என் பொண்ணு சாப்பிடமட்டிகிறாள். எனக்கு உதவுங்கள்

என் பெண்ணிற்கு வயது 1 .3 ஆகிறது. கடந்த 4 நாட்களாக அவள் சரியாக சாப்பிட மட்டிகிறாள். evening vomit பண்றா. டாக்டர் கேட்ட போது வயத்தில் பூச்சி இருக்கிறது சொன்னங்க ரொம்ப வீக் இருகிறதா சொன்னங்க. நான் இதற்கு என்ன செய்ய வேண்டும். என்ன மாதிரி சாப்பாடு கொடுக்க வேண்டும். எப்படி weight அதிகபடுத்துவது.
<!--break-->

http://www.arusuvai.com/tamil/node/18478.

வேப்பிலை அரைச்சு ஜூஸ் எடுத்து தேனோடு கொடுத்தா பூச்சி சாகும் அல்லது அல்லோபதி மருந்து வாங்கி கொடுக்கலாம்.அதுவும் இல்லையா ஆயுர்வேத ஃபார்மசியில் போனால் பொடி தருவாங்க அதுவும் அரிஷ்டமும் கொடுத்தால் பூச்சியும் சாகும் பசியும் வரும்

பத்மப்ரியா, இந்த பிரச்சனை எல்லா குழந்தைகளிடமும் இருக்கும். நீங்கள் கொழுந்தான வேப்பிலையோடு துளி பெருங்காயம்,சுக்கு,மிளகு,சீரகம் சேர்த்து மைய அரைத்து தேனில் கலந்து தரவும். 2 அல்லது 3 வாரத்துக்கு ஒருமுறை இப்படி செய்ங்க. வேப்பிலை சூடு அதிகம். பெருங்காயம்,சுக்கு,மிளகு,சீரகம் சேர்ப்பதால் வயிற்றில் அடைத்து கொண்டிருக்கும் வாயுவும் கலைந்து பசி நன்கு எடுத்து சாப்பிடுவார்கள். அப்படியும் சாப்பிடவில்லையென்றால் உங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்து சென்று காட்டுங்கள். அவர் பசி எடுக்க டானிக்கை எழுதி தருவார். நான் என் குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனைப்படி Cypon என்னும் பசி எடுக்கும் டானிக்கை தந்தேன். இந்த டானிக் குடித்தால் குழந்தைகள் நன்கு தூங்குவார்கள். பயம் வேண்டாம். என் குழந்தைகளுக்கு பசி பிரச்சனை ஏற்பட்டால் இந்த டானிக்கை தருவேன்.

பூச்சி தொந்தரவு இருந்தால் குழந்தைகள் வாந்தி எடுப்பார்கள்.குழந்தைகளுக்கு அந்ததந்த வயதில் தரவேண்டிய பூச்சி மருந்தை தரவில்லையென்றால் நீங்களே டாக்டரிடம் கேட்டு வாங்கி ஊற்றவும். பேக்கிங் சோடா சேர்த்த பேக்கரி உணவுகளை குழந்தைகள் அதிகம் உண்பதாலும் அது பசியை மட்டுப்படுத்திவிடும். அதனால் கூடுமானவரை பிஸ்கெட் வகைகளை தவிர்த்து, வேறு சத்தான உணவுகளாக சாப்பிட பழகுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thanks thalika akka..............

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

thanks kalpana akka......

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

மேலும் சில பதிவுகள்