பட்டி மன்றம் 58 "வேலன்டைன்ஸ் டே அவசியமானதா? இல்லையா?"

அன்பு தோழிகளுக்கு வணக்கம். நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நடுவராக பொறுப்பேற்பதில் ரொம்பவே சந்தோஷம்.
என்ன தலைப்பு தேர்ந்தெடுக்கலாம்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் சுற்றிக் கொண்டு இருந்த போது பளீர்னு மண்டையில் பல்பு எரிஞ்சிடுச்சு :) .
வேலன்டைன்ஸ் டே வருது. லவ் பண்றவங்க எல்லாம் காதலன்/காதலிக்கு என்ன பரிசு கொடுத்து மனசுல பச்சக் னு ஒட்டிக்கலாம், எப்படி தன்னோட காதலை இப்பவாவது சம்பந்தபட்டவங்ககிட்ட சொல்லலாம்னு பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கற நேரம். அது சம்பந்தமான தலைப்பு இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். தேடிக்கிட்டு இருந்த போதே அந்த தலைப்பும் கண்ணில் பட்டிடுச்சு.
சகோ ஷேக் கொடுத்த தலைப்பான
*****காதலர் தினம் என நாம் சொல்லும் வேலன்டைன்ஸ் டே அவசியமானதா இல்லையா***** என்பதே இவ்வார பட்டி மன்ற தலைப்பு.
சீக்கிரமா வந்து டிஷ்யூம் டிஷ்யூம் ஆரம்பிங்க! அப்பதானே நடுவருக்கு சந்தோஷமா இருக்கும்.
பட்டிமன்றத்தின் விதிமுறைகளோடு அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்கள் அமைய வேண்டும். நாகரீகமான பேச்சு மிக அவசியம். வாதிடுபவர்களின் பெயர் குறிப்பிட்டு எதிர் வாதங்களை வைக்க வேண்டாம். பொதுவாக எதிரணி என்றே குறிப்பிட வேண்டும்.
ஓகே! ரெடி ஸ்டார்ட் ம்யூசிக்…..

பட்டியின் விதிமுறைகள் புதியவர்களுக்காக:

பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

அந்தந்த பட்டிமன்றங்களில் ஒருவரின் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வாதம் இருக்க வேண்டும். அந்த பட்டிமன்றத்தில் இப்படி சொன்னார் இந்த இழையில் இப்படி பேசினார் என்று குறிப்பிட்டு எதிர்வாதம் செய்யக் கூடாது.

