அடை

தேதி: January 31, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (13 votes)

 

அரிசி - 1 1/4 கப்
உளுந்து, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு‍ தலா கால் கப் வீதமாக எல்லாம் சேர்த்து - ஒரு க‌ப்
துருவிய‌ தேங்காய் - 2 மேசைக்கரண்டி
பெரிய‌ வெங்காய‌ம் -‍ ஒன்று
முட்டைக்கோஸ் - ஒரு துண்டு (முழுக்காயை துண்டுகளாக வெட்டிய‌தில்)
சிக‌ப்பு மிள‌காய் ‍- 3 (அ) சுவைக்கேற்ப‌
பெருஞ்சீர‌க‌ம் -‍ ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள்தூள் - ‍ அரை தேக்க‌ர‌ண்டி
க‌றிவேப்பிலை - 2 கொத்து
உப்பு, எண்ணெய் ‍- தேவையான‌ அள‌வு


 

அரிசி, ப‌ருப்பு வகைக‌ளை எல்லாம் ஒன்றாக‌ப்போட்டு, ந‌ன்கு க‌ழுவி எடுத்து, மூழ்கும‌ளவு த‌ண்ணீர் சேர்த்து குறைந்தது 3லிருந்து 4 ம‌ணி நேர‌ம் ஊற‌விட‌வும். வெங்காய‌ம், க‌றிவேப்பிலையை பொடியாக‌ ந‌றுக்கி வைத்துக்கொள்ள‌வும். முட்டைக்கோஸையும் பொடியாக‌ ந‌றுக்க‌வும், அல்ல‌து க்ரேட்டர் கொண்டு துருவியும் வைக்க‌லாம்.
ஊறிய‌ அரிசி, ப‌ருப்பு, மிள‌காய், பெருஞ்சீர‌க‌ம், தேங்காய்த் துருவல், உப்பு எல்லாவ‌ற்றையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு த‌ண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள‌வும்.
அரைத்து எடுத்த‌ மாவில், மஞ்சள்தூள், பொடியாக‌ ந‌றுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை, முட்டைக்கோஸ் சேர்க்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து க‌லந்துக்கொள்ள‌வும்.
அடுப்பில் த‌வாவை வைத்து கல் காய்ந்த‌‌தும் ஒரு க‌ர‌ண்டி மாவை எடுத்து ஊற்றி, க‌ர‌ண்டியால் தோசையாக‌ ப‌ர‌த்திவிட‌வும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடுப்பு தீயை குறைத்து வைத்து வேகவிடவும்.
ஒருபுற‌ம் வெந்ததும், அடையை திருப்பிபோட்டு, அடுத்த பக்கமும் வேகவிட்டு எடுக்க சுவையான அடை தயார். அடை சூடாக‌ இருக்கும்போதே த‌ட்டில் வைத்து, விருப்பப்ப‌ட்டால், மேலே கொஞ்சம் வெண்ணெய் த‌டவி ப‌ரிமாறலாம். மாஇஞ்சி (அ) த‌க்காளி தொக்கு என்று ஏதாவது கூட‌ வைத்தும் சாப்பிட‌லாம்.

