நண்டு ஃப்ரை

தேதி: February 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (11 votes)

 

சதைப்பற்றுள்ள நண்டு - 4
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை- 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்
கார்லிக் பவுடர் - கால் டீஸ்பூன்
அல்லது 4 பல் பூண்டு தட்டிக் கொள்ளவும்
எலுமிச்சை சாறு - பாதி பழம்
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


 

நண்டை ஓடு கழட்டி மிகப் பெரியதாக இருந்தால் பாதியாக துண்டு போடலாம்,மீடியம் சைஸ் என்றால் நண்டை முழுதாக காலோடு அல்லது இல்லாமல் விருப்ப்ம் போல் சுத்தம் செய்து அலசி எடுக்கவும்.

சுத்தம் செய்த நண்டில் மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,மஞ்சள் தூள்,தட்டிய பூண்டு,உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.

நன்கு மசாலா சார்ந்து ஊறிய பின்பு நண்டை ஒரு நான்ஸ்டிக் தவாவில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி போட்டு இரண்டு பக்கமும் வேகும் படி பொரித்து எடுக்கவும்.

சுவையான நண்டு ஃப்ரை ரெடி.நல்ல மணத்துடன் இருக்கும். சாப்பிடவும் இலகுவாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நண்டு ஃபிரை செய்து எங்க அம்மா செய்யும் நண்டு ஃபிரையை நியாகப்படுத்திட்டீங்க. எங்க அம்மா இதனுடன் தேங்காய் பால், சீரகம் சேர்த்து செய்வாங்க. போட்டோவை பார்க்கும்போதே அதன் வாசம் மனதை நிறைக்கிறதே...............எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ். வாழ்த்துக்கள் ஆசியா.......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

கருத்திற்கு நன்றிங்க.உங்க அம்மா முறைப்படியும் செய்து பார்க்கிறேன். டிப்ஸ்க்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சூப்பரா இருக்கும்னு தோணுது ஆசியா. எப்பவாவது நிச்சயம் ட்ரை பண்ணுவேன். மார்க் பண்ணி வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்