ஃபிஷ் சப்பாத்தி ரோல்

தேதி: January 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

சுட்ட சப்பாத்தி - 4 -6
டூனா டின் மீன் - 150 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லி இலை - சிறிது
லைம் ஜூஸ் விரும்பினால் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


 

நறுக்க வேண்டியவற்றை நறுக்கி ரெடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு வதங்க விடவும்.

பின்பு வதங்கியவற்றுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.

டின்னில் இருக்கும் மீனை தண்ணீர் அல்லது அதனுடன் இருக்கும் எண்ணெய் வடித்து விட்டு போட்டு வதக்கவும்.

உப்பு சரிபார்க்கவும்.மிளகுத்தூள் சேர்க்கவும்,விரும்பினால் லைம் ஜூஸ் விட்டு பிரட்டவும்,நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுட்ட சப்பாத்தியில் தயார் செய்த மீன் மசாலாவை தேவையான அளவு எடுத்து பரத்தி வைத்து சுருட்டி எடுக்கவும்.

சுவையான சப்பாத்தி ஃபிஷ் ரோல் ரெடி.விரும்பினால் சப்பாத்தி ரோலை கட் செய்து பரிமாறலாம்.


டின் டூனா மீன் கிடைக்காதவர்கள் முள்ளில்லாத மீனை உப்பு மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்து மசாலா செய்து சப்பாத்தி ரோல் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஃபிஷ் சப்பாத்தி ரோல் மிகவும் நன்றாக இருந்தது!

நன்றி!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)