ஆபரேஷன் செய்த இடத்தில் வலியுடன் வீக்கம்

ஹாய் தோழீஸ்....... எனக்கு அடிவயிற்றில் ஆபரேஷன் செய்த இடத்தில் வலியுடன் வீக்கமாக இருக்கு. டெலிவரி ஆபரேஷன் செய்து மூன்றுவருடங்கள் ஆச்சு. இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் அங்கு ஏற்படவில்லை. சென்றவாரம் வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலையில் வெய்ட்டான பொருட்களையெல்லாம் லாஃப்ட்டில் தூக்கிவைத்தேன். அன்னைக்கு சுருக்குனு வலி இருந்தது. அடுத்த நாளில் அந்த இடத்தில் இரு இன்ச் நீளத்திற்கு வீங்கியிருக்கு. வெறும் சூட்டுக்கொப்பளம் என்று நினைத்தேன். ஆனால் அடிவயிறு முழுத்தும் வலிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு ஏதேனும் வீட்டுமருத்துவம் இருக்கா. உங்கள் ஆலோசனை தேவை.

ஏங்க இன்னுமா இதுக்கு கூட வீட்டு வைத்தியம் கேக்கறீங்க.இன்ஃபெக்ஷன் எதாவது ஆச்சுன்னா பெரிய தலைவலியா மாறிடும்.டாக்டரிடம் போங்க

இது போல் எனக்கும் ஆப்பரேஷன் செய்த 10 மாதத்தில் வலி இருந்தது, வீக்கம் இல்லை. ஆனா ஸ்கேன் அது இதுன்னு நிறைய எடுத்தாங்க. வெயிட் தூக்க கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி அனுப்பினாங்க. அதனால் நீங்க தாமதிக்காம முதல்ல டாக்டரை பாருங்க.

நானும் பார்க்கனும்... இதே காரணத்துக்கு... இப்போ 2 நாளா எனக்கும் வீக்கம், வெயிட் தள்ளினதுல. வலி கால் வரைக்கும் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று டாக்டரிடம் சென்றோம் பா. ஆறு நாட்களுக்கு நான்கு பெரிய பெரிய மாத்திரையா கொடுத்திருக்காங்க. கட்டி மாதிரி தெரியல. ரத்தக்கட்டு போல இருக்குனு சொன்னாங்க. எதுவும் ஆறு நாட்களுக்குப் பின் தான் முடிவா தெரியும்னு சொன்னாங்க பா. எனக்குதான் மாத்திரைய பார்த்தாலும் பயமா இருக்கு. பிரச்சனைய பார்த்தாலும் பயமா இருக்கு. அதனால்தான் உங்களிடமும் ஆலோசனை கேட்கலாம்னு விரும்பினேன்பா. இத்தனை நாள் கழித்து புதிதாக வந்ததால் பயமாபோச்சு.

மிக்க நன்றி தளிகா,வனிதா. வனி.. நீங்க சொன்னதுபோல வெயிட் ஜாஸ்தியானதாலதான் பிரச்சனை. கொஞ்ச நாளாக எக்ஸர்சைஸ் செய்தேன். இடுப்பு, தொடை குறைப்பதற்கு(சிம்பிளாதான் செய்தேன்). வெய்ட் தூக்கியதும் அதும் சேர்ந்து பிரச்சனையை வைச்சிடுச்சுனு நினைக்கிறேன்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

SEE THE DR AND CONFIRM THE DIAGNOSIS.THEN SEE THE QUALIFIED HOMOEOPATHY DOCTOR

மேலும் சில பதிவுகள்