ஃப்ரை ஆலு மசாலா

தேதி: January 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
தனியா தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்,சீரக,சோம்பு தூள்கள் - தலா கால் டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி -1
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.


 

உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதனை கொதிக்கும் நீரில் போட்டு.சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதித்தவுடன் வடி கட்டி வைக்கவும்.

மிக்ஸியில் ஜாரில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மசாலா பொடி வகைகள் அனைத்தும் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.

ஒரு நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு காயவும் அரை வேக்காடான உருளைக்கிழங்கை போட்டும் ஃப்ரை செய்து,எண்ணெய் வடித்து எடுக்கவும்.

அதே தவாவில் அரைத்த மசால் விழுதை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து மசாலா வாடை அடங்கும் வரை வதக்கவும்.
அத்துடன் ஃப்ரை செய்து வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விடவும்.உப்பு சரி பார்க்கவும்.மசாலா உருளைக்கிழங்கில் சேர்ந்து வர வேண்டும்.நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான ஃப்ரை ஆலு மசாலா ரெடி.


இதனை சாதம், சப்பாத்தி உடன் பரிமாறலாம்.சிறிய மீடியம் சைஸ் உருளைக்கிழங்காக இருந்தால் வட்டமாக கட் செய்து ஃப்ரை பார்க்க சூப்பராக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

படத்தை பார்த்தா தவளை குட்டி போல தெரியுதே :-)))

அட ரேண்டம் இமேஜ் பார்த்து குழம்பிட்டேனே ..!!அவ்வ்வ்வ்

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

சூப்பரா இருக்கு ஆசியா. ட்ரை பண்றேன்.
சொன்னேன்ல முன்னாடியே. ;) எப்புடியாச்சும் டீமைக் கொண்டு ஃபோட்டோ போட்டுருங்க. இமேஜ் மாறிட்டாலும் மேல இருக்கிற ஜெய் கமண்ட் மாறாது போல இருக்கே! ;)))

‍- இமா க்றிஸ்

//இமேஜ் மாறிட்டாலும் மேல இருக்கிற ஜெய் கமண்ட் மாறாது போல இருக்கே! ;)))//

எலிக்கு வைக்கிறமாதிரி சீஸும் ,பன்னும்தான் படத்துல தெரியுது ஹா..ஹா.. :-)))

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

படம் அனுப்பியிருக்கேன்,அட்மின் குழு இணைத்து விடுவார்கள்,அதுவரை random image -ஐ எஞ்சாய் செய்யலாம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சூப்பரா இருக்கு ஆசியா. ட்ரை பண்றேன்.