மூடநம்பிக்கை பற்றி !!!

அறுசுவை தோழிகளே, எனக்கு மூடநம்பிக்கை, பில்லி, சூனியம் இதன் மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால் நிறைய பேருக்கு நடக்கும் சில, பல பிரச்சனைகளை வைத்து அது உண்மையாக இருக்குமோ என்று இப்போதெல்லாம் எனக்கு நம்ப தோன்றுகிறது.
சூனியம் வைப்பது என்பது உண்மையா? இது மாதிரியெல்லாம் நடக்குமா? அப்படி நடந்தால், பின்னர் கடவுள் நம்பிக்கை பொய்யா? தோழிகளின் கருத்துக்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று இந்த தலைப்பை பற்றி எழுதுகிறேன். தவறாக இருந்தால் இதனை நீக்கி விடலாம்.

அது அப்போதைய த்ரெட் தானே இப்போ இதில் கன்டினியூ பண்ணலாம்..பார்ப்போம் எலாரும் என்ன சொல்றாங்க என்று

மிரட்டுற மிரட்டில் மிரண்டு போய் பாவம் பச்ச புள்ளைக பயந்து போய் கால்ல வுழுந்து மண்ணிப்பு கேக்குற அளவுக்கு த்ரெட் திறக்க பயப்படுறாங்க.நீங்க பேசுங்க வர்ரவங்களை நான் ஒரு கை பாத்துக்கறேன்.

மகி //சில, பல பிரச்சனைகளை வைத்து அது உண்மையாக இருக்குமோ என்று இப்போதெல்லாம் எனக்கு நம்ப தோன்றுகிறது.// நீங்க பில்லி, சூனியம் பற்றி ஏதாவது பார்த்தீங்களா?
தளிகா அக்கா வேற வந்து தைரியமா பேச சொல்றாங்க. இருங்க நானும் டைப் பண்ணிட்டு வந்து சொல்றேன்.

பேய் பிசாசுகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனாலும் பேய்ப் படம் பார்த்தால் கொஞ்சம் இல்லை ரொம்பவே பயப்படுவேன். அந்த ம்யூசிக்கே நமக்குள் பயத்தை ஏற்படுத்தி விடும்

மற்றபடி பில்லி சூனியம் ஏவல் குறி சொல்வது இதெல்லாம் மூடநம்பிக்கை மற்றும் முட்டாள்தனம் (என்னைப் பொறுத்த வரை). ஒருவேளை அக்காலத்தில் மனோவியாதிக்கான சிகிச்சை முறைகளாக இவற்றை பயன்படுத்தியிருக்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

thalika - permission கு நன்றி. பயம் எல்லாம் கிடையாது, ஒரு மரியாதை தான், என்ன இருந்தாலும் நீங்க அறுசுவை தலத்தில எனக்கு சீனியர் ஆச்சே

vinoja17 -நான் எதுவும் பார்க்கவில்லை. சிலவருடங்களாக நிறைய தடங்கல்கள், நானும் ஐந்தரை வருடங்களாக எல்லா விதத்திலும் (நோ மூடநம்பிக்கை) முயன்று பார்த்துவிட்டேன் தீர மாட்டேன் என்கிறது. ஆனால் நான் விரதமோ, சாமி கும்பிடும் போது பிரச்சினைகள் அதிகமாக வருகிறது. சாமி கும்பிடாத போது பிரச்சினை குறைவாக உள்ளது. எனக்கே சில சமயம் பேசாமல் சாமி கும்பிடுவது, விளக்கு ஏற்றுவது ஆகியவற்றை குறைத்து கொள்ளலாம் என்று நினைக்கும் அளவிற்கு சாமி கும்பிடுவதில் தடை வருகிறது. நானும் சமீபத்தில் ஒரு ப்லொக்கில் படித்தேன். தீய சக்திகள் கடவுளை வணங்குவதை தடுக்கும் என்று (அதை பற்றி சில வரிகளை பின்னர் வந்து தருகிறேன்).
கந்த சஷ்டி கவசத்தில் கூட "பில்லி சூனியம் பெரும் பகை அகல" என்று வருகிறது. அப்படி என்றால் அது உண்மையா?
இன்று வரை எனக்கு அதில் துளி அளவும் நம்பிக்கை இல்லை, அதை பற்றி நிறைய படித்து வருகிறேன், உண்மையாக இருந்தால் பாப்போம்.

kavisiva - எனக்கு பேய் பற்றி நம்பிக்கை இல்லை

இதுவும் கடந்து போகும் !

