தேதி: February 7, 2012
பெல்ட் பேப்பர் - கறுப்புநிறம்
சிவப்புநிற டியூப்லெக்ஸ் பேப்பர்
ப்ளாஸ்டிக் பாட்டில் - சிறியது
கத்தி
கத்தரிக்கோல்
பெவிக்கால்
வெள்ளைநிற சார்ட் பேப்பர்
பென்சில்
மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

மூடியுடன் கூடிய சிறிய ப்ளாஸ்டிக் பாட்டிலின் கால் பகுதியை மட்டும், படத்தில் உள்ளதுப்போல் கத்தியால் அறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மீதியுள்ள பாட்டிலின் பாகத்திற்கு ஏற்ப கறுப்புநிற பெல்ட் பேப்பரை தேவையான அளவு நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பெல்ட் பேப்பரில் பெவிக்கால் தடவி பாட்டிலின் மேல் சுற்றி ஒட்டவும்.

பாட்டிலின் மேலே நீட்டிக் கொண்டிருக்கும் பெல்ட் பேப்பரை பாட்டில் உள்ளே மடித்து ஒட்டவும்.

ஒரு திக்கான அட்டையில் படத்தில் காட்டியுள்ள உருவத்தையும், வடிவங்களையும் வரைந்து கத்தரிக்கோலால் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

முகம் வரைந்த உருவத்தை மட்டும் கறுப்புநிற பெல்ட் பேப்பரில் வைத்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஹார்ட் மற்றும் வட்ட வடிவத்தை டியூப்லெக்ஸ் பேப்பரில் பென்சிலால் வரைந்து தனித்தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள அட்டையின் மீது பெவிக்கால் தடவி, பேப்பரில் நறுக்கி வைத்துள்ள உருவம் மற்றும் வடிவங்களையும் ஒட்டி நன்கு காயவிடவும்.

பெல்ட் பேப்பர் சுற்றிய பாட்டிலின் நடுவில் வட்டமாக நறுக்கிய அட்டையை முதலில் பெவிக்கால் தடவி ஒட்டவும். அடுத்து ஹார்ட் வடிவ அட்டையின் கூர்ய முனையில் க்ளூ வைத்து பாட்டிலின் அடியில் ஒட்டி விடவும்.

மஞ்சள்நிறத்தின் இருக்கண்களும், சிவப்புநிறத்தில் வாய்ப்பகுதியும் வரைந்து வெட்டி எடுத்து டெடி முகத்தில் க்ளூ வைத்து ஒட்டவும்.

வட்டம் ஒட்டிய வடிவத்திற்கு நேராக, பாட்டிலின் மேல் ஓரத்தில் டெடி முகத்தின் பாதியளவு வெளியே நீட்டிக் கொண்டிருப்பது போல் க்ளூ வைத்து ஒட்டி நன்கு காயவிடவும்.

ப்ளாஸ்டிக் பாட்டிலில் செய்த டெடி க்ரயான்ஸ் ஹோல்டர் ரெடி.

Comments
ரேவதி, பத்மா
பாட்டில்ல இன்னும் என்ன என்ன செய்து அசத்துவீங்களோ!!! கலக்கலா இருக்கு பொம்மை மாதிரி செய்திருப்பது. நானும் ஊருக்கு போய் செய்யறேன்... இங்க இந்த ஐடம் எல்லாம் ரொம்ப விலை அதிகம். அழகா இருக்குங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
டீம்ம்ம்
வனி சொன்ன மாதிரி... கலக்கல்தான். குறிச்சு வைச்சுக்கறேன். ஸ்கூலுக்கு உதவும்.
- இமா க்றிஸ்
க்யூட்!
அட, ரொம்ப சுலபமா செய்யக்கூடிய வெரி க்ரியேட்டிவ் ஐடியா! க்யூட்டா இருக்கு! வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
வனிதா, இமாம்மா, சுஸ்ரீ
நன்றி வனிதா பாராட்டிற்கும் வாழ்த்திற்கும். ரொம்ப ஈஸி தான் ஊருக்கு போனதும் செய்து பார்த்து சொல்லுங்க. யாழினி ஸ்கூல் போறாங்கல்ல அவங்களுக்கு செய்து கொடுங்க ரொம்ப பிடிக்கும்.
இமாம்மா நிச்சயமா பசங்களுக்கு ஏற்றது தான் எளிதில் செய்துடலாம் பாட்டிலை நறுக்கும் போது தான் கொஞ்சம் கவனம் தேவை. நன்றிம்மா
நன்றி சுஸ்ரீ.
அறுசுவை டீம்
Hi Team! Naan iniki join
Hi Team! Naan iniki join panna pudhiya urupinar. Indha site enaku romba pudichiruku! Neenga mention panna பெல்ட் பேப்பர் and டியூப்லெக்ஸ் பேப்பர் na enna? Enga kadaikum?