நடுவரே பிக்கப், ட்ராப், டேட்டிங், எஸ்கேப் என்று தரம் குறைந்துவிட்ட இன்றைய காதலுக்கு அர்த்தமே இல்லைதான். காதல் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான தனி உணர்வு. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் என்று சொல்வதெல்லாம் பொய்யுரை.
இன்னைக்கு இருக்குற காதலைப்பத்தி பேசவே வேணாம், அது காதலே இல்ல. இன்னும் மட்டமாக சொன்னால் காமம்.
தாஜ்மஹாலை பார்க்கும்போதும், காவிய காதல்களை படிக்கும் போதும், ஏன் இன்றும் சில காதலர்களை பார்க்கும்போதும், பல தம்பதிகளை பார்க்கும்போதும் ஒரு சிலிர்ப்பு வரத்தான் செய்கிறது. ச்சே, சான்ஸே இல்ல, இதுதான் லவ் என்று சொல்ல தோன்றுகிறது. இந்த, இந்த, இந்த காதலுக்காக ஒரு தினத்தை தந்து மரியாதை செய்வதில் பெருமைதான் இருக்க வேண்டும் நடுவரே!!
நடுவரே இன்னும் சொல்லப்போனால் தம்பதிகள் திருமண நாளுக்கு சமமாக காதலர் தினத்தையும் சேர்த்தே கொண்டாடலாம். அவர்களால்தான் காதலுக்கு உண்மையான அர்த்தத்தை கொடுக்க முடியும்.
//அன்பை எந்த நாள் வேணும்னாலும் சொல்லலாம்,// //என்றும், எப்போதும், எதிலும் அன்புக்கு மதிப்பு கொடுக்கும், முன்னுறிமை கொடுக்கும்//, //அன்பை பரிமாறிக் கொள்ள நாள்,நேரம்,பொழுது என கால நேரம் தேவையில்லை.// தினமும் பசிக்காக சாப்பிடுவதற்கும், விருந்து சாப்பாட்டிற்கும் வித்யாசம் இருக்கு நடுவரே!!
//அன்பு நடுவரே... அநியாயமா பேசும் எதிர் அணியே... இந்த அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், ஆடுகுட்டி தினம் எல்லாம் வெளிநாட்டு மக்க அவங்க கொண்டாட கண்டு பிடிச்சது... நம்ம தீபாவளி, பொங்கலை அவங்க கொண்டாடுறாங்களா??? ஏங்க நமக்கு மட்டும் அவங்க கொண்டாட்டமெல்லாம்??? அவங்களை விரட்டினாலும், அவங்க எண்ணங்களை நாம விரட்டாம கெட்டியா பிடிச்சுகிட்டிருக்கோம்.// ஆஹா எதிரணியினர் பேசறதை கேட்டா சிப்பு சிப்பாதான் வருது நடுவரே!! நாம பேசுறது இங்லீஷ், பாக்குறது கம்ப்யூட்டர் வேலை, சாப்பிடுரது பர்கர், பீஸா, விரும்புறது வெளிநாட்டு வாழ்க்கை. இப்படி வெளிநாட்டு கலாச்சாரம்தான் நம்மை ஆக்ரமிச்சிருக்கு. லட்சக்கணக்கில் கொட்டிக்கொடுக்குற வெளிநாட்டு வேலை வேணாம், நான் உள்ளூரிலேயே நம் கலாச்சார தொழிலான விவசாயம் செஞ்சி பொழச்சிக்கறேன்னு யாராவது சொல்றாங்களா? ஆனா வெளிநாட்டினர் என்னைக்கும் அவங்க நாட்டையும், மொழியையும் விட்டுக்கொடுக்கறதில்ல. அதேசமயம் மற்ற நாட்டில் இருக்கிற நல்ல விஷயத்தையும் அவங்க வாழ்க்கையில சேர்த்துக்குறாங்க.
//காதலர்தினம் கலாச்சார சீரழிவுக்கு அஸ்திவாரம்,// மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்தலாமா? கலாச்சார சீரழிவுக்கு காதலர் தினம் மட்டும் காரணமில்லைங்க. நம்மோட யூத்ஸ் தினமும் ஒரு தினத்தை சொல்லி நம் கலாச்சாரத்துக்கு வேட்டு வெச்சிட்டுதான் இருக்காங்க. ஆனா காதலர் தினத்தை கொண்டாடறது உண்மையிலேயே பெருமையான, கௌரவமான விஷயம்ங்க உண்மையான காதலுக்கு.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

மனசுலேயே வச்சிருகுரதால யாருக்கு என்ன புண்ணியம் ? அத வெளி காட்ட வேண்டாமா ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

வாங்க ஜெனி!
//காதல்ன்றது ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் மட்டுமே உரியது அல்ல. நாம அன்பு செலுத்தும் அனைவரையும் நாம காதலிக்கிறோம்//

இது பாய்ண்ட்! எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோமேங்கறாங்க!

//நல்லது நடக்குதுன்னா கரை கூட நல்லது தானே ?//

ஆமா கறை கூட நல்லதுதான்! கறை போகாம நிலைச்சுட்டா என்ன பண்றதுன்னு எதிரணி கேட்கறாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல கரைன்னா அது பாட்டுக்கு இருந்துட்டு போது.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

பொது idathula கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கணும்னு ஒரு தைரியம் வந்துட்டா அவங்க எப்போ வேணா அத பண்ணுவாங்க...காதலர் தினம் அன்னைக்கு மட்டும் தான் அப்படி பண்ணுவாங்கன்னு இல்லை.(ஒரு வேளை வசூல் ராஜா mbbs படத்துல வர கட்டி பிடி தத்துவமா இருக்குமோ? )

