பரங்கிக்காய் ரோல்ஸ்

தேதி: February 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

1. கோதுமை மாவு - 1 கப்
2. உப்பு
3. பரங்கிக்காய் - 1 கப்
4. உருளை - 1/2 கப்
5. கேரட் - 1/2 கப்
6. வெங்காயம் - 1/2
7. பச்சை மிளகாய் - 1
8. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை, கொத்தமல்லி
11. எண்ணெய் / வெண்ணெய் - தேவைக்கு


 

பரங்கிக்காய், உருளை, கேரட் அனைத்தையும் தோல் நீக்கி துண்டுகளாக்கி உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்து மசிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கRiவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.
கோதுமை மாவில் உப்பு கலந்து தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவாக பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி பின் மசித்த காய் கலவை சேர்த்து நன்றாக பிரட்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
சப்பாத்திகளை சதுரமாக திரட்டி சுட்டு எடுத்து சூடாக இருக்கும்போதே உள்ளே கலவையை வைத்து சுருட்டி ரோல் செய்யவும்.


சுவையான சத்தான ரோல் இது. விரும்பினால் இந்த கலவையுடன் சிறிது சர்க்கரையும் சேர்க்கலாம். இதில் வெறும் பரங்கிக்காய் மட்டுமே கூட பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்