ப‌ருப்புக‌ளுட‌ன், முட்டைக்கோஸும் சேர்வ‌தால் ந‌ல்ல‌ புரோட்டின், ஃபைப‌ர் ரிச் உண‌‌வாக‌ இருக்கும். காரத்தைபோலவே, வெங்காய‌ம், முட்டைக்கோஸ் எல்லாம் அவ‌ர‌வ‌ர் சுவைக்கேற்ப அளவை கூட்டி, குறைத்து போட்டுக்கொள்ள‌லாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுஸ்ரீ, அடை குறிப்பு அருமை பா. முட்டைகோஸ், தேங்காய் சேர்த்து புதுமையான நல்ல முயற்சி. முட்டைகோஸ் சாப்பிடாம ஏமாத்துற சின்ன குழந்தைங்க,பெரிய குழந்தைங்களை இப்படிதான் ஏமாத்தி தரனும் ;) நான் அடிக்கடி அடை செய்வேன். ஆனால் தேங்காய் மிஸ்ஸிங்க். இனிமே இதையும் என்னுடைய வழக்கமான அடை லிஸ்ட்ல சேர்த்துடறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சூப்பர் அடை. காய் சேர்த்திருப்பது நல்ல ஐடியா. குட்டீஸ்க்கு ஹெல்தியா இருக்கும். எனக்கு பொதுவாவே அடை ரொம்ப விருப்பம். அவசியம் செய்ஹ்டுட்டு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ எனக்கு பிடிச்ச அடை நானும் இப்படித்தான் செய்வேன் ஆனால் கோஸ் சேர்த்ததில்லை எப்பவாவது முருங்கைகீரை சேர்த்து செய்வேன் இல்லைன்னா சும்மாவே செய்துடுவேன் இனி உங்க முறை படி கோஸ் சேர்த்து செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்...:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அடை என்றால் எனக்கு ரொம்ப புடிக்கும் நல்ல குறிப்பு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு..I ll try this..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

கறிவேப்பிலை டெக்கரேன் சிப்ளி சூப்பர்ப்.. :) முட்டைக் கோஸ் என்னோட வெவரைட்.. இனி அடை செய்தா அது முட்டைகோஸ் அடைதான்.. குறிப்புக்கு நன்றி..

Adai epavum enaku soft varamatuthu.enoa pansathu. Pls any one frnds ans .epadi tamil type panrathu thariyala

Be simple be sample

அடையில் முட்டைகோஸ்...கலக்கிட்டீங்க போங்க.. இனிமேல் அடை இப்படி தான் செய்ய போறேன்.. கருவேப்பிலை பூ சூப்பர்..

"எல்லாம் நன்மைக்கே"

சுஸ்ரீ அடையில் கேரட், தேங்காய் சேர்த்து செய்து இருக்கேன். முட்டைக்கோஸ் நல்லா ஐடியா. வெங்காயம் இல்லேன்னா கூட முட்டைக்கோஸ் வைச்சு சமாளிச்சு செய்திடலாம் போல. உங்க முறைப்படியும் செய்துப்பார்க்கிறேன்.

சுஸ்ரீ,
உங்கள் அடை இன்று செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. சாப்பிட்டு விட்டு என் கணவரும், neighbours உம் நல்லா இருக்கு என்று பாராட்டினார்கள். நன்றி.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

எனக்கு பிடித்த அடை குறிப்பு. நாங்கள் இது வரையில் மஞ்சள் பூசணியை பொடியாக நறுக்கி சேர்த்து செய்திருக்கிறோம். முட்டைகோஸ் புதுசாக இருக்கு. அது முறை முட்டைகோஸ் சேர்த்து தான். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

க‌ல்ப‌னா,
முத‌ல் ஆளா வந்து பாராட்டி, வாழ்த்து சொன்ன‌துக்கு மிக்க‌ ந‌ன்றி!

ஆமாம் க‌ல்ப‌னா, என் ப‌ச‌ங்க‌ வெறும் கோஸ் பொரிய‌ல் செய்தால் சாப்பிட‌மாட்டாங்க‌, ஒரே ஓட்டம்தான்... :) அத‌னால் நானாக ஐடியா பண்ணி சேர்த்த‌துதான் இந்த ‌ முட்டைகோஸ் பார்ட். மத்ததெல்லாம் எக்ஸ்சாட்டா அப்படியே எங்க அம்மாவோட‌ செய்முறை.

