பிளைட் ட்ராவல் - 11 மாச குழந்தை

என்னுடைய பையனுக்கு 11 மாசம் ஆகுது. என் கணவர் US ல இருக்கார். இந்த மாசம் நாங்க அங்க போறோம். பிளைட் ட்ராவல் குழந்தைக்கு எப்படி இருக்கும்னு கவலையா இருக்கு. என்ன சாப்பாடு அவனுக்கு குடுப்பாங்க? நாம என்ன எடுத்துட்டு போகலாம்? அவன எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல. உங்க கருத்துக்களை சொல்லுங்களேன்.

hello kamala
http://www.arusuvai.com/tamil/node/12251
http://www.arusuvai.com/tamil/node/21256
intha link la poei paarunga

அன்புடன் அபி

sorry i tried to type in tamil but its taking so long since its my first try.
If the flight has unoccupied bassinet( a seat for infants) call customer care and book it. If not you have to keep him in hands for whole journey. Then consult your doctor and get some tonic so that the child can sleep well in journey. Try to give more liquid foods than solid foods. you must give him milk during the flight take off and landing else he will get pain in ears. Have some lollypops in your bag, if he cries too much it will help you. Have some biscuits and breads in your bag. Try to manage with milk and bread throughout the journey. Change the diaper often. Have around 6 diapers in bag. If you are not breastfeeding, then ask the air hostess to provide warm water and give the bottles to them. They will clean the bottles and provide you warm water. You can then add formula and give him milk. AC inside flight will be very cool so dress him accordingly. its common to see babies crying inside the flight. so dont get tensed if he cries. Just handle him without tension. Keep your passport and other documents in easily accessible area. Try to have all your things in a backpack so that you can carry him and the bag easily. If you have a stroller then its easy to carry him.
Have a safe journey :)

ஹாய் கமலா, பிரபா உங்களுக்கு எல்லாம் விளக்கமா சொல்லியிருக்காங்க . ஈஸியா ரெடி பண்ணி குடுக்க கூடிய சிரிலக் மாதிரி எடுத்துட்டு போன நஃல்லாயிருக்கும்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நன்றி அபிராமி, பிரபா, பூங்காற்று. பிளைட்டில் போகும் போது நாம் சாப்பாட்டு ஐடம் எதுவும் எடுத்துட்டு போக கூடாது தானே? Cerelac, Milk பவுடர்,bread எடுத்துட்டு போலாமா? Bread அவனுக்கு குடுத்து பழக்கம் இல்ல. வெயிடிங் டைம் ல பால் குடுக்க என்ன செய்ய? ஹாட் வாட்டர் கிடைக்குமா? நாங்க திருவனந்தபுரம் போய் ஏற போறோம். அங்கே வசதி எப்படி இருக்கும்? அபுதாபி ல கனெக்டிங் பிளைட். Child Benadryl குடுக்கலாமா? நம்ம கைல எடுத்துட்டு போலாமா? நான் இன்னும் என்னுடைய டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணல. நான் ரொம்ப கேள்வி கேட்குறேன்னு தெரியுது. ஆனா என்ன பண்றது. எனக்கு ஒரே டென்சனா இருக்கு.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

எப்படி இருக்கீங்க? தென்காசியிலிருந்து இப்போ தான் கிளம்ப போறீங்களா? ஒன்றுமே அலட்டிக் கொள்ளாமல் கிளம்புங்க.
முதலில் குழந்தைக்கு பாசிநெட் சீட் புக் பண்ணுங்கள். குழந்தைக்கு நல்ல குளிர்க்கு அடக்கமான துணிமணிகளை போட்டு கூட்டிட்டு போங்க. அவர்கள் ப்ளைட்டில் போர்வை கொடுப்பார்கள். இருந்தாலும் நீங்கள் குழந்தைக்கு நீங்களே எடுத்துட்டு போங்க.
நீங்கள் குழந்தைக்கு இன்னமும் தாய்பால் புகட்டுவதாக இருந்தால் முன் பக்கம் கொக்கி வைத்த மாதிரி இரண்டு சுடிதார் தைத்துவைத்துக் கொள்ளவும். துப்பாட்டா வைத்து மறைத்து கொடுக்கலாம். When you take a bottle everyone's eyes are on you.....when you lift your shirt the room is empty. திரவமாக தான் எதுவுமே எடுத்து செல்ல கூடாது. ப்ளைட்டில் சுடு நீர் கிடைக்கும். அவர்களை கேட்டால் கொடுப்பார்கள் இல்லையென்றால் நீங்களே குழந்தை தூங்கும் நேரமாக பார்த்து சென்று அவனில் வைத்துக் கொண்டு வந்து விடுங்கள். இறங்கும் போது மீதமுள்ள எந்த சாப்பாட்டு பொருளாக இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு சென்று விடுங்கள். போர்ட் ஆப் என்ட்ரியில் கேட்க்கும் போது இல்லையென்றே சொல்லுங்கள். இல்லையென்றால் எல்லாவற்றியும் எடுத்து போட்டு செக் செய்வார்கள்.
குழந்தையை தூங்க வைக்க Benedryl கண்டிப்பாக கொடுக்காதீர்கள். பிளைட் கிளம்பும் போது குழந்தைக்கு காது வலி ஏற்ப்படாமல் இருக்க நீங்கள் குழந்தைக்கு பால் புகட்டுங்கள். அவர்கள் அப்பொழுது எதையாவது சவைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று கவலைபடாதீர்கள். நான் என் முதல் குழந்தையுடன் நான்கு மாதத்தில், இரண்டாவது குழந்தையுடன் ஏழு மாதத்தில், திரும்பவும் மொட்டை அடிக்க செல்ல ஒரு வயதில் என்று பல முறை இப்படி தான் சென்று வருவேன். போகும் முன்பு தான் மலைப்பாக இருக்கும். இறைவன் கண்டிப்பாக அந்தந்த சந்தர்ப்பத்தில் நமக்கு தேவையான சக்தியை தருவார்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

usually they will restrict only liquid items. But for babies, you can carry liquid item in small quantity so you can carry the tonic. I am not sure about the child benadryl. It is better to consult a doctor before giving any medicines to baby. I brought cerelac, biscuits with me during journey and they didnt restrict that in any airports. while you are about to land in interconnection airport, get hot water in bottles from the flight so you can use them for milk when you are waiting in airports. Have atleast 2 feeding bottles. Dont get panic bcoz you will find people to help you throughout the journey.

மேலும் சில பதிவுகள்