ஹாய் மஹி...

//நானும் சமீபத்தில் ஒரு ப்லொக்கில் படித்தேன். தீய சக்திகள் கடவுளை வணங்குவதை தடுக்கும் என்று (அதை பற்றி சில வரிகளை பின்னர் வந்து தருகிறேன்).
கந்த சஷ்டி கவசத்தில் கூட "பில்லி சூனியம் பெரும் பகை அகல" என்று வருகிறது. அப்படி என்றால் அது உண்மையா?
இன்று வரை எனக்கு அதில் துளி அளவும் நம்பிக்கை இல்லை, அதை பற்றி நிறைய படித்து வருகிறேன், உண்மையாக இருந்தால் பாப்போம். //

என்னைப் பொறுத்த வரை இருக்கா இல்லையா என்று ஆராய்வதே தேவை இல்லாத ஒன்று.. நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதை பற்றி படிக்க படிக்க நம்மையும் அறியாமல் அவை தொடர்பான எண்ணப் பதிவுகள் மனதில் பதிந்து விடும்.. எனவே பில்லி சூனியம் என்ற வார்த்தைகளையே மனதில் இருந்து அகற்றிவிடுவது தான் சிறந்தது.. மாறாக நேர்மறை எண்ணங்களை மட்டும் ஏற்படுத்திக் கொள்ளுவதே சிறந்தது... நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் என்பார்களே அது போல்... விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கூட ஒரு சைண்டிஸ்ட் பில்லி சூனியம் ஏவல் செய்வதாக சொல்லிக் கொண்டு இருந்தவரிடம் ஓப்பன் சேலஞ் செய்த்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வந்த்து பேட்டி கொடுத்தார்.. கடவுள் நம்பிக்கையும் நமக்கு நாமே நம்பிக்கை கொடுத்துக் கொள்ளத்தான்.. அதை நல்லவற்றுக்கு மட்டுமே எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.. எனவே டோண்ட் வொர்ரி.. பி ஹாப்பி.. :)

என்னதான் பில்லி, சூனியமெல்லாம் இல்லை, மூடநம்பிக்கைனு சொன்னாலும் இதப்பத்தி பேசும்போதே பயம் வரத்தாங்க செய்யுது. இந்த அமாவாசை ஆனா முச்சந்தில கலர் கலரா சுத்திப்போட்டு வெச்சிருப்பாங்க, காலைல எந்திரிச்சி வாசல் பெருக்கவே பயமா இருக்கும். இதே ராத்திரில சிலசமயம் தெரு நாயெல்லாம் ஒவ்வொன்னா கேப் விடாம கத்தி ஊளையிடும் பாருங்க மூச்சே நின்னுடும் போல இருக்கும்.அப்பவே எந்திரிச்சி திருநீறு பூசிட்டு எல்லா சாமி ஸ்லோகத்தையும் சொல்லிட்டே படுத்தாதான் நிம்மதியா தூங்கவே முடியும்.
அதே மாதிரி வீட்ல விளக்கேத்தி, சுந்தரகாண்டம் படிச்சிட்டு, சாம்பிராணி ஊதுபத்தி வாசத்தோட வீடு இருந்தாதான் நம்ம வீட்டு ஆளுங்களும், நாமளும் சேஃப்டியா இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

எனக்கும் இதுல பெருசா நம்பிக்கை இல்லாம தான் இருந்தது. ஆனால் 3 மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் பகல் 11.30 நேரம் இருக்கும் எங்க அத்தை வீட்ல இருந்தேன் என்னுடன் யாரும் இல்ல தனியாகவே இருந்தேன். பாத்ரூம்ல துனி துவைச்சிட்டு மாடிக்கு போய் காயப்போட்டு அப்படியே வந்து படுத்தேன் படுத்து 2 நொடி தான் ஆகியிருக்கும் ஒரு 3 வயது பெண் குழந்தை குடுமி எல்லாம் போட்ருக்கு வந்து மேல படுத்து கழுத்த பிடிக்குது அமுக்குது கடவுலே அத என்னால சொல்லவே முடியல எழுந்துக்கனும்னு நினைக்கிரேன் முடியல எவ்ளவோ முயற்ச்சி பன்ரேன் ஆனாலும் முடியல மனதுக்குள்ளையே கடவளை வேண்டினேன் கொஞ்சம் விடுதலை கிடைச்சது அதுக்கப்ரம் திடிர்னு வெள்ளையா ஒரு உருவம் கன்முன்னாடி தெரிந்தது நான் பட்ட பாடு கடவுலே இத என்னனு நாண் சொல்ரது.

அன்புடன்
ஸ்ரீ

பில்லி,சூனியம் ,பேய் இது எல்லாம் மூட நம்பிக்கையினு தான் சொல்லுவேன் எனக்கு விவரம் தெரிந்த நாள்ல இருந்து 16 வயசு வரைக்கும் சுடுகாட்டுல தான் போய் சுள்ளி(விறகு) பொரக்குவோம் அதுவும் ஃரீயட்ஸ் நேரத்துல கூட அங்க போய் விறகு பொரக்கி வந்துருக்கேன் இது வரைக்கும் கண்ணால பார்த்ததுகூட இல்ல பேயை தோழிககூட போய்ட்டு சாப்பாடு கொண்டு போய் அங்கேயே வச்சு சாப்பிட்டுட்டு நல்லா விளையான்டு திரிஞ்சுட்டு சாயங்காலம் 5 மணிக்கு தான் வீட்டுக்கு வருவோம் 6,7 பேருனு சேர்ந்து போவோம் எல்லோருமே நல்ல தைரியமான வங்க தான் அந்த இடத்துக்கு பெரிய ஆட்களே போக பயப்படுவாங்க வீட்டுலையும் யார்கிட்டையும் சுடுகாட்டுக்கு போய் விறகு பொரக்க போரோமுனு சொல்ரதில்லை சொன்னா விடமாட்டாங்க நாங்க ஏன் அந்த இடத்துக்கு போறதுனா அங்க தான் அதிகமான விறகு கிடைக்கும். அங்க அங்க எலும்புக்கூடு,மண்டை ஓடு ,பிணத்தை எரிச்சுருப்பாக ,புதச்சுருப்பாக அதல்லாம் தாண்டிதான் வருவோம் இது வரைக்கும் எங்க தோழிகளுக்கும் சரி எனக்கும் சரி பேய் பிடுச்சதே இல்லை எங்க அம்மா,அம்மாச்சி எல்லாரும் கேப்பாங்க உங்களுக்கும் மட்டும் எங்கருங்து இவ்வளவு விறகு கிடைக்குது...............நாங்க யாரும் வாய திறக்குரதே இல்ல பேய் எல்லாம் மனபிரம்மை,பயத்தோட நீங்க எந்த பொருளை பார்த்தாளும் அது பேயாத்தான் தெரியும் . அது மாதிரி பில்லி,சூன்யம் எல்லாம் ஒரு மூடநம்பிக்கை தான் .கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், சில நேரங்களில் தீர விசாரிப்பதும் கூட பொய்யாகிவிடிகிறது .பில்லி,சூன்யம் இது எல்லாம் இன்றைக்கு காட்டுத்தீ போல நம் நாடெங்கும் பரவி கிடக்கு, சினிமாக்களில் கூட இன்றைக்கு அதை பெரிது படுத்தி வளரும் பிஞ்சுகள் மனதில் விசத்தை ஏற்றுகிறார்கள்.என்னை பொறுத்தவரை இவை எல்லாம் மூடநம்பிக்கைதான்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்