தேதி: January 24, 2012
கம்பளி துணி - விரும்பிய நிறம்
கம்பளி நூல் - பொருத்தமான நிறங்கள்
தையல் ஊசி / மெஷின்
நூல்
ஸ்டட் / வெல்க்ரோ
ப்ரோச் / அலங்கார பொருள்
கத்தரிக்கோல்
குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

கம்பளி துணியில் 8 அங்குலம் நீளத்திலும், 6 அங்குல அகலத்திலும் அல்லது விரும்பிய அளவில் ஒரு நீள் சதுர துண்டு வெட்டவும்.

பின்னர் இதே அகலத்தில் நீளத்தைவிட 5 அல்லது 6 அங்குல நீளத்தில் வேறொரு துண்டு வெட்டி படத்தில் காட்டியது போல ஒரு பக்க முனையை கூராக வெட்டவும்.

பின்னர் இரு துணிகளையும் சேர்த்து பின் செய்யவும்.

இரு கரைகளையும் மெஷினில் அல்லது கையால் கீழிருந்து 2 அங்குல உயரத்தை விடுத்து மீதியை தைக்கவும்.

இதனை சரியான பக்கத்திற்கு திருப்பி கீழிருந்து 2 அங்குல உயரத்தில் குறுக்காக தைக்கவும். தையல் மெஷினாயின் அலங்கார தையல் போடலாம். அழகாக இருக்கும். பின்னர் கீழே வெட்டிய துணியில் மெல்லிய குஞ்சங்கள் வெட்டி விடவும்.

பின்னர் தேவையான நீளத்தை விட 3 மடங்கு நீளமாக கம்பளி நூலை வெட்டி இரு முனைகளையும் சேர்த்து மடித்து கயிறு திரிப்பது போல முறுக்கி மீண்டும் மடித்தால் படத்தில் காட்டியது போல கயிறு கிடைக்கும். பின்னர் இரு முனைகளையும் பிரியாமல் இருக்க முடிச்சு போடவும்.

பின்னர் இரு முனைகளையும் பையின் உள் புறத்தில் இரு கரைகளிலும் வைத்து தைக்கவும்.

கூராக வெட்டிய முனையிலும், பையிலும் வெல்க்ரோ/ஸ்டட் வைத்து தைக்கவும் அல்லது ஒட்டவும்.

பின்னர் மூடியை மடித்து அதன் மேல் பிடித்தமான ப்ரோச் அல்லது அலங்கார பொருள் வைத்து ஒட்டவும்/தைக்கவும்.

அழகான இலகுவாக செய்யக்கூடிய கைப்பை தயார்.

Comments
நர்மதா
காசு கொடுத்து கத்துக்க வேண்டியதை இலவசமா கத்து தந்துடறீங்க நர்மதா..ரொம்ப அழகா இருக்கு
Intha paguthi romba
Intha paguthi romba nallairuku.ana sila porul ega kidikuthnu sona nalairukum.
Be simple be sample
சிறுமிகளுக்கான கைப்பை
சோ க்யூட், பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.
சிறுமிகளுக்கான கைப்பை
தளிகா சொன்னடதை நானும் ஆமோதிக்கிறேன், எப்பொழுதும் போல்... சுப்பர்ப் நர்மதா. :)
//sila porul ega kidikuthnu sona nalairukum.// என்ன பொருளைக் கேட்கிறீங்க? குறிப்பிட்டுக் கேட்டீங்கன்னா நர்மதா வந்து பார்த்ததும் சொல்லுவாங்க.
- இமா க்றிஸ்
மிக அழகான கைப் பை. நல்ல
மிக அழகான கைப் பை. நல்ல இருக்கு
ரோஸி.
கைப்பை
எவ்வளவு அழகாக செய்து காட்டியிருக்கீங்க.இதே கைப்பையை இங்கு 70,80 ரியால்கு விற்பனை செய்கிறார்கள்.நாமே செய்து கொண்டால் மனசுக்கு சந்தோசமும் பணமும் மிச்சம்.சொல்லிக்கொடுத்தமைக்கு மிகுந்த பாராட்டுக்கள்.