பட்டி மன்றம் 58 "வேலன்டைன்ஸ் டே அவசியமானதா? இல்லையா?"

அன்பு தோழிகளுக்கு வணக்கம். நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நடுவராக பொறுப்பேற்பதில் ரொம்பவே சந்தோஷம்.
என்ன தலைப்பு தேர்ந்தெடுக்கலாம்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் சுற்றிக் கொண்டு இருந்த போது பளீர்னு மண்டையில் பல்பு எரிஞ்சிடுச்சு :) .
வேலன்டைன்ஸ் டே வருது. லவ் பண்றவங்க எல்லாம் காதலன்/காதலிக்கு என்ன பரிசு கொடுத்து மனசுல பச்சக் னு ஒட்டிக்கலாம், எப்படி தன்னோட காதலை இப்பவாவது சம்பந்தபட்டவங்ககிட்ட சொல்லலாம்னு பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கற நேரம். அது சம்பந்தமான தலைப்பு இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். தேடிக்கிட்டு இருந்த போதே அந்த தலைப்பும் கண்ணில் பட்டிடுச்சு.
சகோ ஷேக் கொடுத்த தலைப்பான
*****காதலர் தினம் என நாம் சொல்லும் வேலன்டைன்ஸ் டே அவசியமானதா இல்லையா***** என்பதே இவ்வார பட்டி மன்ற தலைப்பு.
சீக்கிரமா வந்து டிஷ்யூம் டிஷ்யூம் ஆரம்பிங்க! அப்பதானே நடுவருக்கு சந்தோஷமா இருக்கும்.
பட்டிமன்றத்தின் விதிமுறைகளோடு அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்கள் அமைய வேண்டும். நாகரீகமான பேச்சு மிக அவசியம். வாதிடுபவர்களின் பெயர் குறிப்பிட்டு எதிர் வாதங்களை வைக்க வேண்டாம். பொதுவாக எதிரணி என்றே குறிப்பிட வேண்டும்.
ஓகே! ரெடி ஸ்டார்ட் ம்யூசிக்…..

பட்டியின் விதிமுறைகள் புதியவர்களுக்காக:

பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

அந்தந்த பட்டிமன்றங்களில் ஒருவரின் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வாதம் இருக்க வேண்டும். அந்த பட்டிமன்றத்தில் இப்படி சொன்னார் இந்த இழையில் இப்படி பேசினார் என்று குறிப்பிட்டு எதிர்வாதம் செய்யக் கூடாது.

கண்ண மூட்டி கண்ண தொறக்கறதுக்குள்ள (அதாங்க நைட்டு முழுக்க தூக்கம்!) இப்படி போனா பதிவுகளை எல்லாம் படிச்சி பார்க்க கூட எனக்கு நேரமில்லைங்க.... தலைப்பு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கேன்னு வந்து முதல் பதிவு போட்டா...... யாரு என்ன சொல்லாரங்கன்னு கூட தெரியல..... நான் சரியா எதையுமே படிக்கல மன்னிச்சிடுங்க!!!

அப்புறம் நான் மேலாக விட்ட லுக்கில கிடைச்ச தகவலுக்கு பதில் சொல்லறேன் இதுக்கு எங்க அணியில பதில் கண்டிப்பாக வந்திருக்கும்.....ஏதோ என்னால முடிஞ்சது.

### அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம், இப்படியே இருக்கு....... நீங்க சொல்ற மாதிரி இது காதலர்களுக்கு மட்டுமில்ல.... நான் மு தல் பதிவில சொன்ன மாதிரி அப்பா மகளுக்கு அன்பை காட்ட கொடுத்த பரிசு அதனால இந்த உலகத்துல இன்னும் "மகள் தினம்", "மகன் தினம்" என்று எதுவுமில்லைன்னு நினைக்கிறன்..... தாத்தா, பாட்டி, இப்படி யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது தான் மிக மிக பழைமையா கருத்து.

