சிறுவர் உளவியல்

அன்புத்தோழிகளே இந்தப் பக்கமாக சிறிது வாருங்கள் எங்கள் அன்புச் செல்வங்கள் பற்றி கலந்துரையாடுவோம்.ஒரு வாரத்துக்கு முன் என் 2வது மகளை அஹதிய்யா (இலங்கையில் முஸ்லிம் பிளைகளுக்காக ஞாயிறு தினத்தில் நடத்தப்படும் மார்க்க வகுப்பு)வில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன். அங்கே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமாக வெவ்வேறாக கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே இடம் பெற்றதை மையமாகக் கொண்டு “குழந்தைகளை நாம் எப்படி வழி நடத்த வேண்டும் எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் என்ன பிரச்சினை இருக்கிறது குழந்தை வளர்ப்பு என்பது சாதரணமான விடயமல்ல , அது ஒரு கலை இவை பற்றி கலந்துறையாடுவோம் அன்று நான் பெற்றுக்கொண்ட அறிவுறைகளை பதிவிடுகிறேன். நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவைகளை தொடர்ந்து பதிவிட்டு பிள்ளைகளுடன் திண்டாடும் பெற்றோருக்கு கொஞ்சம் உதவலாமே...........

முதலில் அந்தவகுப்பு பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து உரையாற்ற வந்த சகோதரர் (அவரை x என்று அழைப்போம்) கேட்டார், உங்கள் குழந்தைகள் உங்களுடைய பேச்சை கேட்பதில்லை இதுதான் நீங்கள் அவர்களைப்பற்றி செய்யும் முதல் முறைப்பாடு. “சரி நீங்களே சொல்லுங்கல் ஏன் உங்கள் பிள்ளைகள் உங்களூடைய பேச்சைக் கேட்பதில்லை” அப்போது ஒவ்வொருவரும் டங்கள் கருத்துக்களை சொன்னார்கள்.
1.பயமின்மை
2.பிடிவாதம்
3.தான் நினைத்தை சாதிக்க முனைதல்
4.நண்பர்கள்
5.விளையாட்டு.
இவற்றை வைட் போர்டில் குறிப்பிட்டு விட்டு x சொன்னார்” இவற்றை ஏன் நீங்கள் பிரச்சினையாக நினைக்கிறீர்கள்,இவையெல்லாம் ஒரு பிள்ளையிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பிள்ளையிடமிருந்ந்து நல்லதொரு வெளியீட்டை எதிபார்க்க முடியும்,” கொஞ்சம் ஆழ்மாக சிந்தித்துப் பார்த போது அந்த ஒரு நொடியிலே புரிந்தது தவறு எங்களிடம் உள்ளது என்று.
மீண்டும் x சொன்னார் “உங்கள் பிள்ளைகளிடம் எதிர்மறையான வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் பிரயோகிக்க வேண்டாம்.

மன்னிக்கவும் தோழிகளே பிறகு தொடர்கிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இன்டெரெஸ்டிங்கா இருக்கு..இன்னும் சொல்லுங்களேன்

நானும் தளிகாவை வழிமொழிகிறேன்! :) இன்டெரெஸ்டிங்கான டாப்பிக்கா இருக்கு, மேலே சொல்லுங்க....

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப நல்ல டாபிக் மேலே சொல்லுங்கபா.என், எங்களை போன்ற பெற்றோருக்கு தேவையான ஒரு டாபிக்.உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்.

Tharifa.

அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து பிள்ளைகளை கெடுத்து வைப்பது அதை பற்றியும் சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.அன்புக்கு ஏது அளவு எப்படி அந்த அளவை புரிந்து கொள்வது என்பதைப் பற்றி பேசலாமா

ரொம்ப நல்ல டாபிக், என்னோட பொண்ணுக்கு 2 வயசு ஆகுது. நான் காங்கோவில் இருக்கிறேன், தனியா இருக்குறதால ரொம்ப செட்டை பண்ணறா, கோவம் ரொம்ப வருது இந்த வயசுல இவளோ கோவம் வருமான்னு ஆச்சர்யமா இருக்கு. அவளோட இந்த குணத்தை எப்படி மாத்துறது.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

அனுஜா இங்கேயும் அதே என் 2 வயது மகனுக்கு குறும்பு கோபம் மற்றும் அடம் ரொம்ப அதிகம்.நினைச்சது கிடைக்காட்டி காது கிழிய கத்துவது இல்லன்னா தாம் தூம்னு குதிப்பது வீட்டை சுத்தி ஓடுவது வாடிக்கையாக உள்ளது.வளர வளர சரியாகிடும்னு இருக்கேன்

எனக்கு 3 அரை வயது குழந்தை இருக்கா நல்லா சாப்பிட்டுக்கிட்டு இருந்தா திடீரென சாப்பாட 6 மாசமா நிருத்திட்டா என்னானு தெரியலை இரண்டு மூனு டாக்டர மாத்தியாச்சு நான் இப்போ வெளிநாட்டுல இருக்கேன் நாட்டுக்கு போன் பண்ணி கேட்ட போது அங்க எல்லாரும் சொல்லுராங்க திருஷ்டி யா இருக்குமுனு இது உண்மையா யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே சரியா சாப்பிடாம ரொம்ப மெலிஞ்சு போய்ட்டா எதாவது வழி சொல்லுங்க பா ப்ளீஸ்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

திருஷ்டி என்பதை நாம் எல்லோருமே சில சமயங்களில் நம்புகிறோம். அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்து விடுங்கள்.
இப்போது குழந்தை சாப்பிட என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.

முதலில் அவள் சாப்பிடவில்லையே என்கிற உங்கள் டென்ஷனை சிறிது ஒதுக்கி வைத்து விடுங்கள். அவளையும் டென்ஷன் பண்ணாதீர்கள். அவள் வழக்கம் போல ஓடி ஆடுகிறாளா? ஆம் என்றால் ரொம்பவும் கவலை வேண்டாம். அவளுக்குப் பிடித்ததை செய்து கொடுங்கள். அவளிடம் அடிக்கடி சாப்பிடு சாப்பிடு என்று தொந்திரவு செய்யாதீர்கள். அவள் போறும் என்று சொன்னவுடன் நிறுத்தி விடுங்கள்.

குழந்தை ஸ்கூல் போகிறாளா? வீட்டில் இருக்கிறாளா? நீங்கள் வேலைக்குப் போகிறவரா?
குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும் போது பல வீடுகளில் கேட்கும் டயலாக்:
"சீக்கிரம் சாப்பிடு, ஸ்கூல் போகணும்...."
"நீ சீக்கிரம் சாப்பிட்டாத்தானே மம்மி கிளம்பமுடியும்.....ஏற்கனவே அந்த மானேஜேர் முசுடு. நீ வேற இப்பிடி படுத்தினால் மம்மி போய் திட்டுதான் வாங்கணும்......"
உங்கள் அவசரம் அல்லது உங்கள் மானேஜர் எதுவுமே குழந்தைக்குப் புரியாது.

சாப்பாட்டு நேரத்தை , இனிமையாக, கதை சொல்லிக் கொண்டோ, பாட்டுப் பாடிக் கொண்டோ குழந்தையுடன் செலவழிக்கும் நேரமாக மாற்றுங்கள். குழந்தை கட்டாயம் சாப்பிடுவாள்.

ஆல் தி பெஸ்ட்!

You never get a second chance to make a first impression.

நான் இல்லத்தரசி தான் ரஞ்சனி பொன்னுக்கு 3 அரை வயசு ஆகுது அவள பாக்குறத தவிர வேற வேலையே இல்ல நல்லா சாப்பிட்டுகிட்டு இருந்தவ பா திடிரென சாப்பாட பார்த்தாலே மெரண்டு ஓடுரா ஒரு வாய் கூட வைக்க மாட்டேன்கிரா எனக்கு என்ன செய்ரதுனே தெரியல பா ரொம்ப நன்றி ரஞ்சனி உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொண்டமைக்கு...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்