வாழைக்காய் ஃப்ரை

தேதி: February 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (9 votes)

 

வாழைக்காய் - ஒன்று
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப‌
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் வாழைக்காயை கழுவி துடைத்து, தோலை சீவிவிட்டு, ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல், கால் இன்ச் அளவு தடிமனான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இதனுடன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்து சேர்த்து பிசறி வைக்கவும். (எல்லா வாழைக்காய் பத்தைகளிலும் மசாலா சேர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.)
இப்படியே ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, சூடானதும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு ஒரு தேய் தேய்த்துவிட்டு, ஒவ்வொரு வாழைக்காய் துண்டுகளாக படத்தில் காட்டியதுபோல வைக்கவும். சுற்றிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும்.
சில நிமிடங்கள் கழித்து, காய் வெந்ததும், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக திருப்பி விடவும். தேவைப்பட்டால், இப்போது மேலும் சிறிது எண்ணெய் சுற்றிலும் விடவும்.
அடுத்து சில நிமிடங்களில் சுவையான, சாஃப்ட்டான வாழைக்காய் ஃப்ரை தயார். இது ரசம் சாதம், தயிர் சாதம் கூட வைத்து சாப்பிட்ட அருமையாக இருக்கும்.

அடுப்பை, மிக அதிக தீயில் வைக்காமல், சிறிது குறைத்து வைத்து செய்தால் வாழைக்காய் தீயாமல் நன்றாக வேகும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்பிலான சூப்பரான ஃப்ரை. அவசியம் செய்துடறேன்... இங்க பிரெச்சனை இல்லாம கிடைக்க கூடியதே வாழைக்காய் தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சுஸ்ரீ,

நீட்டாக ப்ரசெண்ட் செய்திருக்கீங்க.

இனிமேல் இந்த முறையில் செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

வாழைக்காய் ப்ரை ஈஸியா இருக்கு. நான் எண்ணெயில் பொரிச்சு செய்து இருக்கேன். இனி உங்க செய்முறை தான்.

வாழ்த்துக்கள் சுஸ்ரீ, வாழைக்காய் ஃப்ரை ரொம்ப ஈசியா இருக்கு எண்ணெயில பொரிச்சுதான் செஞ்சுருக்கேன் இந்த முறை நல்லாருக்கே கண்டிப்பா செய்துடுறேன் இங்க வாழைக்காய்க்கு பஞ்சமே இல்லை :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ, ஆனாலும் எங்களை மாதிரி ஆளுங்களை இப்படி கொல்ல கூடாது. எனக்கு இங்கே வாழைக்காயே கிடைக்காது. அப்படியே தப்பிதவறி கிடைச்சாலும் வெளியே பச்சையாவும் உள்ளே மஞ்சளாவும் இருக்கும். நல்ல சுவையான, எளிமையான குறிப்பு பா. வாழைக்காய்க்கு நான் அடிமை. ஆனா பாருங்க ரெண்டரை வருஷமாச்சு வாழைக்காயை சாப்ட்டு ;( ஊருக்கு போனா டெய்லி இந்த குறிப்பு தான் போங்க. அம்மா வீட்ல நிறைய வாழை மரம் இருக்கு. அதில் மாத்தி மாத்தி எப்படியோ காய் காய்ச்சுடும்.

அழகா ப்ரெசென்ட் பண்ணியிருக்கீங்க சுசீ. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்க வாழைக்காய் வறுவல் நல்லா இருக்குங்க.எண்ணெய் குறைவா பயன்படுத்தி இருப்பதால் கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்.
நல்ல ப்ரசென்டேஷன்.காயை கட் பண்ணி தண்ணியில் போடாவிட்டால் கறுத்துவிடாதா?

நல்ல குறிப்பு வாழைக்காய் பிடிக்காத ஆள் இருப்பாங்களா எனக்கு ரொம்ப பிடிக்கும் வித விதமா செய்து பார்க்க இந்த முறைல செய்துட்டு சொல்லுறேன் வாழ்த்துக்கள் by Elaya.G

குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

முத‌ல் ஆளா வந்து பாராட்டின‌துக்கு ரொம்ப‌ ந‌ன்றி வ‌னி!
வாழைக்காய் ஈஸியா கிடைக்குமா? நல்லதா போச்சு. அப்ப செய்து பார்த்துட்டு ம‌ற‌க்காம‌ சொல்லுங்க‌ எப்ப‌டி இருந்த‌‌துன்னு... ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு சீதால‌ஷ்மிமா,

நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கு உங்க‌ ப‌திவுக‌ளை பார்ப்ப‌தில் மகிழ்ச்சி!
அதில‌யும் உங்க‌ பாராட்டுக்கள் கிடைச்ச‌தில‌ ரொம்ப சந்தோஷ‌‌மா இருக்கு. :) இது எங்க‌ம்மாவின் செய்முறைம்மா. உங்களுக்கு முடியும்போது அவசியம் செய்து பாருங்க. மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சிப்ஸ் போல மெல்லியதாய் சீவி எண்ணெயில் பொரிப்பதும் உண்டு. இப்பப்ப கொஞ்சம் டீப் ஃப்ரையை கம்மி பண்ணிக்கலாமேன்னு இப்படி அடிக்கடி செய்வதுண்டு. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க வினோ. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஆமாம் சுவர்ணா, நான் வினோக்கிட்ட சொன்னமாதிரி சிப்ஸ் போல பொரித்து எடுத்தா சூப்பராத்தான் இருக்கும். :) இது கொஞ்சம் ஹெல்தி ஆப்ஷன் + நல்லாவும் இருக்கும். என் பசங்க எல்லாம் சாப்பாடு நேரம் வரை வெயிட் பண்ணாம தனியாவே சாப்பிட்டுடுவாங்க..... என்னைமாதிரியே...ஹிஹி.. :)