என‌க்கும் சின்ன‌ வ‌ய‌தில் இருந்தே அம்மா அடை செய்தால் ரொம்ப‌ பிடிக்கும். இப்ப வீட்டிலும் எல்லாருக்கும் பிடிக்கும். ஆக நானும் அடிக்கடி செய்வேன்.
உங்க அடை லிஸ்ட்ல இதையும் சேர்த்துகிட்டதுக்கு நன்றி! செய்து பார்த்து சொல்லுங்க கல்ப்ஸ்! :)

---------
வனி,
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி வனி! அதேதான் வனி, நீங்க சொன்னமாதிரி என்னவெல்லாம் செய்து இந்த குட்டீஸ்களை ஏமாற்ற வேண்டியதா இருக்கு (சிலவகை காய்களை சாப்பிட வைக்க) ?!... :)
இந்த முறையில் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுவர்ணா,
உங்களுக்கும் அடை பிடிக்குமா?! சேம் பின்ச்! :) நீங்க சொல்வதும் நல்ல ஐடியாவா இருக்கே! முருங்கைக்கீரை... ம்ம்ம்... எனக்கு ரொம்ப பிடிச்ச, ஆனால் இங்க எனக்கு கிடைக்காத கீரை! :( முருங்கைக்கீரை போட்டு அம்மா, கேழ்வரகு அடை செய்வாங்க பாருங்க சூப்பரா இருக்கும்! :)

கோஸ் சேர்த்து செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க சுவர்ணா!
வாழ்த்துக்களுக்கும் நன்றி!

-------
தனா,
உங்களுக்குமா?!! ஆஹா... அடை கூட்டணி வலுக்கிறதே. சூப்பர்! :)
பாராட்டிற்கு நன்றி தனா.

------
வெண்ணிலா,
உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி! செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னும் மறக்காம வந்து சொல்லுங்க.

அன்புடன்
சுஸ்ரீ

சாந்தினி,
கறிவேப்பிலை பூவை கண்டுக்கொண்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி! :) இனி அடை செய்தால், முட்டைகோஸ் போட்டுதான்னு தீர்மானமா சொன்னது சூப்பர்! :) செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னும் மறக்காம வந்து சொல்லுங்க. நன்றி!

---------
ரேவதி,
நீங்க எந்தமாதிரி அடை செய்துபார்த்து கேட்கறீங்கன்னு தெரியலை. ஆனா அடை பொதுவா, தோசை அளவுக்கு மெல்லியதா ஊற்றாமல், கொஞ்சம் திக்காக போட்டு, மிதமான தீயில் வேகவிட்டு எடுத்தால் சாஃப்ட்டாக வரும். இங்கே ஏகப்பட்ட அடை குறிப்புகள் இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க.
வருகைக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

பாக்கியா,
உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி! நீங்களும் அடுத்து செய்யும்போது இப்படிதான்னு சொன்னதில ரொம்ப சந்தோஷம். கறிவேப்பிலை பூவை பாராட்டியதற்கும் நன்றி! மறக்காம செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னும் வந்து சொல்லுங்க.

----------
வினோஜா,
அடையில் கேரட் போடறது நல்ல ஐடியா, நானும் ஒருமுறை செய்து பார்க்கனும். முட்டைக்கோஸ் போடற ஐடியா உங்களுக்கு பிடிச்சிருந்ததா?! ரொம்ப நன்றி! செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

அன்புடன்
சுஸ்ரீ

கார்த்திகா,
நீங்க உண்மையாவே செம பாஸ்ட்ங்க!!! :) அதுக்குள்ள செய்தே பார்த்திட்டிங்களா?! உங்க கணவருக்கும், பக்கத்து வீட்டு ப்ரண்ட்ஸ்ங்களுக்கும் பிடித்தமானதா இருந்ததுனு சொல்லி என்னை ரொம்ப சந்தோஷப்படுத்திட்டிங்க. :) செய்ததும் கையோட வந்து அதை என்னோட பகிர்ந்து கொண்டதற்கும் சேர்த்து மிக்க நன்றி!

--------
லாவண்யா,

அடை, உங்களுக்கும் பிடிக்குமா?...ஹய்ய்ய்... அடை க்ரூப்பிற்கு இன்னுமொருவர்! மஞ்சள் பூசணி நல்ல ஐடியாவா இருக்கு. இங்கே கிடைத்தால் செய்து பார்க்கனும். நீங்க முடியும்போது முட்டைக்கோஸ் போட்டு செய்து பாருங்க லாவண்யா. எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க.