### பதினாங்காம் நூற்றாண்டுக்கு மேல தான் இது இப்படியே மருவி அன்பை காட்ட காதலருக்காகவும் அதில இதய வடிவவும்..... இருக்கும்படியான அன்பளிப்புகளுமாக மாறியது... இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில தான் இது காதலருக்கென மட்டுமே முழுமையா மாறிவிட்டதாக கிருஸ்தவ வரலாறு ஒன்று விளக்குகிறது. ஏன்னா வேலன்டைன் என்பவரின் முழு பெயர் "செயின்ட் வேலன்டைன்" அவர் ஒரு கிறிஸ்தவர்.

இதனால நான் சொல்ல வரது என்னவென்றால்..... அம்மாவுக்கு, அப்பாவுக்கு, தாத்தாவுக்கு, பாட்டி, உடன்பிறப்புகள் இப்படி எல்லோருக்கும் பிறந்த நாளும் வருது தான்...... யாராவது அவங்களுக்கு பரிசு பொருட்கள் நினைவு பரிசுகள் கொடுக்கிறார்களா.... ரொம்ப குறைவுதான்.... இந்தியாவில... வெளிநாட்டில தவறாம அது நடக்குது.

*** ஏங்க நீங்கல்லாம் பிறந்த நாள் தவிர வருடத்தில எத்தனை முறை வேண்டுமானாலும் பரிசு கொடுத்தா வேண்டான்னா சொல்லுவீங்க!!! ***

அன்புடைய நெஞ்சம் எத்தனை முறை அன்பை எப்படி காட்டினாலும் ஏற்றுக்கொள்ளும் என்பது தான் என் கருத்து.

இந்த காலத்துல இப்படி காதலர்கள் மட்டுமே அன்பை கட்டறேன்.... செல்வாக்கை காட்டறேன்னு தான் அதிகமா போட்டி போட்டு கொண்டு பரிசுப்பொருட்கள் கொடுத்து பகிர்ந்துக்கொள்கிறார்கள்...... இந்த அன்பு நிலையானதா??? நிலைத்து இருக்கிறதா தற்காலத்தில???

நான் அடுத்துவரதுக்குள்ள பட்டியே முடிஞ்சுடபோவுது....... முடிஞ்சா திரும்ப வரேன்!!!

நடுவரே!! கெட்டு போறவங்க அவங்களுக்குன்னு ஒரு காரணத்தை சொல்லி கெட்டு போகதான் செய்றாங்க. இப்பதான் தொட்டதுக்கெல்லாம் பார்ட்டி கொண்டாடுறாங்களே, யூத்தை சீரழிக்க இந்த பார்ட்டி கலாச்சாரம் போதாதா நடுவரே!!
காதலர் தினத்தால மட்டும்தான் அவங்க கெட்டு போற மாதிரி சொல்றாங்க எதிரணி!!
காதலால்தான் நம் சமுதாயத்தில் கொஞ்சம் கொஞ்சமா ஜாதி ஒழிஞ்சிருக்கு. வரதட்சணை இல்லா திருமணத்தை காதலால்தான் நடத்த முடியும்ங்க. ஜாதகத்தை தூக்கிட்டு நடையா நடந்து பாக்குற பத்து பொருத்தமெல்லாம் தேவையில்ல.
கட்ட கருப்பா ஒரு பொண்ணு இருக்கு, அந்த பொண்ணு கல்யாண சந்தையில் விலை போகுமா? ஆனா காதலுக்கு விலை போகுங்க!! ஊனமான பையனுக்கும் காதல் வாழ்வு கொடுக்குங்க!!
காதலுக்கு எதுவுமே தேவையில்லைங்க!! அழகு, பணம், படிப்பு, போலி அந்தஸ்து இப்படி எதுவுமே. ஒன்னே ஒன்னுதான் அதுக்கு தேவை கேரக்டர்.
ஒரு பொண்ணையோ, பையனையோ யாருமே பார்த்த உடனே காதலிப்பதில்லை. இது கூர்ந்து கவனித்தால் எதிரணியினருக்கு புரியும் என நினைக்கிறேன். பலநாள் நண்பர்கள்தான் ஒருநாள் காதலர்களா மாறியிருப்பாங்க, புரிதலால். முன்பின் தெரியாத யாரையும், யாரும் காதலிப்பதில்லை. பக்கத்துவீட்டு பொண்ணு, சொந்தகார பையன், காலேஜ் மேட், கொலீக் இந்த வட்டத்துக்குள்ளதான் காதலர்கள் இருப்பாங்க.
இன்னைக்கு பெற்றோர் நிச்சயிக்குற திருமணத்திலேயே, கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணும், பையனும் ஊர் சுத்துறாங்க. இதை பெற்றோர் அனுமதிக்கதானே செய்றாங்க. இதெல்லாம் தப்பில்லையா?