நடுவரே பிக்கப், ட்ராப், டேட்டிங், எஸ்கேப் என்று தரம் குறைந்துவிட்ட இன்றைய காதலுக்கு அர்த்தமே இல்லைதான்.
இன்னைக்கு இருக்குற காதலைப்பத்தி பேசவே வேணாம், அது காதலே இல்ல. இன்னும் மட்டமாக சொன்னால் காமம்.//

என்னங்க இப்படி சொல்லிடீங்க...இன்னைக்கும் நல்ல காதல் இருக்குங்க...நாங்கெல்லாம் இருக்கோம்...கஷ்டப்பட்டு காத்திருந்து இஷ்டபட்டவர கல்யாணம் பண்ணி நல்ல காதல வாழ வச்சுக்கிட்டு இருக்கோம்.இப்போ விஷயம் இன்னைக்கு காதல் நல்லதா ...அன்னைக்கு காதல் நல்லதான்னில்ல ...காதலர் தினம் அவசியமா ன்னுதான்... சில காதலர்கள் மோசமா இருக்கலாம். எதிலும் சில விதி விலக்குகள் இருப்பாங்க...அனால் காதல் ரெம்ப ரெம்ப நல்ல விஷயம்.அதுக்கு ஒரு தினம் அவசியமே...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

//நடுவரே பிக்கப், ட்ராப், டேட்டிங், எஸ்கேப் என்று தரம் குறைந்துவிட்ட இன்றைய காதலுக்கு அர்த்தமே இல்லைதான்.
இன்னைக்கு இருக்குற காதலைப்பத்தி பேசவே வேணாம், அது காதலே இல்ல. இன்னும் மட்டமாக சொன்னால் காமம்.//

//என்னங்க இப்படி சொல்லிடீங்க...இன்னைக்கும் நல்ல காதல் இருக்குங்க...நாங்கெல்லாம் இருக்கோம்...கஷ்டப்பட்டு காத்திருந்து இஷ்டபட்டவர கல்யாணம் பண்ணி நல்ல காதல வாழ வச்சுக்கிட்டு இருக்கோம்.இப்போ விஷயம் இன்னைக்கு காதல் நல்லதா ...அன்னைக்கு காதல் நல்லதான்னில்ல ...காதலர் தினம் அவசியமா ன்னுதான்... சில காதலர்கள் மோசமா இருக்கலாம். எதிலும் சில விதி விலக்குகள் இருப்பாங்க...அனால் காதல் ரெம்ப ரெம்ப நல்ல விஷயம்.அதுக்கு ஒரு தினம் அவசியமே...//

தோழியே!! இதைப் படிங்க ப்ளீஸ்!! //தாஜ்மஹாலை பார்க்கும்போதும், காவிய காதல்களை படிக்கும் போதும், ஏன் இன்றும் சில காதலர்களை பார்க்கும்போதும், பல தம்பதிகளை பார்க்கும்போதும் ஒரு சிலிர்ப்பு வரத்தான் செய்கிறது. ச்சே, சான்ஸே இல்ல, இதுதான் லவ் என்று சொல்ல தோன்றுகிறது. இந்த, இந்த, இந்த காதலுக்காக ஒரு தினத்தை தந்து மரியாதை செய்வதில் பெருமைதான் இருக்க வேண்டும் நடுவரே!!//

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

dhanya:உங்களோட " இன்றும்" ம நான் மிஸ் பண்ணிட்டேன்:-)...விடுங்க...;-)ரெண்டு பெரும் ஒரே விஷயம் தான சொல்றோம்...

