மறுசுழற்சி (Recycling) முறையில் கைவினை பொருட்கள் செய்யலாமே!!!

மறுசுழற்சி முறையில எந்த எந்த பொருட்கள் வைத்து என்ன என்ன செய்யலாம்ன்னு தெரிந்தவங்க(கண்டிப்பாக அனைவருக்கும் தெரியும்) சொல்லுங்க. நம் கைவினை பகுதியில பல குறிப்புகள் இருக்கு மறுசுழற்சி முறையில் செய்ய!. ஆனால் இன்னும் வார்த்தையாய் சொல்ல பல இருக்கும். அதை எல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன். குழந்தைகளுக்கு வீட்டில் சுலபமா செய்து கொடுக்கலாம், வீட்டை அலங்காரம் செய்யலாம், இல்லை வேற வழியில ஒரு பயன்படுத்திய பொருளை மறு முறை பயன்படுத்த ஏதாவது ஐடியாஸ் கொடுங்க...

பயனுள்ள தலைப்புக்கள் பல, கர்ப்பம், குழந்தை, விளையாட்டு, புதிர், வினா விடை, பொழுது போக்குகள்... இப்படின்னு பல இழைகள் இருக்கு!!! எல்லாத்தையும் பற்றி நிறைய நிறைய பேசியாச்சு... ஆனா இப்பவும் ஒரு பொழுது போக்கு இழைக்கு உள்ள வரவேற்பு பயனுள்ள இழைக்கு இல்லங்கறது என் ஆழமான கருத்து... இங்கே தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், குழந்தைகளுக்காக, வீட்டு உபயோகத்திற்கு என்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பயனுள்ளதாய் சொல்லுங்க.

உதாரணமா... ஒரு பழைய ஆடையை தையல் பழக பயன்படுத்தலாம்... அதில கிரியேட்டிவா என்னவெல்லாம் செய்யலாம்.... அதுவே ஒரு T-Shirt ஆக இருந்தா கழுத்து மற்றும் கைகளை நீக்கிவிட்டு ஒரு பை தைக்கலாம்.... இப்படித்தான்.

குழந்தைகளுக்கு செய்ய நிறைய இருக்கு... நானும் யோசிக்கிறேன்... நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.

உமா ஏதோ கேக்குறாங்க பாருங்க!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள்....... எல்லாம் யோசனை சொல்லுங்க.....
லாவண்யா.....என்ன இது....உங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லையா???
நான் நேரமிருக்கும் பொழுது வந்து தெரிஞ்சதை சொல்றேன்.

ம்ம்... எனக்கு இதுலையும் ஒன்னும் அடிகம் தெரியாது... இருந்தாலும் சொல்லிடனும்ல... அதான் வந்தேன் ;) எனக்கு தெரிஞ்சு சில:

பழைய சின்ன சின்ன அட்டை பெட்டிகள் என்றால் கைவினை செய்ய பயன்படுத்தலாம்... பென் ஹோல்டர், அடுப்படியில் நைஃப் ஹோல்டர், டிஷூ பேப்பர் ஹோல்டர், கிஃப்ட் பாக்சுகள், ஜுவெல் பாக்சுகள் போன்றவை.

பெரிய அட்டை பெட்டிகள் என்றால் குழந்தைகளுக்கு டாய் ஹவுஸ் அவங்க உள்ள போய் விளையாடும் விதமா, டாய்ஸ் வைக்கும் விதமா ஏதும் ட்ரக் போல டிசைன் பண்னி பயன்படுத்தலாம்.

பழைய ப்ளாஸ்டிக் பாட்டில் போன்றவை என்றால் கைவினை செய்து ஃப்லவர வேஸ், அலங்கார பொருளா மாற்றலாம்.