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

அன்பு நடுவருக்கு வணக்கம். வாதாடும் சக தோழி/தோழர்களுக்கும் எதிர்த்து வாதாடும் தோழி/தோழர்களுக்கும் வாசித்து மனதுக்குள் வாதிடும் தோழி/தோழர்களுக்கும் என் பணிவான வணக்கம்.

காதலர் தினத்தால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால் மனிதம் ரோபாட் ஆகிறான். யோசிப்பதே இல்லை. எதற்க்காக யோசிக்கணும். அதனால் காதலர் தினத்தில் கண்டிப்பாக சிகப்பு ரோஜா என்ன விலையிருந்தாலும் வாங்க வேண்டும். படத்துக்கு போகணும் இல்லை வெளியில் எங்காவது டின்னர் போகணும் பரிசு கொடுக்கணும். இப்படி எல்லோரும் செய்யும் இயந்தரத்தனமான ஒன்றை தான் செய்யனும். அப்படி வித்தியாசமாக யோசித்தால் அவனுக்கு பயித்தியக்கார பட்டம் வேற.

இந்த மெரீனா கடற்க்கரை ஓரம் நடந்து செல்லும் வயதான தம்பதிகளை பார்த்தால் நமக்கு இப்போவே (ஔவையார்) போல வ்யசாகதா என்ற ஏக்கமே வந்திடும். இருவரும் நடந்து செல்லும் போது பேசிக்கொள்ளவே மாட்டார்கள். நடந்து முடிந்து வந்து பெஞ்சில் அமரும் போது பேசிக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் இருவருக்கிடையில் இருக்கும் ஆழமான காதலை அந்த கண்கள், சுருக்கங்கள், தளர்ந்த நடை, முதிர்ச்சியே சொல்லி விடும். காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ பேர் காதலிக்கும் போது இருந்த அன்பு இப்பொழுதில்லை என்கிறார்கள். கமிட்மென்ட் நேட்று வந்தவுடனே அவர்களுக்கிடையில் இருந்த அந்த "காதலும்" பறந்து போச்சு. இப்படி பட்ட காதலுக்காகவா ஒரு தினம் கொண்டாடனும்? எதற்க்காக இந்த போலித்தனம்?

இல்லை தெரியாம தான் கேட்க்கிறேன் நடுவர் அவர்களே, நாமெல்லாம் இருக்கிற எல்லா பண்டிகையும் பாரம்பரியம் மாறாம கொண்டாடுகிறோமா? அதையே ஒழுங்காக செய்யலை, பின்பு ஏன் இந்த அந்நிய மோகம். காதலர் தினம் எப்பொழுதிலிருந்து கொண்டாட படுகிறது, எதற்க்காக கொண்டாடப்படுகிறது என்று தெரியாமலையே எத்தனையோ பேர் அப்படி செய்யாவிட்டால் அது ஏதோ சமூகம் அவங்களை ஒதுக்கி விடுமோ என்று பயந்தே கொண்டாடுகின்றனர். இது மட்டுமில்லை இன்னமும் எத்தனை எத்தனை தேவையற்றவைகளை நம் மேல் திணித்தாலும் ஒன்றுமே யோசிக்காமல் நாகரீகம் என்று போலி முலாம் பூசிவிட்டால் போதும் நம் மக்களுக்கு, அதனை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள்.