காதலிக்கும்போது நீயே என் உயிர், நானே உன் உடல் என்றெல்லாம் பிதற்றுபவர்கள் திருமணத்துக்கு பின்னால் அப்படி பேசிக்கொள்வார்களா என்பது சந்தேகம்...
.'இப்போ எதுக்கு அந்த மோசமான நாளையெல்லாம் நினைவு படுத்தற? எனக்கு ஆஃபீஸுக்கு நேரமாச்சு'இந்தக் காதலைக் கொண்டாட ஒரு நாள் தேவையா? //அதோட எதிர் அணியினர் விட்டுட்டா எப்படி நடுவர் அவர்களே...அதுக்கப்புறம் தான் அங்க ஒரு ஊடல் வரும்...கொஞ்சல்ஸ் வரும்...கிபிட் வரும்...அதயும் சொல்லோனுமில்ல....
இதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு நாள் ஜாலியாகக் கொண்டாடிவிட்டு, அடுத்த காதலர் தினத்தை எதிர் பார்த்து காத்திருப்பது தேவையா?!//

நீங்க அப்டி நினச்சுகிட்டீங்களா ....நாங்களும் எல்லா நாளும் கொண்டாடுவோம்.
காதலர் தினம் அன்னைக்கு இன்னும் கொஞ்சம் தூக்கலா ஸ்பெஷல் லா கொண்டாடுவோம். இது காதலுக்கான தினமாச்சே...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நடுவர் அவர்களே!!

நடக்கும் காலக்கட்டத்தின் மிக அவசியமான தலைப்பு கொடுத்ததர்காகவே உங்களுக்கு ஒரு சிறப்பு வணக்கம்..( எப்படி சொல்றேன்னு பாத்திங்கன்னா தலைப்பு போட்ட சில மணி நேரங்களிலேயே ஏகப்பட்ட போட்டாபோட்டிகள் நடக்குதே )..

காதலர் தினம் ஒரு வேளை- காதல் தினமா இருந்தா கூட, சரி இருக்கட்டும் போ ன்னு விட்டுருப்பேன்.. ஏன்னா என்னை பொறுத்தவரை இந்த காதல்ங்கறது ஒரு நாய்க்குட்டி மேல கூட ஒருத்தருக்கு வரலாம். எளிதில் விட்டு கொடுக்ககூடிய, எதையுமே எதிர்பார்க்காமல் வரும் அளவு கடந்த அன்பை தாங்க காதல் ன்னு சொல்லுவாங்க .>>

ஆனா இங்க அடிக்கற கூத்தே வேறயா இல்ல இருக்கு.. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வரும் அன்பி காதல்னு புரிஞ்சு , அதுக்கு ஒரு தினத்தை வேற ஒதுக்கி , குளிக்காம கொள்ளாம கடை கடையா ஏறி இறங்கி கிப்ட் வாங்கறேன்னு இவங்க பண்ற ரகளைஎல்லாம் பார்த்து, பிப்ரவரி பதினாலை கேலண்டர் லேந்து எடுத்திட்டா என்னன்னு என்னை மாதிரி நிறைய பேர் யோசிக்க தொடங்கிட்டங்கன்னா பாருங்க...

இவங்க காதலர் தினம் கொண்டாடி, எதிர்பார்ப்புகள் அதிகமாகி ( முதல் வருஷம் ஒரு ரோஜா பூ , அடுத்த வருஷம் ஒரு ஸ்மால் பெண்டன்ட் , அதுக்கு அடுத்த வருஷம் மறந்துருவான் ஏன்னா கல்யாணம் ஆகி போச்சு ) இனி எதுக்கு அந்த காதலர் தினம்னு அவன் மறந்துருவான் .. விடுவாளா நம்ம பொண்ணு .. அப்பல்லாம் என்னை வெச்சு தாங்குனியே..இப்ப என்னாச்சு ?ன்னு சண்டை தினமா மாத்திருவா .. காதலர் தினத்தன்னிக்கு கூட நிறைய பேர் பிரிய முடிவு பண்ணிடராங்கன்னு லேட்டஸ்ட் தகவல் வந்திருக்கு நடுவர் அவர்களே !!!

மீண்டும் அழுத்தமான பதிவை போட வரேன்..

எந்த காதலர் தின கர்டன் ரெய்சர் க்கும் போயடாதிங்க ..

