3 1/2 மாத குழந்தைக்கு சளி

என் மகனுக்கு தொடர் இருமலாக இருப்பதுடன் மூக்கும் அடைத்து சளி வெளி வருகிறது.மூச்சு விட சிரம படுகிறான்.முணு முணுக்கிறான். எடையும் குறைவாக இருக்கிறான்.பாலும் குடிப்பது இல்லை .என்ன செய்வது என்று தெரியவில்லை. plz யாரவது எனக்கு பதில் சொல்லுங்க

தோழி பயப்படாதீங்க. மருத்துவரை பார்த்தீங்களா?? இல்லன்னா உடனே பாருங்க.

இப்போதைக்கு விக்ஸ் தேச்சு விடுங்க. Nasoclear’னு ஒரு ட்ராப்ஸ் இருக்கும், அதை மூக்கில் 1 துளி விட்டா அடைப்பு நீங்கும், குழந்தை பால் குடிக்க துவங்கும். மூச்சு விட சிரமமா இருந்தா பால் குடிக்க மாட்டாங்க. கர்ப்பூரம் கூட தேங்காய் எண்ணெயில் சேர்த்து சூடு பண்ணி லேசான சூடா இருக்கும்போது (வெது வெதுப்பா) நெஞ்சில் தேச்சு விடுங்க. சளி எடுக்கும். சரி ஆயிடும், பயப்படாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேங்காய் எண்ணெய் கொஞ்சம் சூடு பண்ணி வெது வெதுப்பா இருக்கும் போது நெஞ்சில் நெஞ்சில் தேய்த்து விடுங்கள் nasoclear drop மூக்கில் விடுங்க மெடிக்கல் ஷாப் ல கிடைக்கும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

இரண்டு சொட்டு துளசி சாறுடன் சிறிது தாய்ப்பால் கலந்து குடிக்க வைங்க....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

மிக்க நன்றி வனிதா, தனம் & ராஜி அக்கா

Dr கொடுத்த மருந்துடன் நீங்கள் சொன்னதை செய்யலாமா ...
துளசி இப்பொழுது பயன் படுத்தலாமா? நான் தேங்காய் எண்ணெய்,கற்பூரம் தேய்த்தேன் இப்பொழுது பரவா இல்லை ..
இருமல் மட்டும் அதிகமாக உள்ளது.

துளசி தாரளமா எப்பவுமே கொடுக்கலாம். சாதாரணமா குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணிரில் துளசி போட்டு வைங்க. அதை தினமும் 3 தேக்கரண்டி அளவு கொடுங்க. எதிர்ப்பு சக்தி வரும், அடிக்கடி சளி தொந்தரவு இருக்காது.

தேங்காய் எண்ணெய் கற்பூரமே இருமலுக்கு போதும். முதுகில், நெஞ்சில், மூக்கில், நெற்றியில் எல்லாம் நல்லா தேய்ச்சு, உடம்பை கவர் பண்ணி தூங்க வைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி தோழி, கர்கர் என்று சத்தம் வருகிறது.. மூச்சு விடும் போது சளி சத்தம் கேட்கிறது.. பால் குடிக்க மாட்டேன்கிறான்..
அப்படியே குடிக்க வைத்தாலும் சளியுடன் கூடிய இருமல் வந்ததும் வாய் எடுத்துவிடு கிறான். என்ன செய்வது என்று தெரிய வில்லை... மலம் பச்சை நிறமாக போகிறது... ஆலோசனை கூறுங்களேன் plz

இன்னுமா சளி இருக்கு??? அடடா... டாக்டர் பார்த்தீங்களா??? முதல்ல பாருங்க... மோஷன் கலர் பச்சையா போனா இன்ஃபக்‌ஷன் ஆயிருக்குன்னு சொல்வாங்க. அதனால் தாமதிக்காம உடனே டாக்டரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்