காதல் அன்பின் வெளிப்பாடு தானே, அப்பொழுது அன்பு வெறும் ஒரு ஆணிற்கு பெண்ணின் மேலும் பெண்ணிற்கு ஆணின் மேல் மட்டும் தான் வர வேண்டுமா? இல்லை சும்மா தான் கேட்க்கிறேன், தாய் / தந்தை குழந்தை மேல் வைக்காத அன்பா, ஆசிரியர் மாணவர்கள் மேல் வைக்காத அன்பா, தாத்தா பாட்டி பேரக்குழந்தைகள் மேல் வைக்காத அன்பா, நண்பர்களின் நடப்பின் மேல் வைக்காத அன்பா இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....இவெங்கெல்லாம் காதலர் தினத்தை ஏன் கொண்டாடுவதில்லை? வெறும் காதலனும் காதலியும் மட்டும் தான் கொண்டாடனும் என்று எதாவது ரூல்ஸ் இருக்கிறதா? வருங்கால சந்ததிகளுக்கு நம் காலசாரத்தை எப்படி கொண்டு செல்ல போகிறோம். ஒவ்வோரு பண்டிகை கொண்டாடும் போதும் எதற்காக கொண்டாடுகிறோம் என்று சொல்லி தான் கொண்டாடுகிறோம் அப்படியிருக்க, காதலர் தினம் எதற்க்காக கொண்டாடுகிறோம் என்று எப்படி சொல்லுவீங்க, அப்படி சொன்னால் ஏன் அம்மா நீயும் நானும் கொண்டாடவில்லை என்று கேட்காதா? அப்போ நாம் அவர்களுக்கு ஒரு தப்பான மெசேஜை இல்லை பரப்புகிறோம்? இளமை துடிப்பில் எல்லாமே சரியென்று தோன்றும், போக போக அவர்களுக்கும் (சட்டி சுட்ட பின்!) இது புரியும். மீண்டும் நேரமிருந்தால் வாதத்தோடு வருகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவரே... எதிர் அணி சொல்வது போல் காதலின் வெற்றியை கொண்டாட, போராடி ஜெயிச்ச மகிழ்ச்சிய கொண்டாட தான் காதலர் தினம் என்றால்... வென்றவர் எல்லாம் திருமணம் ஆனவங்க தானே... அப்போ திருமண நாள் அவங்க காதலை சொல்லலயா?? அவங்க காதலின் வெற்றியை சொல்லலயா??? அதை கொண்டாடலாமே... இதே போல பரிசு கொடுத்து... அதை விடவா இந்த நாள் சிறந்தது??? நிச்சயம் இருக்க முடியாது.

இந்த காதலர் தினம் காதலிக்குறவங்களை மட்டுமா அல்லாட விடுது நடுவரே???? நான் பட்ட அவஸ்தை இருக்கே.... சொல்றேன் கேளுங்க...

கல்லூரி படிக்கும்போது (பள்ளி படிச்ச காலத்தில் இதெல்லாம் என்னன்னே தெரியாதே) கூட இருக்க எல்லா தோழிகளும் (அது பெண்கள் கல்லூரி) அன்றைய தினத்தில் “ஏய் என்னடி இந்த கலர் ட்ரெஸ்ல வந்திருக்க... யாரு அந்த ஆளு... பச்சை கொடி காட்டிட்டியா... கலக்கு”ம்பாங்க. அடக்கடவுளே... எனக்கு பிடிச்ச கலரா என்னன்னு தெரியல, என்கிட்ட அந்த ஸ்டேஜ்ஜில் அதிகம் பச்சை நிறம் தான் ஆடைகள் இருக்கும். அதை விட்ட நிறைய மெரூன் ஷேட்ஸ் இருக்கும்... இதில் எதை போட்டாலும் என்னை கலாய்ப்பாய்ங்க. பச்சை கொடியா??? ஏண்டி சிகப்பு கொடி காட்டிட்டா... பாரு கேண்டீன் பசங்க எவ்வளவு ஃபீல் பண்றாங்க... மெஸ் பசங்க எவ்வளவு ஃபீல் பண்றாங்கன்னு... அந்த கொடுமையான காலேஜ்ஜில் இருந்த ஆண்களே வெறும் கேண்டின், மெச்சில் வேலை பாத்த பொடி பசங்க, இல்ல கிழவங்க தான்... வாட்ச்மேன் தாத்தாவை கூட விடாம ஓட்டுவாங்க காதலர் தினம்னா.

