ளிப்போயிருந்தாலும் யூரின் டெஸ்டில் பார்க்கலாம்.
/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இதெல்லாம் ஹார்மோன் பிரெச்சனை... இதை வைத்து கர்ப்பம் என்று உறுதியா யாரும் சொல்ல முடியாது. கொஞ்சம் நாள் பொறுமையா இருங்க. பீரியட்ஸ் டேட்டுக்கு 10 நாள் கழிச்சு செக் பண்ணுங்க. இல்லன்னா 15 நாள் கழிச்சு செக் பண்ணுங்க. செக் பண்ணிட்டு சொல்லுங்க. குழப்பிக்காதீங்க... குழப்பம் கூடாது. ரிலாக்ஸ்டா நிம்மதியா இருங்க. சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா , கல்பனா, பூங்காற்று உங்களுக்கு ரொம்ப தேங்ஸ்.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

மேலும் சில பதிவுகள்