பூ ப்ரோச் - 3

தேதி: January 17, 2012

5
Average: 4.1 (7 votes)

 

துணி - விரும்பிய நிறங்கள் 2 + பச்சை
தையல் ஊசி
நூல்
க்ளூ கன்
கத்தரிக்கோல்
ஸ்டோன் அல்லது பட்டன்
ப்ரோச் ஊசி

 

பூ ப்ரோச் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
விரும்பிய இரு நிற துணிகளிலும் ஒரு பெரிய வட்டமும், ஒரு சிறிய வட்டமும் வரைந்து வெட்டவும்.
பின்னர் வட்டத்தின் ஓரங்களில் நூலோடி தையல் போட்டு இறுக்கி சுருக்கிக் கட்டவும். பூ போல வரும்.
பச்சை அல்லது விரும்பிய நிறத்தில் ஒரு சிறிய வட்டம் வெட்டி அதில் ப்ரோச் ஊசியை வைத்து தைத்து அல்லது க்ளூ கன்னால் ஒட்டி பெரிய வட்ட பூவின் பின் பகுதியில் ஒட்டவும்.
பின்னர் பெரிய வட்டத்தின் மேல் சிறிய வட்டத்தை வைத்து தைக்கவும் அல்லது க்ளூ கன்னால் ஒட்டவும். அதன் மேல் நடுவில் பட்டன் அல்லது ஸ்டோன் வைத்து ஒட்டவும். இலகுவாக செய்யக்கூடிய பூ ப்ரோச் தயார். இதனை ஆடைகளில் அல்லது பர்ஸ், ஹேண்ட் பேக்கில் அழகாக குத்தி விடலாம். அல்லது சிறுமிகளின் ஹேர்க்ளிப், அலிஸ் பான்டில் ஒட்டி விடலாம். அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ப்ரோச் அழகா இருக்கு. இந்த மாதிரி துணியிலேயே விதவிதமா செய்து அசத்துறீங்க நர்மதா வாழ்த்துக்கள்.

ஒரு பிட் கூட வேஸ்ட் பண்ணாம அழகா பயன்படுத்தி இருக்கீங்க. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்பிடியே அழகழகாக குறிப்புப் போட்டால்.... பாராட்ட நான் எங்க போய் வார்த்தை தேடுறது! ;)

‍- இமா க்றிஸ்