அடுத்தது கோ-எஜுகேஷன் காலேஜ்... அது ஒரு படி மேல... கூடவே தான் 40 பசங்க இருக்காங்களே... ஓட்ட கேட்கவா வேணும். எந்த கலரை போட்டாலும் ஓட்டுவாங்க... மஞ்சள், பின்க்’னு ஒன்னு விடுறதில்லை... “இன்னைக்கு இது தான் கலர்... கரக்டா போட்டுட்டு வந்துட்ட...” என்னவோ அதை BBC News ’ல சொன்ன மாதிரி, நாங்க கேட்டு கரக்ட்டா போட்ட மாதிரி. இதெல்லாம் வம்பே வேணாம்னு வெள்ளையில் போனா... “என்னடி... உங்க ஆள்ட சண்டையா??? சமாதான கொடியா???”ம்பாங்க. அழுகையே வந்துடும் நடுவரே.

வழக்கமா கலேஜ்க்கு என் தலையில் ரோஸ் இருக்கும்... அதை பார்த்தா கூட அன்னைக்கு அவங்களுக்கு ஸ்பெஷலா தோணும் போல... “உங்க ஆள் கொடுத்ததா???”னு... “இல்ல, பூகார பாட்டி கொடுத்தது”னுட்டு வர வேண்டியது தான்.

என்ன சொல்ல நடுவரே... இப்படிலாம் 6 வருஷம் படிப்பு முடியும் வரை, நாங்க பட்ட கஷ்டம்... காதலர் தினம் படுத்திய பாடு!!! தேவையா இது??? சொல்லுங்க... காதலிக்குறவங்க கொண்டாடட்டும், சுமா போற நம்மை எல்லாம் வெச்சு காமெடி பண்ணி ஓட்ட ஒரு தினம் (அதுக்கு தான் Apr 1st இருக்கே) தேவையா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே எங்கல் அணித்தோழியின் கருத்துக்கொப்ப நான் கூட கலர் பிரச்சினையால் பிலெக் எண்ட் பிலெக் தான் தேர்ந்தெடுத்தேன். காதலர் தினத்தில் தானா அன்பைப்பரிமாறுவதும் கிப்ட் கொடுப்பதும் நடக்க வேண்டும் தம்பதியர்க்கிடையில் கூட, ஒரு கடைதெருவுக்குப் போற நேரம் நம்மாளூக்கு பிடித்தமான ஒரு பொருளை கண்டால் வாங்கி வந்து கொடுக்கிறோமே அப்போ கூட அது காதலர் தினம் தான். தலை வலிக்குதுன்னு நாம கொஞ்சம் தூங்கினா சத்தம் காட்டாமல் வேலைக்கு கிளம்மிப் போறாரே அன்னிக்கும் காதலர் தினம்தான் . எல்லா நாளும் இல்லாவிட்டாலும் இயலாது போகின்ற ஒரு கணத்தில் தோள் கொடுக்கும் உறவுகளை சந்திக்கும் பொழுதெல்லாம் காதலர் தினம் தான், ஆனால் இன்று முளைத்து 3இலை விடும் முன் காதலர் தினம் என்று அலைகழியும் இளைஞர் கூட்டத்துக்கு தேவையே இல்லை காதலர் தினம். வேண்டும் வேண்டும் என்று குரல் தரும் எதிரணியே கொஞ்சம் சொல்லுங்கல் நீங்கள் இந்தக் காதலர் தினத்தில் அப்படி என்னதான் செய்றீங்க. துணைக்கு யார கூட்டிட்டு போறீங்க எங்க கொண்டாடுறீங்க கிடைக்கின்ற கிப்ட வீட்ல அம்மாட்ட காட்டி வாசல் கப்போர்டில் வச்சிருக்கீங்களா கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நடுவருக்கு காலை வணக்கம்....
பல வாதங்கள் காதலர் தினத்தை விட 'காதல் தேவை' என்றுதான் இருக்கு. நாம் பேசிக் கொண்டிருப்பது காதலைப் பற்றி அல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ளட்டும் நடுவரே. அதனால்தான் நான் முதலிலேயே உங்களிடம் க்ளியர் பண்ணிக் கொண்டேன்! நானும் என்னைப் போல் இங்குள்ள பல தோழிகளும் காதல் திருமணம் செய்தவர்கள் இல்லை; ஆனாலும் எங்களுக்கும் காதல் உண்டு, காதலிக்கவும் தெரியும்!!