அப்புறம், எங்க இப்பல்லாம் உங்களை ரொம்ப பார்க்கவே முடிய மாட்டேங்கறது! எப்படி இருக்கிங்க? பசங்க இரண்டுபேரும் நலமா? இரண்டொரு இடத்தில உங்களை தேடி பதிவு போட்டேன், பார்த்திங்களான்னு தெரியலை. எனிவே, டேக் கேர்.

வாழ்த்துக்களுக்கு நன்றி லாவண்யா.

அன்புடன்
சுஸ்ரீ

Tnks susri.anna naan entha adai nathu eve tri pannitan.naala vanthu ana karuvapilai puva marthutan.unga name vithyasama iruku.

Be simple be sample

அன்பு சுஸ்ரீ,

அடை ரொம்பப் பிடித்தமான டிஷ். முருங்கைக் கீரை, வாழைப்பூ, சுரைக்காய் சேர்த்து செய்திருக்கேன். இதுவரை முட்டைக் கோஸ் சேர்த்ததில்லை. இனிமேல் இதையும் ட்ரை செய்து பார்க்கிறேன்.

பாராட்டுக்கள் சுஸ்ரீ

அன்புடன்

சீதாலஷ்மி

நேற்று உங்கள் அடை குறிப்பு செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது + வந்தது . சாப்பிட்டு விட்டு என் கணவரும்,மகனும் நல்லா இருக்கு என்று பாராட்டினார்கள். நன்றி

மிக்க நன்றி!

ரேவதி,

இப்பதான் பார்க்கிறேன் உங்க பதிவை. அடை நல்லா வந்ததா? உங்களுக்கு பிடித்திருந்த‌தில் ரொம்ப சந்தோஷம். குறிப்பை செய்து பார்த்து மறக்காம இங்கே வந்து சொன்னதற்கும் மிக்க நன்றி ரேவதி! :)

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு சீதாலஷ்மிமா,

எப்படி இருக்கிங்க? இன்றுதான் பார்க்கிறேன் உங்க பதிவை!, தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும்.

ஓ... நீங்களும் நம்ம கட்சிதான், அடை பிடிக்கும் கட்சி!! :) உங்களுக்கு குறிப்பு பிடித்திருந்த‌தில் மிக்க மகிழ்ச்சி. முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்கம்மா. பாராட்டிற்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

FELZIA,

அடை செய்து பார்த்திங்களா, நல்லா வந்ததா? நன்றி! உங்கள் குடும்பத்தாருக்கு, முக்கியமா உங்க மகனுக்கு ரொம்ப பிடித்திருந்தது என்பது கேட்டு ரொம்ப சந்தோஷம். செய்துபார்த்து மறக்காம வந்து சொன்னதற்கும் மிக்க நன்றி!

நன்றி achala ! :) (தோழி, உங்க பெயர் சரியா தெரியலை!)

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய்...

அடை செய்தாச்சு.. :) இன்று காலை உணவு தக்காளிச் சட்டினியுடன் உங்கள் அடை தான்.. நான் இருகைபிடி கார்ன் கூட சேர்த்து வெங்காயம் சேர்க்காமல் செய்தேன்.. சுவை நன்றாக இருந்ததாகக் கணவர் சர்டிஃபிகேட் கொடுத்தார் :)

பொதுவாகப் பருப்புகளைக் கொண்டு மட்டும் செய்யும் அடை இரண்டுக்கு உண்ண முடியாது.. ஆனால் இது அப்படி இல்லை.. எல்லாம் முட்டைக் கோஸின் மாயம் தான் என நினைக்கிறேன்.. நல்ல குறிப்பு வழங்கியமைக்கு நன்றி! :)

சுஸ்ரீ நேற்று இரவு (நேற்று மட்டுமில்லை நிறைய முறை செய்திருக்கேன் அனா இப்ப தான் பின்னுட்டு கொடுக்கிறேன் மன்னிக்கவும்) செய்தேன். ரொம்ப சுவையா இருந்தது. இதன் சுவை எனக்கு ரொம்ப புடிக்கும் முட்டைக் கோஸ் சேர்கிறதினால். சுப்பர் அடை வாழ்த்திக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன