செட்டிநாட்டு உக்காரு

தேதி: February 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (13 votes)

 

பாசிபருப்பு - அரை கப்
ரவை - கால் கப்
தேங்காய் துருவல் - அரை கப்
சீனி - 1 1/2 கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் - 2
முந்திரிபருப்பு


 

பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ரவையை வறுத்து வைக்கவும்.
நெய்யை பாதி அளவை ஊற்றி அதில் முந்திரி பருப்பை வறுத்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
பிறகு வறுத்த ரவையை இதனுடன் சேர்க்கவும்.
வேக வைத்துள்ள பாசிப்பருப்பை இதனுடன் சேர்த்து கிண்டவும்.
கொஞ்சம் கெட்டியாக வந்தவுடன் சீனி சேர்த்து, பிறகு மீதம் உள்ள நெய், ஏலக்காய் சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்.
மிதமான தீயில் வைத்து நெய் நன்றாக வெளியில் வரும் வரை கிண்டவும்.
சுவையான செட்டிநாடு உக்காரு ரெடி.

நெய் அரை கப் சேர்க்க விரும்பாதவர்கள் நெய் பாதி, எண்ணெய் பாதி சூடு செய்து சேர்த்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது உங்கள் முதல் குறிப்பா??? ரொம்ப நல்லா இருக்குங்க. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். அழகா அனுப்பி இருக்கீங்க... பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செட்டிநாடு உக்காரு அல்வா மாதிரி நல்லா இருக்கு. டேஸ்ட் சூப்பரா இருக்கும் தெரியது செய்துப்பார்க்கிறேன். முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள். இன்னும் இதுப்போல பல சுவையான செட்டிநாடு உணவுகளை எங்களோட பகிர்ந்துக்கனும்.

ஆஹா ஆரம்பமே அசத்தலான சாப்பாட்டுக்கு பேமஸான செட்டிநாடு உணவை செய்து அசத்து காட்டியிருக்கீங்க. இதை நாங்க உக்கரைன்னு சொல்லுவோம், சின்ன வயசுல சாப்பிட்டு இருக்கேன் செம டேஸ்ட்டா இருக்கும் நிச்சயம் செய்து பார்ப்பேன். வாழ்த்துக்கள் அனு தொடர்ந்து குறிப்புகள் கொடுத்து அசத்துங்க

பார்க்கவே நல்லா இருக்கு..:) மேலும் பல குறிப்புகள் கொடுங்க..

ரொம்ப நல்ல இருக்கு பக்கவே:)))) சூப்பர்:)

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

ரொம்ப நல்ல குறிப்புங்க போன வாரம் அறுசுவை ல இந்த குறிப்ப படத்தோட இருக்கானு தேடுனேன் இந்த வாரம் வந்துடுச்சு மிக்க நன்றி வாழ்த்துக்கள் இன்னும் நிறைய குறிப்புகள அல்லி விடுங்க by Elaya.G

முத‌ல் குறிப்புக்கு வாழ்த்துக்க‌ள் அனு!

செட்டிநாட்டு உக்காரு பார்க்க‌வே ரொம்ப‌ அழ‌கா, டெம்பிங்கா இருக்கு!! :)பாராட்டுக்கள். அருமையான‌ ஒரு ஸ்வீட்டோட‌ ஆர‌ம்பிச்சிருக்கிங்க... தொடர்ந்து பல குறிப்புகள் தரவும் வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

Parkavae romba supera iruku. Favourites add pannitean. Kandipa try pannitu solrean.

என்னுடைய முதல் சமையல் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி.
அறுசுவைக்கு, எங்க ஊர்(காரைக்குடி) ஸ்பெஷல் ஐய்ட்டம் எல்லாவற்றையும் செய்து காண்பித்து, அனுப்பனும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை, அதுக்கு இன்னைக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
செய்து பாத்துட்டு எப்படி வந்ததுன்னு கண்டிப்பா சொல்லுங்க.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நம்ம ஊரு உக்காரு சூப்பர்ப்., ஆமாங்க நானும் காரைக்குடி தான்., முதல் குறிப்பே ஸ்வீட்டோட ஆரம்பிச்சுருக்கீங்க., கலக்குங்க., வாழ்த்துக்கள்.,

அனுஷ்யா நம்ம ஊர்கார பொண்ணா நீங்க ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சமாய்ச்சிட்டீங்க போங்க முதல் குறிப்பா அசத்துங்கோ,வாழ்த்துக்கள் அனுஷ்யா...பார்க்கவே சூப்பரா இருக்கு ............

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அனுஷ்யா இன்னும் நிறைய நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்பாக்குறோம்...........ஸ்வீட்ஸ்,பலகாரம் எல்லாம் பண்ணி அனுப்புங்கோ பா....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நல்லா சுவையாக இருந்தது செஞ்சு சாப்பிட்டாச்சு,வாழ்த்துக்கள்.

நம்ம ஊரு உக்ரா ரெசிபி அம்மா கிட்ட கேட்டு செய்யனும்னு நினைச்சேன், உங்க குறிப்ப பார்த்த உடனே செஞ்சாச்சு. டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு. மேலும் குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் அனு.

சத்யா

நீங்க எல்லோரும் காரைக்குடியா, கருத்துக்கள் சொன்னதுக்கு நன்றிங்க.
ரீம், சத்யா செய்து பாத்தாச்சா ரொம்ப சந்தோஷம்.
கண்டிப்பா தொடர்ந்து பலகாரங்கள் செய்து சாப்பிட்டு, குறிப்புகள் மட்டும் அனுப்புறேன், ஓகே வா.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நான் காரைக்குடி பக்கம் தான் நீங்க எங்க இருக்கீங்க காரைக்குடி ல ? by Elaya.G

நல்ல ஸ்வீட் செய்திருக்கீங்க.. நிச்சயம் பண்டிகையில் ஒரு பலகாரமா செய்வேன்.. வாழ்த்துகள்...

"எல்லாம் நன்மைக்கே"

நான் செஞ்சு சாப்பிட்டேன் ரொம்ப நல்லா இருக்கு............... இனிப்பா தித்திப்பா இருக்கு.................

பாக்யா: கண்டிப்பா செஞ்சு பாருங்க
அருள்: செய்து பார்த்து பின்னூட்டம் சொன்னதுக்கு நன்றி.
இளைய: காரைக்குடியில் பெரியர்சிலை பக்கத்துல தாங்க வீடு, நீங்க

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

It looks yummy and one more thing don't mistake me am doing first time So I don't know how to type Tamil ... Any body help me

அன்பு அனு... இந்த குறிப்பை செய்து சுவைத்துட்டேன், ரொம்ப அருமையா வந்தது. அவருக்கும் ரொம்ப பிடிச்சுது. ஆனா நான் நீங்க சொன்ன அளவை விட சர்க்கரையும், நெய்யும் குறைவாக தான் சேர்த்தேன். அதுவே எங்களூக்கு போதுமானதா இருந்தது. நல்ல சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி பா உங்க பதிவை இப்போதான் பாத்தேன். செய்து பாத்தாச்சா. ரொம்ப சந்தோஷம். எனக்கு கொஞ்சம் சுகர் தூக்கலா இருந்த புடிக்கும்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

அனு இன்னிக்கு உக்காரு செய்தேன். ரொம்ப சுலபமாகவு சுவையாகவும் இருந்துச்சு. சுவையான குறிப்பு கொடுத்ததற்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!