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்....உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்.."

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி....வேரென நீயிருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன்"

இதெல்லாம் காதல் வசனங்கள் மட்டுமில்லை. கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கைக்கு ஒரு சின்ன உதாரணங்கள்! இப்படி வாழும் தம்பதிகளுக்கு தினமுமே காதலர் தினம்தானே?

நான் ஹிஸ்ட்ரக்டமி ஆப்பரேஷன் செய்து கொண்ட சமயம் அன்று இரவு முழுவதும் மிகவும் சிரமப் பட்டேன்.என் கணவர்தான் சிறிதும் தூங்காமல் என்னை கவனித்துக் கொண்டார்.அந்த அன்புக்கு ஒரு வேலன்டைன்ஸ் டே போதுமா?

நான்கு நாட்கள் டூர் போய்விட்டு வந்து எப்பொழுது தனிமை கிடைக்கும் என்று காத்திருந்து அந்த இரண்டு நிமிடத்தில் இறுக அணைத்துச் சொல்லும்'ஐ மிஸ் யூ' சொல்லும்போது 'இருங்க.அடுத்தமாதம் காதலர் தினம் வரப்போ கொண்டாடலாம்' என்று யாராவது சொல்வார்களா?!! அன்றைக்கே வேலன்டைன்ஸ் டேதான?!!!

இந்தக் கால இளைஞர்கள் 'காதலர் தினம் கொண்டாட நமக்கு ஒரு காதலர் (அ) காதலி இல்லையே என்று ஏங்கி, யாரையோ அவசரமாகக் காதலித்து காதலர் தினத்தை அமர்க்களமாகக் கொண்டாடி....ம்ம்ம்ம்....அடுத்த வருஷம் வேலன்டைன்ஸ் டே அதே ஆளோடுதான் கொண்டாடுவார்களா? சந்தேகம்தான்!!

மொத்தத்தில் இந்த வேலன்டைன்ஸ் டே இளைஞர், இளைஞிகள் பாதை மாறிப் போக வழி வகுப்பதை நினைத்தே வருத்தமாக உள்ளது.

வெளிநாட்டுக் காரர்கள் நம்மைப் போல் இல்லை.ஒவ்வொரு வருடம் புதிய இணைகளுடன் காதலர் தினம் கொண்டாடுவது அவர்களுக்கு தேவை.
ஏனெனில் இந்த வருடம் காதலிப்பவருடனோ, வாழ்பவருடனோ அடுத்த வருடம் இருப்பார்களா என்பதே டௌட்.. அது அவர்கள் கலாச்சாரம்....நமக்கு அது தேவையில்லை...
நடுவரே...நல்ல தீர்ப்பு சொல்லுங்கள்....சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன்!!!!

அம்மாடியோவ்! 24மணிநேரத்துக்குள்ள எத்தனை பதிவுகள்?! நடுவரை அசத்திப்புட்டீங்க போங்க!
ஒரு அணிடயின் வாதத்தை படிச்சுட்டு இதுதான் சரின்னு நடுவர் ஒரு முடிவுக்கு வரலாம்னு நினைச்சா அடுத்த அணியின் பதிவு, இது கூட சரிதானேன்னு நடுவரை குழம்ப வச்சிடுது. குழம்புல உப்புக்கு பதிலா சர்க்கரை போடப் போற அளவுக்கு குழம்பிட்டேன்னா பார்த்துக்கோங்க :(

ரெண்டு அணியினரும் ஏட்டிக்குப் போட்டியா இருந்தாலும் நடுவருக்கு இருக்கற நாலு முடியையும் பிச்சுக்க வைக்கறதுல மட்டும் ஒரே அணியா இருக்கறீங்கப்பா! நல்லா தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கறிங்க! நடத்துங்க நடத்துங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//தாஜ்மஹாலை பார்க்கும்போதும், காவிய காதல்களை படிக்கும் போதும், ஏன் இன்றும் சில காதலர்களை பார்க்கும்போதும், பல தம்பதிகளை பார்க்கும்போதும் ஒரு சிலிர்ப்பு வரத்தான் செய்கிறது. ச்சே, சான்ஸே இல்ல, இதுதான் லவ் என்று சொல்ல தோன்றுகிறது. இந்த, இந்த, இந்த காதலுக்காக ஒரு தினத்தை தந்து மரியாதை செய்வதில் பெருமைதான் இருக்க வேண்டும் நடுவரே//

