பாடல்கள் (பீட் சாங்ஸ்) - நேயர் விருப்பம்!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கிங்க? எப்பவும் நல்ல பாடல்கள், காதை பிளக்காத இசையுடன் இருக்கும் பாட்டுக்கள் கேட்க நன்றாகவே இருக்கும். சில சமயங்களில் நமக்கு மிகவும் மென்மையான இசையுள்ள பாடல்கள் கேட்டால் நன்றாக இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் நல்ல ஸ்ட்ராங் பீட் (குத்து பாட்டு இல்லை), கொஞ்சம் துடிப்பான இசையுடன் இருப்பவை கேட்டால் நன்றாக இருக்கும். மனதிற்கு ஒருவித உற்சாகம் வந்த மாதிரி இருக்கும். அந்த வரிசையில், எனக்கு கொஞ்சம் துடிப்பான பாடல்களின் கலக்ஷன் வேண்டும்! :)

உதாரணமா, எந்திரன், பையா படத்தில் வரும் சில பாடல்கள், அப்புறம் சிங்கம் படத்தில் வரும் சில பாடல்கள்... கொஞ்சம் தோழிகள் அவங்கவங்க தங்களோட விருப்பமான பீட் சாங்ஸை எடுத்து விடுங்க... :)

அப்புறம் இங்க நாம கொடுப்பவை, கேட்க நன்றாக இருக்கும் பாடல் என்ற வகையில்தான்... அப்படியே முடிஞ்சா படமும் சேர்த்து சொன்னா நல்லா இருக்கும். :)

என்ன ஆரம்பிக்கலாமா?!!...

முதலில் நானே ஆரம்பித்து வைக்கிறேன்.

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ.... எந்திரன்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை, இப்போ துடிக்கிறதே... ‍ சிங்கம்
என்னமோ ஏதோ கண்கள் துடிக்குது... கோ
துளித்துளி துளி மழையாய் வந்தாளே.... பையா
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்... பையா

தோழிகளே, நீங்களும் பாட்டுப்பாடிட்டு போங்க... நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வள்ளியே சக்கர வள்ளியே ,மல்லியே சந்தன மல்லியே-எங்கேயும் காதல்.என் உச்சி மண்டையில சுர்ன்ங்குது உன்னனான் பாக்கயில கிர்ருங்குது._வேட்டைக்காரன்,ரொம்ப பேமஸான நாக்கு முக்க சாங்க ரொம்ப பிடிக்கும்,அட்ரானா நாக்கு முக்க நாக்கு முக்கா.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
கொடை ஒன்னு கொடை ஒன்னு தா கிளியே - தாஜ்மஹால்

அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை
தூரத்தில் அவள் மட்டும் - ரிதம்

டாக்ஸி டாக்ஸி
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி - சக்கரகட்டி

ஒத்த சொல்லல அவ உசுர எடுத்து வச்சுகிட்டா ஒரு கண்ணால - ஆடுகளம்

வா பின்லேடா முடியாதே அச்சோடா - மங்காத்தா
(இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடிட்டே இருக்கும் போதே வேற ஒரு ஜானருக்கு அப்படியே மாறும்)

நிலாவ புட்டுவச்ச நெத்தியில ஒட்டவச்ச உய்யால - மன்மதன் அம்பு(first song)

இன்னும் நியாபகம் வரும் போது சொல்றேன்

என் ரசனைகள் மாறிகிட்டே இருக்கும்... கொஞ்ச நாள் முன்னாடி (தனுஷ் பாட்டு) “ஆத்தி ஆத்தி ஆத்தி”னு என் பையன் பாடிகிட்டே டிக்கி ஆட்டிகிட்டிருப்பான்... அப்போ அந்த பாட்டு பிடிச்சுது.

இப்போ கொஞ்ச நாளா “அம்மா... மச்சாங்மா... என்க மச்சியாம்மா...”னு “மச்சான் மச்சான்...” நண்பன் பாட்டை வழக்கம் போல சைனாகாரனாட்டும் பாடுறான்... அதை கேட்டதும் அந்த பாட்டு பிடிச்சுடுச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

how download songs in my mobile and give site

நாங்க கல்லூரி நாட்களில் குரூப்பா ஆட்டம் போட்ட பாட்டெல்லாம் ஞாபகம் வருது....

ஆல் தொட்ட பூபதி நானடா.... யூத்...
கல்யாணம் தான் கட்டி கிட்டு ஓடிப்போலாமா!!!

அதை விட எங்க ஹாஸ்டல் பின்னால் சுடுகாட்டுக்கு போற மெயின் ரோடு......சொல்லனுமா........ சிட்டியின் அத்தனை சவமும் போற வழி......ஒரு நாளில் இரண்டு மூன்று கூட உண்டு....... எங்க ரூமில் காது கிழியும்....... அப்ப போடுவோம் பாருங்க.... ஒரு குத்து நல்லா போட்டு வாங்குவோம்.....இப்போ நினைச்சா செம சிரிப்பு வருது....

சமீபத்தில நான் ஆடிய நாட்டியத்தை சிடியில பார்த்து கூட (நல்ல டான்ஸ் தான்)... எனக்கே செம சிரிப்பு.... பழைய நினைவில... அது நிறைய இருக்கு.......

முடியும் பொழுது இப்படியே என்கதையோட எல்லாத்தையும் எடுத்துவிடறேன்..... நீங்க ஓடிடாதீங்க!!! நானே இப்போ ஜூட் விடறேன்.......

கோழி வெட கோழி எனை கொத்தி திங்கிர=உனக்கும் எனக்கும்,
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் லவ் லவ் என்ட்ராலே=உனக்கும் எனக்கும்.

ஓ சென்யொரிட்டா பேசும் மெழுகு பொம்மயே,
கன்னும் கன்னும் நொக்கியா=அன்னியன்,

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

கண்டவுடன் - ஆசை வெச்சேன்
வேட்டைக்காரன் - சின்ன தாமரை
முத்துக்கு முத்தாக - என்ன பண்ணி தொலைச்ச
முரண் - இதுவரை இல்லாத உணர்விது

எங்க பாப்பாவிற்குப் பிடித்த சாங்ஸ் ஐ சொல்றேன்.

1.ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு- மைனா
2.ராமா ராமா ரமன் கிட்ட வில்லை கேளு-வில்லு
3.ஜோரா டொம்முன்னு மேளத்த கொட்டுறது போடா என்னாஇ நீ துரத்துறதும் மோரோரா தையிரானு கன்னத்தை கடையிறதும் இப்போ இல்லாட்டி எப்போ(படம் பேர் தெரியல.விஜை,த்ரிஷா படம்)
4.ஒல்லி பெல்லி-நன்பன்.
5.எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக்கொண்டிரு

இந்த பாட்டையெல்லாம் எங்க பொண்ணு பாடிகிட்டே(முக்கியமான வார்த்தையை மட்டும் சொல்லிட்டு மத்ததையெல்லாம் ஹம் செய்து) பயங்கர ஆட்டம் ஆடுவா. ரொம்ப காமெடியா இருக்கும் அவ ஆடுறது.

மீதி பாட்டு அப்புறமா சொல்றேன். பை.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

"3" தனுஷ் நடித்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக.... போ நீ போ, கண்ணழகா பாடல் சூப்பர்... நீங்களும் கேட்டு மகிழுங்கள் தோழிகளே....

Be talent infront of everyone...But always be fool infront of your dears... Thats always something Special…:)

மேலும் சில பதிவுகள்