மலச்சிக்கல்

ஹாய் தோழீஸ்,

என் குழந்தைக்கு 1 1/2 வயது ஆகுது. அவளுக்கு நான் பால், குழம்பு சாதம், Manna Health Mix தருவேன். அவள் எப்போதும் freeya வெளிய போனதே இல்லப்பா. ரொம்ப கஷ்ட படுவா. ரொம்ப முக்கி தக்கி தான் வெளிய போவா. அவளுக்கு ஏன் இப்படி இருக்கு ? இது சரியாக என்ன செய்ய வேண்டும் ? தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

1 1/2 வயசாயிடுச்சுல்ல... இனி தினம் ஒரு வாழைப்பழம் கொடுங்க. தினமும் காலையில் 1 பாலாடை வெது வெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி சர்க்கரை கலந்து குடிக்க குடுங்க. இது மோஷன் போக வைக்கும். தினமும் போக பழகிட்டாலே மோஷன் ஃப்ரீயா போக ஆரம்பிச்சுடுவாங்க. பால் அதிகம் சேர்க்காதீங்க, அது மோஷன் பிரெச்சனை பண்ணும். அப்படி கொடுக்கும் பாலும் வெது வெதுப்பா இருக்கட்டும், ஆறின பால் வேண்டவே வேண்டாம். பருப்பு தினமும் உணவில் சேருங்க. நல்லா வெது வெதுப்பான தண்ணி குடிக்க வைங்க.

1 மாதம் ட்ரை பண்ணி பாருங்க... அப்பவும் சரி வரலன்னா அவசியம் பீடியாட்ரிஷனை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா எனக்கு உதவி செய்ய ஒருத்தரும் இல்லையா ???

ஜென்னிவினோ

Dare To Paly With Life

அவள் தினமும் வெளிய போய்டுவா. அவளுக்கு தினமும் சிரித்து வெது வெதுப்பான தண்ணி, செவ்வாழை, நாட்டு பழம், ரஸ்தாளி பழம் தரேன். இருந்தும் கஷ்டபடுரா

ஜென்னிவினோ

Dare To Paly With Life

ஒன்றரை வயது குழந்தைக்கு தினமும், பருப்புடன், காய்கறிகள் அனைத்தும் கலந்து வேகவைத்து மசித்து நெய் சேர்த்து தரலாம். இரண்டு நாளுக்கொருதரம் பருப்புடன் கீரை சேர்த்து (முருங்கை தவிர்த்து) வேகவைத்து நெய் சேர்த்து தரலாம். பழ ஜூஸ், வாழைப்பழம்,சப்போட்டா, காய்கறி சூப் போன்றவற்றை மாற்றி மாற்றி தரலாம். அடிக்கடி தண்ணீர் தந்து குடிக்க செய்யுங்கள். நாளாக நாளாக சரியாகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஏங்க மெனக்கெட்டு அவங்க மேல சொல்லியிருக்காங்க எனக்கு யாருமே சொல்லலையான்னா எப்படி??

மன்னிச்சிருங்க thlika நான் பார்க்கல அதான்.
எனக்காக உங்கள் நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி கருத்து தெரிவித்ததற்காக நன்றிகள் பல.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மன்னிப்பெல்லாம் சொல்லிடாதீங்க.உங்களை மட்டும் சொல்லலை நிறைய பேர் மேல அஞ்சு ஆறு பதிவு இருந்தாலும் அவங்களுக்கு புடிச்ச பதிலுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போயிடுவாங்க.அதான் சொன்னேன்

ஜெனி நீங்க ஹெல்த் மிக்ஸ் குடுக்கிறீங்கலா அத கெட்டியா இல்லாம அதாவது செரலாக் மாதிரி குடுக்காதிங்க நல்லா கூழ் மாதிரி காய்ச்சி தண்ணியா குடுங்க,உலர் திராட்சை ஊற வைச்சு காலையில வெறும் வயிற்றுல குடுங்க அப்பறம் சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணி குடுங்க இதை 1 வாரம் பின்பற்றி வாங்க அப்பறம் உங்க குழந்தை நல்லா மோஷன் போயிரும்,பாலை தண்ணியாவே குடுங்க,1 அரை வயசு ஆகிருச்சுல உங்க குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமா காரம் சேர்க்க ஆரம்பிங்க பா ....மதியத்துக்கு பழ ஜூஸ் குடுங்க, காய்கள் அதிகமா உணவில் சேருங்க ஜெனி

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஜெனி அடிக்கடி வெது வெதுப்பான நீர் குடுத்துக்கிட்டே இருங்க உங்க குழந்தைக்கு..... பொண்ணா,பையனா என்ன பெயர் வைச்சுருக்கீங்க பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நீங்க சொன்ன மாதிரி செய்து பார்க்கின்றேன். என் பொண்ணு பெயர் "கிறிஸ்டினா மிலன்". நல்ல இருக்கா?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்