தேதி: February 4, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காரட் - அரைக் கிலோ
சர்க்கரை - ஒரு கப்
பால் பவுடர் - 25 கிராம்
நெய் - அரை கப்
முந்திரிபருப்பு - 10
பாதாம் - 10
ஏலக்காய் - 5
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

காரட்டை துருவி ஒரு தேக்கரண்டி நெய்யில் வதக்கி பாலும், தண்ணீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

ஆற விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

வாணலியில் அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.

சர்க்கரை, பால் பவுடரை நன்கு கலந்து வைக்கவும். கிளறும் விழுது சற்று கெட்டியானதும் சர்க்கரைக் கலவை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கேஸை சிம்மில் வைக்கவும்.

நன்கு சேர்ந்து கொண்டதும், நெய்யைச் சிறிது சிறிதாக விடவும்.

ஹல்வா பதம் வந்ததும் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து இறக்கவும்.

சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய சுவையான ஹல்வா இது.

Comments
ராதா
ரொம்ப தைரியம் தான்... அல்வா குறிப்பு அனுப்ப... ;) நல்லா இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ராதாம்மா
அருமையான காரட் ஹல்வா,படங்கள் ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள்.
கேரட் அல்வா
எனக்கு கேரட் அல்வா னா ரொம்ப புடிக்கும் அதோட கலர் ,டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும் படம் ரொம்ப நல்லா இருக்கு கண்டிப்பா ஒரு நாள் ட்ரை பண்றேன் ராதாம்மா
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
ராதாம்மா
ராதாம்மா,
முதல்ல நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க.
கே.1. இந்த நீளநீளமான அழகான அறிவான கேரட்டை எங்கே வாங்கினீங்க?
கே.2. அல்வா குறிப்பு இத்தனை தைரியமா அனுப்பியிருக்கீங்களே, இதில யாரும் பாம் வைக்க மாட்டாங்களா?
அல்வான்னாலே எனக்கு ரெம்ப்ப்ப்ப பிடிக்கும்.. அதுவும் கேரட்ன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏன்னா, நான் முதல் முதல்ல சமையல்கட்டுக்குள்ள நுழைஞ்சு செய்ய ஆரம்பிச்ச கன்னி சமையலாச்சே.மறக்க முடியுமா? சத்தான,ருசியான குறிப்பு. ஊருக்கு வர்றதுக்குள்ளே ஞாபகப்படுத்திட்டீங்க. சரி, வந்து ஒரு கை பார்க்கறேன் அல்வாவை. வாழ்த்துக்கள்ங்கம்மா :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ராதாம்மா_கேரட் அல்வா சூப்பர்
ராதாம்மா கேரட் அல்வா பார்க்கவே சூப்பரா இருக்கு நானும் செய்வேன் அம்மா பால் பவுடருக்கு பதிலா கடலைமாவு சேர்த்து பண்ணுவேன் உங்க அல்வா கலர்புல்லா வந்துருக்கு இப்பவே சாப்பிடனும் போல இருக்கு அப்படியே எங்க வீட்டுக்கு 1 பார்சல் போட்டு விடுங்க அம்மா வாழ்த்துக்கள் .இது மாதிரி இன்னும் நிறைய குறிப்புகள் செய்து அனுப்புங்க அம்மா வாழ்க வளமுடன்...
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
ராதா ஆன்டி
ரொம்ப அருமையான கலர்புல் ஹல்வா சுபெரோ சூப்பர் வாழ்த்துக்கள் by Elaya.G
பாராட்டுக்கு நன்றி...
குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அ.குழுவினருக்கு மிக்க நன்றி..
//ரொம்ப தைரியம் தான்... அல்வா குறிப்பு அனுப்ப..//
//அல்வா குறிப்பு இத்தனை தைரியமா அனுப்பியிருக்கீங்களே, இதில யாரும் பாம் வைக்க மாட்டாங்களா?//
என்ன வனிதா, கல்பனா நீங்க ரெண்டு பேரும் கேட்ட கேள்விக்கு எனக்கு அர்த்தம் புரியல.....என்ன விஷயம்? யாராவது ஹல்வால பாம் வெச்சாங்களா? விபரமா கொஞ்சம் சொல்லுங்கம்மா!!
