சிறுமிகளுக்கான கைப்பை - 1

தேதி: January 13, 2012

5
Average: 4.4 (7 votes)

 

கம்பளி (Fleece) துணி - விரும்பிய நிறம்
தையல் ஊசி
நூல்
க்ளூ கன்
கத்தரிக்கோல்
ப்ரோச் / செயற்கைப் பூக்கள்
மார்கர்
வெல்க்ரோ அல்லது ஸ்டட்

 

கைப்பை செய்ய மேற்சொன்னப்பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கம்பளி துணியை நீள்சதுர துண்டுகள் இரண்டு வெட்டவும்.
அதன் இரு கரைகளையும் மடித்து ஒரு மூலையில் இருந்து சிறிது சரிவாக வெட்டவும். - பாஸ்கட் ஷேப்.
மீதமான துணியில் பாஸ்கட்டின் மேற்புற அகலத்தினளவில் அடிப்புறம் இருக்குமாறு அரை வட்ட துணி ஒன்று வெட்டவும்.
மீந்த துணியில் 3 மிக நீளமான மெல்லிய (1/2 அங்குலம்) கீலங்கள் வெட்டவும்.
பாஸ்கட் துணியின் 3 கரைகளையும் மெஷினில் அல்லது கையால் தைக்கவும்.
படத்தில் காட்டியவாறு கீழ் இரு மூலைகளையும் குறுக்காக சிறிதளவு தைக்கவும்.
அரைவட்ட துண்டை பாஸ்கட்டின் மேற்புறத்தில் ஒரு கரையில் வைத்து பின் செய்யவும்.
விளிம்பை சுற்றிவர தைக்கவும்.
பின்னர் 3 நீள் துண்டுகளையும் சேர்த்து அடியில் முடிச்சு போட்டு பாஸ்கட்டின் ஒரு கரையில் வைத்து தைத்து கீழே தொங்கும் துண்டுகளை குஞ்சம் போல வெட்டி விடவும்.
3 நீள துண்டுகளையும் தலைமுடி பின்னுவது போல பின்னவும்.
பின்னி முடித்ததும் முனையில் முடிச்சு போட்டு பாஸ்கட்டின் மறு கரையில் வைத்து தைத்து குஞ்சங்கள் வெட்டவும்.
வெல்க்ரோ அல்லது ஸ்டட் வைத்து படத்தில் காட்டியவாறு தைக்கவும்/க்ளூ கன்னால் ஒட்டவும்.
பின்னர் கைப்பையின் மூடியின் (Flap)மேல் பிடித்தமான ப்ரோச் அல்லது பட்டன் அல்லது வேறு அலங்கார பொருள் வைத்து ஒட்டவும்.
இலகுவாக செய்யக்கூடிய அழகான கைப்பை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

போன முறை மிதம் ஆனதில் செய்ததா... உங்க குட்டீஸ் கொடுத்து வெச்சவங்க :) கியூட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்...., கைப்பை ரொம்ப ரொம்ப க்யூட்டா இருக்கு! :) தொடர்ந்து கலக்குங்க நர்மதா! வாழ்த்துக்கள்.

அன்புடன்
சுஸ்ரீ

கைப்பை ரொம்ப அழகா செய்து காட்டி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

ரொம்ப அழகா இருக்கு நர்மதா...இந்த ஃப்லீஸ் துணியை எங்கே கண்டுபிடிப்பது என்று தான் தெரியவில்லை..தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்லீஸ்.உங்க குழந்தை பேக் மாட்டும் அளவுக்கு வளர்ந்துட்டாங்களா நம்பவே முடியலை

சுப்பர்ப் நர்மதா. இந்த வருடம் புதிதாக ஏதாவது கற்பிக்க நினைத்து இருக்கிறேன். இந்த ஐடியா பிடித்திருக்கிறது. குறைந்த நேரத்தில் செய்து முடித்துவிடலாம். மிக்க நன்றி.

‍- இமா க்றிஸ்

நர்மதா ரொம்ப இலகுவாக ஈசியாக செய்து காட்டிட்டீஙக் , சூப்பர்

Jaleelakamal