தேதி: February 3, 2012
கம்பளி (Fleece) துணி - விரும்பிய நிறம்
கறுப்பு பெல்ட் (Felt)துணி - சிறிய துண்டு
கண்கள் - 2 பெரிது
சிவப்பு ஸ்டோன் - 1 பெரிது
வெல்க்ரோ / Zip
கத்தரிக்கோல்
தையல் ஊசி
நூல்
கைப்பை செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரே அளவான நீளமான கம்பளி துணிகள் 2 வெட்டவும்.

அதனை ஸ்ராப் (Strap)போல மடித்து பின் செய்யவும்.

அதனை தையல் மெஷினில் அல்லது கையால் தைக்கவும்.

முகத்திற்கு வேறொரு அகலமான கம்பளி துணியை இரண்டாக மடித்து நீள் அரை வட்டமாக வெட்டவும்.

வேறொரு நீளமான கம்பளிதுணியை இரண்டாக மடித்து படத்தில் காட்டியது போல இரண்டு ஜோடி காதுகள் வெட்டவும்.

காதுகள், முகம் என்பவற்றை தைத்து சரியான பக்கத்திற்கு திருப்பவும்.

பின்னர் ஒரு பக்க மேல் விளிம்பில் இரு காதுகளையும் வைத்து பின் செய்து அதனுடன் ஸ்ராப்பையும் சேர்த்து பின் செய்யவும்.

பின்னர் அதனை தைக்கவும்.

கண்களை பொருத்தமான இடத்தில் சுப்பர் க்ளூவால் அல்லது க்ளூ கன்னால் ஒட்டவும். சிவப்பு நிற ஸ்டோனை வாய் பகுதியில் ஒட்டவும். கறுப்பு பெல்ட் (Felt) துணியில் 6 சிறிய துண்டுகள் வெட்டி இரு கரையிலும் மூன்று மூன்றாக விஸ்கர்ஸ் ஒட்டவும்.

கைப்பையின் உட் புறத்தில் வெல்க்ரோ அல்லது சிப்பர் வைத்து தைக்கவும்.

பின்னர் ஒரு காது பகுதியில் செயற்கைப் பூ அல்லது பூ ப்ரோச் ஒட்டி விடவும்.

அழகான பூனைக்குட்டி கைப்பை தயார். செய்வதும் இலகுவானது.

Comments
பூனைக்குட்டி கைப்பை :-)
ரொம்ப க்யூட்டா இருக்கு.. அழகு.... :-)
KEEP SMILING ALWAYS :-)
Nila
Super.intham thuni enga kidikum.naga neega aratai arangamlathana iruthiga eppa vanthiga.
Be simple be sample
கைப்பை..
வாவ்.. ரொம்ப க்யூட்டா இருக்கு.. ;)
பிங்க் கேட்
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு, பிங்க் கலர் அசத்தல்
நர்மதா
பூனைக்குட்டி கைப்பை ரொம்ப அழகா இருக்கு. இந்த fleece துணியிலேயே மூன்று விதமான பை சொல்லி கொடுத்துட்டீங்க. இந்த மாதிரி துணி கிடைச்சா கண்டிப்பா செய்துப்பார்பேன். வாழ்த்துக்கள்.
நர்மதா ரொம்ப நன்றி
நர்மதா கலக்குறிங்க போங்க. உங்க பிள்ளைகளின் அறைக்கான சுவரோவியம் பார்த்து நானும் அதே மாதிரி எங்க வீட்ல செய்தேன் பா. என் husband
உனக்குள்ள இவ்ளோ திறமையான்னு அசந்து போயிட்டாரு. ஆனா எங்க வீட்டு ரெட்டவாலு தான் அதை நோன்டிட்டே இருக்கு. போடோஸ் எடுத்து வச்சிருக்கேன். சீக்கிரமே உங்களுக்கு அனுப்புறேன். bird house மாதிரி செய்து அதில என் பையனோட போட்டோ ஒட்டி வச்சிட்டேன். இது மாதிரி wall decorations ஐடியா செய்து காட்டுங்க பா. ரொம்ப நன்றி
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
I AM TRIED . REALY SUPER.
I AM TRIED . REALY SUPER.
it is really superb
it is really superb