பப்பாளி ஹல்வாக்கு பயம் இல்லயா வனிதா??
கல்பனா காரட் சென்னையிலதான் நீல்கிரீஸ்ல வாங்கினேன்...இப்போ இந்த டெல்லி காரட் ஸீஸன்ப்பா....எல்லா இடத்திலயும் கிடைக்குது...நீ சென்னை வரப்போ என் வீட்டுக்கு வா...உனக்கும் செய்து தரேன்..
ஆமாம்....அழகான காரட் சரி....அறிவான காரட்னு எப்படி கண்டுபிடிச்ச?! ஓஹோ....நான் வாங்கினதாலயா?!ரொம்ப தேங்க்ஸ்!!!!
ரீம், தனா வாழ்த்துக்கு நன்றி...
தனா கன்டிப்பா செய்து பார்த்து சொல்லு..
.
கவிதா...உனக்கு நாளைக்கு ஹல்வா குரியர்ல பார்சல் பண்ண நான் ரெடி....ஆனா நம்ம வனிதாவும், கல்பனாவும்தான் பயமுறுத்தறாங்க....என்ன செய்ய??!!
இளயா....எப்படி இருக்க? பாராட்டுக்கு நன்றி...
ராதாம்மா
//என்ன வனிதா, கல்பனா நீங்க ரெண்டு பேரும் கேட்ட கேள்விக்கு எனக்கு அர்த்தம் புரியல.....என்ன விஷயம்? யாராவது ஹல்வால பாம் வெச்சாங்களா? விபரமா கொஞ்சம் சொல்லுங்கம்மா!!// ராதாம்மா, இதுக்கான பதிலுக்கு நீங்க சின்ன சின்ன சந்தேகங்கள் இழைக்கு போய் பாருங்க..உங்களுக்கே புரிஞ்சுடும் ;)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அட...இதுதான் கதையா?
அட...இதுதான் கதையா? நான் என்னமோ ஏதோனு பயந்தே போயிட்டேனாக்கும்......பாபு செய்யும் அல்வாக்கு ஒரு கூட்டுக் குடும்பம் வேணும்....ஆனா நாமல்லாம் செய்யற அல்வாக்கு ஒரே ஆளே போதும்....அதோட நான் எழுதிப் போட்ட ரெசிபி அல்வா இல்லை....ஹல்வா!!(ஹா...ஹா....ஹா.....இது எப்பூடீ?!!)
சூப்பர் கேரட் ஹல்வா!!
அட... ஒரு இரண்டு நாள் முன்னதான், கேரட் ஹல்வா ஈஸியா வேகவைத்து செய்யறமாதிரி ரெஸிப்பி எதாவது இருக்கான்னு தேடனும்னு நினைச்சேன். ரைட் இன் டைம், உங்க ரெஸிப்பி!. நல்லா ஈசியா இருக்கு. விரைவில் செய்துபார்க்கிறேன். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
immmmmm........
காரட் ஹல்வா , எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் குக்கரில் வேக வைத்துதான் செய்வேன் அனால் அரைத்து செய்தது கிடையாது, இனிமேல் நீங்க செயற மாதிரி செஞ்சு பாக்குறேன். டையட் இருக்கணும்னு நினைக்குறேன் அனால் இப்படி சூப்பர் ஸ்வீட் பாத்துட்டு எப்படி இருக்க முடியும்?
நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்
சுஸ்ரீ..அனுஷ்யா.
சுஸ்ரீ....பாராட்டுக்கு நன்றி....காரட் ஹல்வா செய்து பார்த்தாச்சா? எப்படி இருந்ததுனு சொல்லுங்க...
அனுஷ்யா....நீங்க இருப்பது ஆஃப்ரிகாவா?காரடை துருவி செய்வதைவிட லேஸாக ஒரு அரை அரைத்து செய்தால் சுருண்டு வருவதோடு, டேஸ்டும் நான்றாக இருக்கும். இதில் பால் பவுடருக்கு பதிலாக குலாப்ஜாமூன் மிக்ஸை சிறிது சேர்த்தும் செய்யலாம். ஸ்வீட் சாப்பிட ஆசை வந்தா டயட்டை மறந்துட வேண்டியதுதான்....நானும் அப்படித்தான் என்ன செய்ய!!!!
ராதாம்மா
ஹல்வா சூப்பர். பால் பவுடருக்கு பதிலா குலோப்ஜாமூன் மிக்ஸ் சேர்த்துக்கலாம் சொல்லி இருக்கீங்க. புது டிப்ஸ்ஸா இருக்கு ட்ரை பண்ணிப்பார்க்குறேன்மா.
carrot halwa
today i make Alva .its too good ..
நன்றி..
வினோஜா, அஞ்சனாயகி....வாழ்த்துக்கு நன்றி...செய்து பார்த்து சொல்லு வினோஜா...
Hello Radha Innaiku carrot
Hello Radha
Innaiku carrot halwa unga receipe paarthu senjen...taste romba nalla irukku pa...thank u for ur delicious receipe....
Hello Radha akka
carrot halwa parkkave romba nalla irukku. Halwa seiyyum method easyia irukku