சின்ன சின்ன சந்தேகங்கள் ** பகுதி - 4

கோழீஸ்,சின்ன சின்ன சந்தேகங்கள் 24 பக்கங்களை தொட்டு 248 பதிவுகள் ஆகிவிட்டபடியால் தொடர்ந்த உங்களின் சந்தேகங்களையும்,அதற்கான விளக்கங்களையும் இந்த இழையில் தொடருங்கள்.

முந்தைய இழைகள் :-
http://www.arusuvai.com/tamil/node/13099
http://www.arusuvai.com/tamil/node/17266
http://www.arusuvai.com/tamil/node/19309

எனக்கு 2 பசங்க இருக்காங்க 2வது குழந்தை சௌதில பிறந்தா அதனால குடும்ப கட்டுபாடு செய்ய முடியல வருகிற ஜூலை மாதம் தான் ஊருக்கு போவேன் போனவுடன் குடும்ப கட்டுப்பாடு செய்யாலாமுனு இருக்கேன் யாராவது உதவுங்க பா இப்பவே 75 கிலோ இருக்கேன் ஆப்ரேஷன் செய்தால் எடை கூடுமா ஆப்ரேஷன் செய்யலாமா இல்லை வேறு எதாவது வழி இருக்கிறதா இப்பொழுது 2 வது பொன்னுக்கு 3 அரை வயசு ஆகுது யாராவது உதவுங்கள் ப்ளீஸ்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா, நான் அறிந்த வரையில் குடும்ப கட்டுப்பாடு செய்தால் குண்டாவதென்பது உண்மை இல்லை. கர்ப்பப்பை நீக்கம் செய்தால் குண்டாவார்கள் (பெரும்பாலும் அல்ல). தைராய்டு பிரச்சனைக்கு மாத்திரை சாப்பிட்டால் குண்டாவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அதனால் குழப்பமில்லாமல் நீங்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு ஹைபோ தைராய்டு இருக்கு நானும் மாத்திரை சாப்பிட்டு கொண்டுதான் இருக்கேன் கல்பனா இந்த நேரத்தில குடும்ப கட்டுப்பாடு செய்யலாமா அதுனால தான் கேட்டேன் இல்ல இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் ஆகட்டுமா என்ன செய்றது ஒன்னும் புரியல கல்பனா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

தோழிஸ்..... ஜிமெயில் ஓபன் செய்தால் அதன் உள்ளே சாட் என்ற option இருக்கும்....
முன்பெல்லாம் அதில் இருந்துதான் சாட் செய்வேன்.....
ஆனால் இப்போது என் ஜிமெயில்லில் சாட் option இல்லை.....
அந்த சாட் option ஜிமெயில்லில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்...... இங்கு gtalk டவுன்லோட் செய்ய முடியாது.... யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள்.....

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெர்(var) கடலை சாப்பிடலாமா.

நீங்க கூகிள் போய் அனடோமிக் தேரபி (anatomic therapy) என்று சர்ச் பண்ணி பாருங்க.அதில் பாஸ்கர் என்பவர் சுகர், தைராட்,பிபி உள்ளவங்க,எப்படி சாப்பிட வேண்டும் , என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருப்பார்.என் உறவினர் ஒருவர் சக்கரை மற்றும் தைராட் ப்ரோப்லம் க்கு பின்பற்றி முன்னேற்றம் அடைந்ததாக சொல்கிறார்.

தைராய்ட் குடும்ப கட்டுபாடுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. அந்த காலத்தில் எல்லாம் குடும்ப கட்டுப்பாடு செய்யாமல் தான் இருந்தார்கள். இப்போ லாப்ரோஸ்கோபி மூலம் மிக எளிதில் செய்து விடுகிறார்கள். நீங்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஹாஸ்பிட்டலில் இருந்தால் மட்டுமே போதுமானது. இப்போ வேண்டாமென்றால் நீங்கள் IUD போட்டுக் கொள்ளலாம். அதை போட்டுக் கொண்டால் அடிக்கடி செக் செய்ய வேண்டும். இதில் எந்தந்த வழிகள் இருக்கு என்று மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு நீங்கள் உங்களின் உடைநிலையை கருத்தில் கொண்டு உங்களின் கணவரிடத்தில் இது குறித்து ஆலோசனை செய்து செய்யவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தீபா ஒருவேளை உங்களின் அலுவலகத்தில் இதை disable செய்திருப்பார்கள். அப்படி செய்திருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. இல்லையென்றால் நீங்கள் Account settings சென்று gmail settings இல் சாட் என்று உள்ள ஆப்ஷனில் ஆன் அல்லது ஆப் ஆக இருக்கிறதா என்று பாருங்கள். ஆப் என்றால் ஆன் செய்யவும்.
அதுவும் இல்லை ஆன் தான் என்றால் இது உங்களின் ஆபீசில் செய்த சதியாக தான் இருக்க முடியும். உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள். வேறு எதாவது வழி சொல்லுவார்கள். இல்லை ஏதாவது வெப்சைட் மூலமாகவும் சாட் செய்யவும் முடியும் அதுவும் உங்களின் ஜிமெயில் ஐடி வைத்தே !

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கு தெரிந்து வேர்க்கடலை சாப்பிட்டால் (அதுவும் தினமுமே ) டியாபட்டீசை தடுக்கும் என்று தான் சொல்ல கேள்வி பட்டிருக்கேன். அனால் எதுமே அளவோடு இருக்கணும். அளவுக்கு மீறனால் அமுதம் கூட நஞ்சாகும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி லாவி..... நான் ஜிமெயில் செட்டிங்கில் போய் பார்த்தேன்.... அதில் சாட் ஆப்ஷன் வரவில்லை....
நீங்கள் கூறியது போல் ஆபீஸ் சதி தான் போலும்...... :(
ஆனா வீட்டிலும் இதே பிரச்சனையை தான்.... அங்கும் சாட் ஆப்ஷன்னை காணோம்....
வீட்டிலும் செட்டிங்கில் போய் தேடி பார்க்க வேண்டும்.....
உங்க பதிலுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பா.....

மேலும் சில பதிவுகள்