ஏம்பா எதிரணியினரே இந்த மாதிரி ஆளுங்களுக்காவது காதலர் தினம் கொண்டாடறதுல என்ன தப்பு இருக்கு. காதல் பேர்ல ஆட்டம் போடறவங்களுக்காக உண்மையான காதலை கொண்டாடக் கூடாதுன்னு சொன்னா எப்படீங்க... இருங்க இருங்க நான் கேட்கல அவங்க கேட்கறாங்க. உங்களுக்கு புரியற மாதிரி எடுத்துச் சொன்னேன் அம்புட்டுத்தேன் :)

//நம்மோட யூத்ஸ் தினமும் ஒரு தினத்தை சொல்லி நம் கலாச்சாரத்துக்கு வேட்டு வெச்சிட்டுதான் இருக்காங்க.//

என்னது அப்படீன்னா நாம எல்லாம் யூத்ஸ் இல்லையா?! என்ன அநியாயம் இது? நடுவர் என்னிக்குமே யூத் தான் ஆமா சொல்லிட்டேன். நானெல்லாம் கலாச்சாரத்தை சீரழிக்கலையாக்கும் :)

//ஆனா காதலர் தினத்தை கொண்டாடறது உண்மையிலேயே பெருமையான, கௌரவமான விஷயம்ங்க உண்மையான காதலுக்கு.//

அட அட உண்மையான காதலுக்கு மரியாதை செய்யறதுக்காக கொண்டாடறாங்க உங்களுக்கு என்னப்பா கஷ்டம்? எதிரணிக்கு கஷ்டமோ நஷ்டமோ இருந்துச்சுன்னா வந்து சொல்லிடுங்க. சொன்னாத்தானெ நடுவருக்குத் தெரியும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே!! நீங்க கருத்துக்களை கொட்ட சொன்னாலும் சொன்னிங்க...மக்கள் அப்படியே பொங்கி எழுந்து புறப்பட்ட்டுட்டாங்க போங்க..!! நீங்க தீர்ப்பு சிக்னல் கொடுக்கரவரை நிக்கவே நிக்காதோ இந்த வண்டி ங்க ..??

இதுல எதிரணியினர் எங்களை காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கரவங்க ன்னு நினைச்சிட்டாங்களோ என்னவோ ...காதல் தேவை தான்னு நிறைய பேர் பேச ஆரம்பிச்சுட்டாங்க ..

எந்த தினத்துக்கும் இவ்வளவு எதிர்ப்பு வந்திருக்காதுன்னு நினைக்கிறேன் ,,ஆனா ஏன் இந்த காதலர் தினத்தை யாரும் வேனாங்குறோம் னா

* குழந்தைகள் தினம் உலகில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் ஒரு சமர்ப்பணம்.. அவர்களுடைய சிறு சிறு உணர்வுகள், அவர்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ சந்தோஷ சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு .. இதனால் யாருக்காவது பாதிப்பா ..?

மதர்ஸ் டே கூட தினமும் தன்னலம் பாராமல் தான் குழந்தைகளுக்காகவும் , குடும்பத்துக்காகவும் தான் வாழ்நாளையே அர்ப்பணிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் "நான் இருக்கேன் " என்ற ஒரு பிடிமானத்தை கொடுக்கவே ... எந்த அன்னையும் மதர்ஸ் டே வை மறந்தால் கூட சண்டையிடுவதில்லை..

தீபாவளி, கார்த்திகை , பொங்கல் ஏன் தமிழ் புத்தாண்டு , இன்னும் கிருஸ்துமஸ் முதலியவை அனைத்து தரப்பு மக்களையும் , உயர்வு தாழ் வின்றி அறிவியல் கண்ணோட்டத்துடன் நாம் வாழும் இந்த மண்ணின் சூழலுக்கும், உணவு, உடை இருப்பிடம் ஆகியவர்ரியும் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டவை.. இவைகளால் அதிக பாதிப்புகள் இல்லாததாலேயே இன்னும் அனைவராலும் முழு மனதோடு ஏற்கப்பட்டு வருகிறது..