நீங்களும் செய்து பாருங்க, எப்படி இருந்த‌‌துன்னு சொல்லுங்க. பாராட்டிற்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வாழைக்காய் ப்ரை பார்க்கவே அருமையாக இருக்கு.செய்து பார்த்துட்டு பதில் தரேன்.
உங்க நெய்யப்பம் 2 முறை செய்திட்டேன்,ரொம்ப சுவை.அதில் ஒரு சந்தேகம் கேட்டிருக்கிறேன் மேடம்.நேரம் கிடைக்கும்போது பதில் தாருங்கள்.நன்றி.

அச்சச்சோ... உங்களுக்கு கிடைக்காதா?!! எங்கப்பா நம்ம வனி & சுவர்ணா... உடனடியா ஒரு 2 டசன் வாழைக்காய் நம்ம கல்ப்ஸ்க்கு பார்சல் ப்ளீஸ்....டோன்ட் ஒரி கல்ப்ஸ்... வந்திட்டே இருக்கு வாழைக்காய்! :):)

எங்களுக்குக்கூட முந்தி எல்லாம் இவ்வளவு ஈஸியா கிடைக்காது. இப்பெல்லாம் இந்தியன் ஸ்டோர்ஸ் போனால் கிடைக்கிறது. ஆமாம் கல்பனா, நமக்கு பிடிச்ச ஐய்ட்டம் இங்க கிடைக்கலைன்னா எத்தனை கஷ்டம்னு தெரியுதுப்பா... நான் இங்கே கிடைக்காத, எனக்கு பிடிச்ச முருங்கைக்கீரைக்கு ஏங்குவதுப்போல... :( சரி, என்ன செய்யறது. ஊருக்கு போகும் போது ஆசையை தீர்த்துக்குவோம்!... :)

//அழகா ப்ரெசென்ட் பண்ணியிருக்கீங்க சுசீ. வாழ்த்துக்கள் :) //

பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கல்பனா!

நீங்க சுசீன்னு சொன்னதும் எனக்கு 'தீபாவளி' படம் நியாபகம் வந்திடுச்சி! :))

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி மலர், இளையா

பாராட்டிற்கு ந‌ன்றி ம‌லர்!. எண்ணெய் குறைவாக‌வும் இருக்கும், ஈஸியாக‌வும் செய்துட‌லாம். அவ‌சிய‌ம் செய்து பாருங்க‌, எப்ப‌டி இருந்த‌‌தென்றும் சொல்லுங்க. நன்றி!

காய் ந‌றுக்கிய‌ உட‌னே உப்பு, சாம்பார்த்தூள் போட்டு பிச‌றி வைப்ப‌தால் க‌றுக்காது. ந‌றுக்கிய‌ காய், வெளியே நிறைய‌ நேர‌ம் வைத்துப்பிற‌கு சமைக்க‌ போறீங்க‌ன்னா, த‌ண்ணில‌ போட்டு வைத்திருந்து பயன்படுத்தலாம்.

------------

ஹாய் இளையா
உங்களுக்கும் வாழைக்காய் பிடிக்குமா? அப்ப, அவ‌சிய‌ம் செய்து பார்த்து எப்ப‌டி இருந்த‌‌தென்று மறக்காம சொல்லுங்க. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

இன்னிக்கு மதியம் ரசத்துடன் தொட்டுக்கொள்ள இதுதான்...சூப்பரா இருந்தது..உங்களுடைய ப்ரொக்கலி மசாலாவும் செய்து பார்த்து பாராட்டும் வாங்கிவிட்டேன். சுவையான குறிப்புகளுக்கு நன்றி.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

டிஷ் சூப்பர்.. ரெண்டு நாளா வாழைக்காய் இங்கே பக்கத்தில் கிடைக்கல.. வாழைக்காயிற்காக வெயிட்டிங்.. வந்ததும் செய்ய வேண்டும்.. ஒரு டவுட் இது கொஞ்சம் பழமாக இருக்க வேண்டுமா.. நீங்க வெட்டி வைத்திருக்கும் துண்டுகளைப் பார்க்கும் போது சற்று பழவெட்டோ எனத் தோன்றுகிறது.. தவிர நீரிலும் போட்டு வைக்க வில்லை.. எப்படி காரல் அடிக்காமல் இருக்கிறது?

சுஸ்ரீ,

இன்று உங்கள் குறிப்பில் செய்தது போல் வாழைக்காய் வறுவல் செய்தேன், ருசி நன்றாக இருந்தது.

நன்றி, மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துகள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ரொம்ப ஈஸியா, ரொம்ப டேஸ்டியா, ரொம்ப க்ரிஸ்பியா இருந்துச்சு சுஸ்ரீ. நன்றி

சுவர்ணாவின் தக்காளி சாதத்துக்கு இவர் தான் ஜோடி ;) அருமையா ஜோடி பொருத்தம். சூப்பரா இருந்தது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா