-

------

வாழ்த்துக்கள்.

இருந்தாலும் நீங்க தெரிந்து கேக்குறீங்களா இல்லை தெரியாம தான் இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கீங்களான்னு நிஜமாகவே தெரியலை. இரண்டாவது குழந்தைன்னு வேற சொல்றீங்க.......

ஒருவேளை நீங்க தெரியாம தான் கேட்டீங்க என்றால்.....செர்விக்ஸ் என்றால் கர்பப்பை வாயில். கரு உண்டானவுடன் அது மூடிவிடும். அது குழந்தை பிறக்கும் தருவாயில் திறக்கும். சிலருக்கு ஆரம்பம் முதலே திறந்தே இருக்கும். சிலருக்கு இடையில் திறந்து விடும்.

இதை பற்றி நீங்கள் அதிகம் குழப்பாமல் உங்களின் மருத்துவரிடம் கண்டிப்பாக ஆலோசனை கேட்டகவும். இங்கே இருப்பவர்கள் எல்லாம் அனுபவத்தில் சொல்லுவார்கள் இருந்தாலும் உங்களின் மருத்துவர் தான் உங்களின் கேள்விக்கு சரியான பதிலை தரமுடியும். அதனால் தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் கேட்டுள்ள கேள்வி medical term சம்மந்தமான கேள்வி....அதான்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மஹா செர்விக்ஸ் என்பது கர்ப்பவாய். அது நோர்மலா டெலிவரி அப்போ தான் ஓபன் ஆகும். சிலருக்கு அதற்க்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமாக ஓபன் ஆகும். டெலிவரி டைம் ல 10 cm வரை ஓபன் ஆகும். ஆனா 18 வீக்ஸ் ல எவ்ளோன்னு சரியா தெரியலை. நீங்க கேட்குற கேள்விக்கு gynecologist மட்டும் தான் சரியான பதில் சொல்ல முடியும். எதாவது தப்பா சொல்லி அது உங்கள பயமுறுத்துற மாதிரி ஆகக்கூடாது இல்லையா . நீங்க ஸ்கேன் ரிப்போர்ட் காட்டி உங்க டாக்டர் கிட்டேயே கேளுங்க. மனச போட்டு குழப்பிக்காம தைரியாமா , relaxaa இருங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மருத்துவரா எதுவும் சொல்லாதவரை நீங்க குழம்பாதீங்க..எதாவது இருந்தா கண்டிப்பா சொல்லிடுவாங்க..
செர்விக்சின் நீளத்தை குறிப்பிட்டிருக்கலாம்...பிரசவ நேரம் நெருங்கும்போது செர்விக்ஸின் நீளம் குறையும்..3.9 என்பது ஒரு ப்ரச்சனையே இல்லை..கவலை படாம இருங்க
கடைசி மாதங்களில் தான் விரிவடையும் அப்போ கண்டிப்பா உங்க கிட்ட சொல்லிடுவாங்க.

எனக்கும் இதே பிரச்சனை தான் 12 ஆவது வாரத்தில் கருப்பை வாய் திறந்தது 3 CM ஆனது உடனே மருத்துவர் கருப்பை வாயை தைக்க சொன்னார்கள் தைத்து விட்டோம் 37 ஆவது வாரத்தில் தைய்யலை பிரித்து விட்டார்கள் அதிலிருத்து 1வாரத்தில் சுகப் பிரசவம் ஆனது இதை பற்றி மேலும் ஏதும் தெரியனும்னா கேளுங்க சொல்றேன்

கருத்துக்கு மிக்க நன்றி nafi.

டாக்டர் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் அதான் கேட்டேன்.

தையல் போடும்போது மயக்கத்திற்கு மருத்து குடுப்பாங்களா?

அதை பற்றி சொல்லுங்களேன்.

நன்றி தளிகா.

கருத்துக்கு நன்றி karthikarani.

நிச்சயம் கொடுபாங்க மஹா நமக்கு எதுவுமே தெரியாது எல்லாம் அரை மணி நேரத்தில் முடிந்து விடும் ஆனால் தைய்யால் போட்டால் முழுக்க முழுக்க பெட் ரெஸ்ட் தான் இருக்க வேண்டும் 8 மாதாம் கழித்து தான் நடக்க சொல்லுவாங்க அப்ப நல்லா வாக் செய்யலாம்

மேலும் சில பதிவுகள்