வேர்கடலை உருண்டை

தேதி: February 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நிலக்கடலை - ஒரு கப்
வெல்லம் - கால் கப் (அ) தேவையான அளவு


 

நிலக்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்
வெறும் வாணலியில் நிலக்கடலையை லேசாக வறுக்கவும்
மிக்ஸியில் வறுத்த நிலக்கடலையை கரகரப்பாக பொடிக்கவும்
கடைசியில் வெல்லத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். நொடியில் ரெடியாகும் வேர்க்கடலை உருண்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பும் அருமை, கடைசி படம் ப்ரெசன்டேஷனும் அருமை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Simple, healthy and tastiest recipe

ஈஸியான குறிப்பு. சத்தும் கூட. வாழ்த்துக்கள்

சத்தான சிம்பிள் குறிப்பு ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

இதையே தான் நாங்க கொழுக்கட்டைக்குள்ள பூரணமா வைப்போம் . ரொம்ப டேஸ்டியா இருக்கும் . ப்ரெசன்டேஷன் நல்லா இருக்கு . வாழ்த்துக்கள்.

சிவகாமி

முதல் சமையல் குறிப்பு வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி... வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

சுவையான சத்தான எளிமையான குறிப்பு. அழகா செய்து காட்டியிருக்கிங்க. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

இன்று நான் வேர்க்கடலை உருண்டை செய்தேன். சுவையாக இருந்தது உங்கள் குறிப்புக்கு நன்றி.....