இன்னும் ஏதாவது நினைவுக்கு வந்தா சொல்றேன். அந்த காலத்தில் நோட் புக் வாங்குவது கூட எங்க வீட்டில் பெரிய செலவு தான்... அதனால் வருஷம் முடிஞ்சதும் அம்மா எங்க பழைய நோட் புக்ல எழுதாத பக்கம் எல்லாம் கிழிச்சு வைச்சு கடையில் கொடுத்து பைண்ட் பண்ணி வாங்குவாங்க. அதுவே 2, 3 நோட் வந்துடும் புதுசா. பழைய எஸே ரைட்டிங் நோட் எல்லாம் ஒரு பக்கம் தான் எழுதுவோம், அதனால் அடுத்த வருஷம் வீட்டில் படிச்சதை எழுதி பார்க்க ரஃப் நோட்டா எழுதாத மறு பக்கம் பயன்படும்.

இப்போ வசதிகள் கூடி போச்சு பிள்ளைகளூக்கு... இதெல்லாம் மட்டமா தோணும்... :) ஆனா நாங்க ஆப்படிலாம் பயன்படுத்தி அப்போ செலவை குறைச்சோம். ஹாலிடேஸ்ல இதை எல்லாம் தயார் பண்றதே அப்போ எங்களூக்கு பெரிய பொழுது போக்கு. கிச்சன்’ல மளிகை சாமான் எழுத குட்டி குட்டி நோட் புக் நாங்களே தைத்து வைப்போம். அது ஒரு கனா காலம்... இப்போலாம் குட்டீஸ் இதெல்லாம் செய்வதில்லை. ரஃப் நோட் கூட காசு கொடுத்து தான் வாங்கறாங்க.

சிறு பிள்ளைகளா இருந்தப்போ எங்க வீட்டு எதிரே உள்ள யூகலிப்டஸ் மரத்திலிருந்து கோன் ஷேப்ல ஒன்னும் விழும்... அதை பொறுமையா கலக்ட் பண்ணுவோம்... அதை வைத்து வீடு அது இதுன்னு தரையில் அடுக்குவோம்... காத்தடிச்சா காணாம போகும் நாங்க கட்டின வீடு.. அதன் பின் அம்மா சொல்லுவாங்க, அட்டையில் ஒட்டி வைங்க போகாதுன்னு. கொஞ்சம் கொஞ்சம அவற்ரை ஒட்டி செய்ய ஆரம்பிச்சு, அதன் பின் அவற்றை கலர் செய்து அழகான கைவினைகளை எல்லாம் செய்வது உண்டு. இதே போல பிஸ்தா தோல், வேர்கடலை தோல்... ம்ம்... இப்போ பொருமை இல்லை.

ஆனா அம்மா இன்னும் மாறல... இப்பவும் பழைய தேங்காய் எண்ணெய் பாட்டில் எல்லாம் கலக்ட் பண்ணி, மிச்சம் ஆன ரீப்பர் கட்டைகளை தானே வெட்டி சிறு தேர் (தெப்பல் - நீரில் விடுவாங்களே அது) செய்திருக்காங்க வீட்டில். மிச்சம் ஆன பழைய துணீகளில் சீலை தெச்சு தேருக்கு, அதை நீரில் விட்டா மிதக்க தேங்காய் எண்ணெய் பாட்டில் எல்லாம் அடியில் ஃபிக்ஸ் பண்ணி... அப்பா... அவங்க மர வேலை பார்த்து அசந்துட்டேன். [நாங்க வீட்டில் இல்லாம 1 வருஷம் இருந்தாங்க... அப்போ போர் அடிக்குதுன்னு இதெல்லாம் செய்திருக்காங்க. அது அப்படியே எங்க ஊரில் அவங்க சிறு பிள்ளையா இருந்தபோ பார்த்த கோவில் தெப்பல்]

