பயனுள்ள அரட்டை...!!

அன்புத் தோழிகளே...வணக்கம்...பயனுள்ள விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள வாங்க!!!
அரட்டை ராஜ்ஜியம் முடிந்ததும் இங்கே தொடருங்க ஃப்ரண்ட்ஸ்! அதை கவனிக்காம ஆரம்பித்து விட்டேன்...

40, 50 வயசு பெண்களுக்கு தசை, எலும்பு சம்பந்தமான பாதிப்புகள் அதிகரிச்சுட்டே வருது. இவங்க இந்த பாதிப்பிலிருந்துமீள ஒரு உடற்பயிற்சி இருக்கு. கைகளை தோளுக்கு நேரா நீட்டி(கம்பியில் நடந்து வித்தை காட்டும் பெண்கள் வைப்பாங்களே அதுபோல) கண்களை மூடி கால்களை அகட்டி 4, 5 அடிகள் நடக்கவேண்டும். பின்னர் சாதாரண நிலையில் நடக்க வேண்டும். இதுபோல 2,3 முறை செய்யவேண்டும்.

சிறுவயதில் பாண்டி/நொண்டி/தட்டாம்பிள்ளைனு விளையாடியிருப்போம். அப்படி நல்லா விளையாடின பெண்கள் இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். டீன் ஏஜ் முடிவடையும் முன்னரே குனிந்து நிமிர்ந்து செய்யும் வீட்டு வேலைகள், இடுப்பில் குடம்வைத்து தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளை செய்த பெண்களுக்கு சுலபமாக சுகப்பிரசவம் நடக்கும்னு டாக்டர் சொன்னங்க.

நம்முடைய பண்டைய விளையாட்டுக்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் பாண்டி விளையாட சிறிய இடம் போதும். பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்க முன்னோர்கள் எவ்வளவு சுலபமுறையில் விளையட்டின்மூலம் சொல்லிக்கொடுத்திருக்காங்க பாருங்க.

KEEP SMILING ALWAYS :-)

கவிதா ஃப்ரீயா இருக்கீங்களா?

KEEP SMILING ALWAYS :-)

வாங்க நாகா நான் ஃப்ரீயாதான் இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க ,உங்களுக்கு பயம் எல்லாம் போயிருச்சா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வணக்கம் கவி எப்படி இருக்கிங்க பசங்க என்ன பண்ணுறாங்க அண்ணா வந்தாச்சா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நல்லா இருக்கேன் கவிதா.. நீங்க எப்படி இருக்கீங்க? காரைக்குடில எந்த ஏரியா?

KEEP SMILING ALWAYS :-)

வாங்க தனா எப்படி இருக்கீங்க பசங்க எப்படி இருக்காங்க அண்ணா வந்தாச்சா உங்கள தான் காணோமுனு தேடிக்கிட்டே இருந்தேன் காலைல ராதாம்மா கூட கேட்டாங்க என்ன தனா,தர்ஷனிய காணோமுனு...அண்ணா என்ன செய்ராரு

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ரெண்டு நாளா கொஞ்சம் வேலை அதிகம் அதுனாலே வரலை எல்லாரும் நல்லா இருக்கோம் உங்க அண்ணா ஊருக்கு கிளம்பிடறு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நாகா நான் காரைக்குடி பக்கம் கல்லல் கேள்விபட்டு இருக்கீங்களா அதுதான் எங்க அம்மா ஊர்.இப்போ நாங்க இருக்கிறது திருப்பத்தூர் . ரொம்ப நாளா உங்ககிட்ட கேக்கனுமுனு நினைச்சேன் பா காரைக்குடியில எந்த இடத்துல இருக்கீங்க.என் நாத்தினார் புதுவயல் ல இருக்காங்க

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

திருப்பத்தூரா? :-)அங்க எங்க இருக்கீங்க? நான் சிறுகூடல்பட்டி, திருமயம் பக்கம்.

KEEP SMILING ALWAYS :-)

நாகா... சிறுகூடல்பட்டியா அய்யோ பக்கத்துல வந்துட்டீங்க பா மிஷன் ஆஸ்பத்திரிக்கு பின்னாடி வீடு நாகா.. ,லஷ்மி ஹாஸ்பிட்டல் தெரியுமா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்