ஆனா இந்த காதலர் தினம் ஒரு குறிப்பிட்ட (ஆணும பெண்ணும் மட்டுமே ) வர்க்கத்தினருக்கு மட்டுமே பொருந்தகூடியது .. அதுவும் நிஜமாகவே லவ் பண்ணுகிரவர்களும், லவ்வை எதிர்பார்த்து காத்து கிடப்பவர்களுக்கும் என்றால் கூட பரவாயில்லை ..சிலர் தேமே என்று தான் பாட்டுக்கு போய் கொண்டிருப்பார்கள்.. அவர்களிடம் சிறிதும் வாழ்க்கைக்கு பொருத்தம் இல்லாதவர்கள் லவ்வை எக்ஸ்ப்ரெஸ் பண்ணும போது, மிகவும் சிக்கல் ஆகிறது,, மன உளைச்சல், இவர்களின் சம்பலத்தையோ, அல்லது மேற்படிப்பையோ நம்பி இருக்கும் குடும்பத்தை மறந்து , கிப்ட் வாங்குவதையும் ஊர் சுற்றுவதையும் வழக்கமாகி கொள்கிறார்கள்..

லவ்வை ஏற்கவில்லை என்றால், ஆசிட் வீச்சு தற்கொலை என்று அது ஒரு பக்கம் நடக்கும்..
காதலர் தினத்தன்று பப் களிலும், க்ளப்களிலும் நடக்கும் கூத்துகள் பல வார இதழ்களில் வெளி வந்த கேவலம் தான்..

காதலை வெளிப்படுத்தவும் ( ஏன் கல்யாணம் ஆனபின்பும் ) உன்னிடம் இன்னும் காதல் கொண்டுள்ளேன் என்பதை உணர்த்த அவர் அவருக்கு ஏற்ற தினத்தை எடுத்து கொள்ளலாமே.. இதுக்கேன்று ஒரு நாள் ஒதுக்கி அட்டகாசம் பண்ணி ஏகப்பட்ட பார்க்கவே சகிக்காத போட்டோஸ் எடுத்து அதை , பேஸ் புக் பேஜஸ் ல போடறதுக்கு வேணா உதவலாம் , மத்தபடி இதுனாலே நம்ம நாட்டுக்கோ , வீட்டுக்கோ , ஏன் ஒரு புழு பூச்சிக்கோ கூட எந்த பயனுமில்லை..

சில ரகசியங்கள் , ரகசியங்களாகவே இருக்கறது தான் நல்லது..
அது தான் காதலை வெளிப்படுத்தர தருணம் கூட சம் ஒன் ஸ்பெஷல் .. அதை சாதா வா ஆக்கிட்டு சிரிப்பா சிரிக்க வெச்சுடாதிங்க----- காதலர் தின கொண்டாட்டத்தில் களைப்படையும் எதிர் அணியினரே !!

காதலர்கள் கடலை போட , நாடே ஒரு முழு தினத்தை தரணுமா நோ! நெவெர்!! மை லார்ட் !!!

//பொது idathula கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கணும்னு ஒரு தைரியம் வந்துட்டா அவங்க எப்போ வேணா அத பண்ணுவாங்க...காதலர் தினம் அன்னைக்கு மட்டும் தான் அப்படி பண்ணுவாங்கன்னு இல்லை.(ஒரு வேளை வசூல் ராஜா mbbs படத்துல வர கட்டி பிடி தத்துவமா இருக்குமோ? )//

அதானே முடிவெடுத்துட்டா காத்துக்கிட்டு இருக்க முடியுமா என்ன? உடனே வைத்தியம் பார்த்துடறாங்க :)

//அனால் காதல் ரெம்ப ரெம்ப நல்ல விஷயம்.அதுக்கு ஒரு தினம் அவசியமே...//

நல்ல விஷயத்துக்காக ஒரு தினத்தை கொடுத்தா என்னப்பா? மீதிதான் 364 நாள் இருக்கே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்