ரசசாதம்

ரசசாதம் வைப்பது எப்படி?

pls tell me

http://www.arusuvai.com/tamil/node/21606 இந்த தொடர்பை பாருங்க...... கொஞ்சம் தளத்தில தேவையானதை தேடி பார்க்க முயற்சி பண்ணுங்க....... தனி இழையெல்லாம் தேவையில்லை.........

இந்த தமிழ் தளத்தில தமிழும்,ஆங்கிலமும்...... தடுமாறுதுங்கோவ்!!! தாங்க முடியல.......

நான் கூட இந்த இழையை திறக்கவே இல்லை. தலைப்பை பார்த்ததும் எதற்கும் நமக்கும் சமந்தமே இல்லை என்று விட்டு விட்டேன். உமா உங்களின் துணை தலைப்பு தான் என்னை இங்கே இழுத்து வந்தது. பார்த்தால் நம்ம "ரசம் சாதம்" தானா இப்படி மருவி "ரசடம்" ஆயிடுச்சா?

சபிகா நீங்கள் அறுசுவைக்கு புதிது என்று நினைக்கிறேன். அறுசுவையில் இல்லாத குறிப்பே இல்லை. உங்களுக்கு மன்றத்தில் சென்று ஒரு புது கேள்வியை கேட்க்க தெரிந்திருந்தால் கண்டிப்பாக அறுசுவையில் உள்ள மற்ற பகுதிகளும் தெரியும். பொறுமையாக ஒவ்வொன்றாக படித்து பாருங்கள். ஒருவேளை நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு பதில் ஏற்க்கனவே இல்லையென்றால் மட்டுமே கேள்வி எழுப்பவும். இப்படி கேட்கப்படும் சில கேள்விகளால் உண்மையில் உதவியை நாடி கேட்கப்படும் கேள்விகள் உள்ளே தள்ளப்படுகிறது. தவறாக நினைக்க வேண்டாம். கீழே எழுத்துதவி உபயோகித்து தமிழில் பதியவும். ஒரு சின்ன சந்தேகம் அது எப்படிங்க உங்களால் ஒரே நேரத்தில் பல நாடுகளில் வசிக்க முடிகிறது. இல்லை உங்களின் வேலை நிமித்தமாக இத்தனை நாடுகளில் சுற்றிக் கொண்டே இருப்பீர்களா? அதுவும் இல்லாமல் நீங்கள் இரவு பத்தரை மணிக்கு கேள்வி கேட்டால் எல்லோரும் தூங்கியிருப்பார்கள். கேள்வி கேட்ட மறு நிமிடத்தில் எல்லாம் பதில் வரதில்லீங்கோ.....எதாவது அவசரமான கேள்வி என்றால் மறு கணமே கூட பதில் சில நேரங்களில் வரும் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா.... நான் முதலில் ஒரு தலைப்பு கொடுத்தேன் அதை பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.... நான் கூட அவங்க ஃப்ரோபைலை பார்த்து தடுமாறித்தான் போனேன்....நீங்க கேட்டுடீங்க!!!
நாம வேற ரொம்ப நக்கல் பண்றோம்ன்னு நினைச்சுட போறாங்க!!! எஸ்கேப்......

;))) அவங்க புதுசு இல்லையா, ஒன்பது மணிநேரம்தான் ஆகுது வந்து. போகப் போக சரியாகிருவாங்க உமா.

safika... பாப்ஸ் கொடுத்திடுக்கிற அந்த த்ரெட் பாருங்க, அந்தக் குறிப்பு நன்றாக வரும்.
அடுத்த தடவை http://www.arusuvai.com/tamil_help.html ல போய் தேவையான சொற்களைத் தமிழில் தட்டி மேலே 'கூகுள் கஸ்டம் சர்ச்' இருக்கு இல்ல, அங்க ஒட்டி சர்ச் பண்ணுங்க. லிஸ்ட் கிடைக்கும். விரும்பினதைத் தெரிஞ்சுக்கலாம், சரிதானே! அப்பிடியே போடுற பதிவுகளை மெதுவா தமிழ்ல போடப் பாருங்க. நேரம் கிடைக்கிறப்ப அறுசுவைல ஒரு ஃபுல் ரவுண்ட் வாங்க. எங்க என்ன இருக்குன்னு புரிஞ்சுப்பீங்க. எதுக்கும் அந்த தலைப்பை முதல்ல மாத்தி விடுங்க, காமடியா இருக்கு. ;))

அன்புடன்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்