காதலர் தினம் வெளி நாட்டில் இருந்து வந்தது.
நம் நாட்டில் இருப்பது போல அங்கு கொண்டாடுவதற்கு விழாக்கள் இல்லை.எனவே அவர்கள் அவபோழுது " Thanks giving day,Vealentines day"போன்ற விழாக்கள் கொண்டாடுவது வழக்கம்.அனால் நமக்கு அப்படி இல்லை.நம் விழாக்களை பட்டியலிட்டால் கொண்டாடுவதற்கு நாட்கள் இருக்காது.அது மட்டும் இல்லது காதலர் தினத்தில் அன்றுதான் நம் காதலை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காதலர்களாக இருந்தாலும் சரி கணவன் மனைவியாக இருந்தாலும் சரி நம் காதலை தினமும் பரிமாறிக்கொள்ளலாம். இதற்காக தனியாக ஒரு காதலர் தினம் தேவை இல்லை. ஏனென்றால் அன்பை பரிமாறிக்கொள்கின்ற என்ற தினம் போய் இப்பொழுது இதை தவறாக உபயோகிப்பவர்கள் தான் அதிகம்.வெளிநாட்டினருக்கு வேண்டும் என்றால் பொது இடத்தில கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் நம் நாட்டில் இதை பார்த்து கெட்டுபோகுபவர்கள் தான் அதிகம்.

அதுமட்டும் இல்லாது இது வியாபாரத்தை பெருகுவதற்கான ஒரு யுத்தி.
இதனால் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வியாபாரம் அதிகரிக்கிறது.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

தேவையே இல்லை..வேலன்டைன்ஸ் டே என்ன கல்யாணமாகி குடும்பம் நடத்துறவங்களா கொண்டாகிட்டிருக்காங்க அப்படியே அன்பை அனுபவிச்சு ரசிச்சு கொண்டாட... இதன் பேரில் ஒரு பெரிய கூத்து நடக்குது..கடையில் துணி எடுக்க போணா ஒரே சிவப்பு..எனக்கு என்னமோ அத பாத்தா ரத்தம் தான் நியாபகம் வருது.இதன் பேரில் பல கோடி வியாபாரம்..இங்க யாருக்காவது நல்ல பிசினெஸ் செய்யணுமா அடுத்த வருஷம் காதலர்களுக்குன்னு எதாவது தொடங்குங்க பிச்சிகிட்டு போகும்.மோசமான படங்களா வந்து வந்து பிள்ளைகளை எல்லாம் சீரழிச்சு வச்சிருக்காங்க பாவிக
எப்ப ஹிஸ்டரி புக்கில் வேலன்டைன்ஸ் டே வரபோகுதுன்னு தெரியல.தேவையில்லாம ஒரு கலாச்சார சீரழிவு இதனால் நடக்குது.வருஷா வருஷம் புதுசு புதுசா ஒவ்வொரு கண்டுபிடிப்பு வேற...காதலிக்க தொடங்கினதும் நிச்சயம் யாருமே மனசோடு நெறுங்குவதே இல்லை நீங்க வெறும் ஆண் பெண் ஈர்ப்பினால் மட்டுமே காதலிக்கிறீர்கள்..யாரும் அடிக்க வர கூடாது என் கைய்யிலும் இருக்கு குச்சி..இல்லவே இல்லை மனசை மட்டும் காதலிக்கிறேன்னெல்லாம் ரீல் விடுவாங்க நடுவரே நம்பிடாதீங்க.
எப்போ கல்யாணம் ஆகி குடும்பம் நடத்த தொடங்குறோமோ அப்ப தான் பரஸ்பரம் அன்பு பரிமாறப்படுது..ஒவ்வொரு வருஷமும் கடந்து செல்ல செல்ல தான் நமக்குள் அன்பு வலுப்பெறும்..இப்போ வேலன்டைன்ஸ் டே தேவையே இல்லை தினம் தினம் உனக்கு நானும் எனக்கு நீயும் வேலன்டைன் தான்..ஆசையா அலுப்பில்லாம இருவரும் தினம் தினம் செலவிடும் ஒவ்வொரு நாளும் பரிசு தான்

மேலும் சில பதிவுகள்