ஏன் உங்க கதையெல்லாம் புலம்பறீங்கன்னு கேட்காதீங்க... நீங்க கேட்டதும் எனக்கு இது தான் நியாபகம் வந்தது... புலம்பிட்டேன். கோவிக்காதீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சில ஐடியாஸ் கொடுத்து இருக்காங்க. நீங்கள் எதிர்ப்பார்த்து இருப்பதுப்போல் இல்லையென்றாலும் எனக்கு தெரிந்தது சொல்றேன். தீப்பெட்டி வைச்சு சோபா, நாற்காலி, கட்டில் செய்யலாம். பழைய செய்தித்தாளை தண்ணீரில் ஊறவைச்சு வெந்தயம் சேர்த்து கூழ் போல் அரைத்து ஏதாவது ஒரு வடிவமான சில்வர் பாத்திரத்தில் பூசி வெயிலில் நல்லா காயவைக்கனும். நல்லா காய்ந்து இருந்தா தனியே கழன்று வரும். சில்வர் பாத்திரம் வடிவத்தில் பேப்பர் கூழில் செய்த ஒரு பாத்திரம் கிடைக்கும். பழைய தகர டப்பாக்களை பிரித்து எடுத்து சிறிய முறம் செய்வார்கள்.

Hi pops.nalla katiga.enku onnuma nabgam varla.namma kutty papauku mosquito kodi vachiromila.athi vanthal ,vadagam,urukai kaya vikupothu intha kodiyai mala mudi payanpaduthalam.kaka tholai irukathu.palya plastic pookallam namma kuttiesku school assinment kodukupothu ethukuna cut pani use panallam.clock vastaita namma kuttyesku time solikodukalam

Be simple be sample

Hi pops.nalla katiga.enku onnuma nabgam varla.namma kutty papauku mosquito kodi vachiromila.athi vanthal ,vadagam,urukai kaya vikupothu intha kodiyai mala mudi payanpaduthalam.kaka tholai irukathu.palya plastic pookallam namma kuttiesku school assinment kodukupothu ethukuna cut pani use panallam.clock vastaita namma kuttyesku time solikodukalam

Be simple be sample

உமா
ரொம்ப அருமையான இழை.ஆனா எனக்கு ஒன்றும் தெரியாது .
வனிதா
உங்க அம்மாவின் கைத்திறனை படித்து ஆச்சர்யமாக இருந்தது.நான் பத்தாவது தேர்வு விடுமுறையில் தையல் கற்றுக்கொள்ள நினைத்த போது என்
அப்பா மறுத்துவிட்டார்"உன் நோக்கம் பொறியாளர் ஆவது மட்டுமே என்று".எங்கள் வீட்டில் அனைவரும் நன்கு படித்து இருக்கிறோமே தவிர இது போன்ற
வேலைகள் எதுவும் தெரியாது.
வீட்டில் பலசரக்கு பொருட்களை வைத்து இருக்கும் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களை மாற்றி விட்டேன். இவற்றை மறுசுழற்சி முறையில் வேறு எப்படி பயன்படுத்தலாம்?

மலர்

பழைய ப்ளாஸ்டிக் பாடில்கள், உடைந்து போன பக்கட் எல்லாம் அழகா ஷேப்பா கட் பண்ணி சின்ன சின்ன ரக செடிகளுக்கு தொட்டியா பயன்படுத்தலாம். அதுக்கு கீழே நீர் வடிய மட்டும் சின்ன ஓட்டை போடனும். வீட்டு பால்கனியில் தொங்க விடும் வகையான குட்டி குட்டியான கொடி வகைக்கு கூட பயன்படுத்தலாம். எனக்கு தெரிஞ்சது... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க காகித கூழ் ஐடியா சூப்பர்... சின்ன பிள்ளையா இருந்தப்போ அம்மா இது போல அரைச்சு முறம் பூசுவாங்க. அதில் மிச்சமானதை ஒரு குட்டி கப் போல செய்து கொடுத்தாங்க... எப்படின்னு நினைவில்லை இப்போ.

முறம் செய்வது... இன்னும் கிராமங்களில் இருக்கு. எண்ணெய் டின்னை பிரிச்சு செய்வாங்க.

தீபெட்டி நானும் செய்திருக்கேன் நிறைய. அது மேல வெள்ளை இல்லன்னா கிஃப்ட் பேக்ல வர வ்ரேப்பர் எல்லாம் பயன்படுத்தி ஒட்டி அழ்கா செய்யலாம். நிறைய நியாபகப்படுத்தறீங்க வினோ... சூப்பர்.

இது போல தேங்காய் சரட்டையிலும் கூட கைவினைகள் செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்